கிளர்ச்சி

மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.
பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) கடைகள், கார்கள், மின்கம்பங்கள் எனக் குறைந்தது 40 இடங்களுக்குத் தாக்குதல்காரர்கள் தீ வைத்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ: செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவர ஹூதி தரப்பின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.
நியூயார்க்: செங்கடல் வட்டாரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் சூடாக்க வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எல்லாத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
யங்கூன்: வடக்கு மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி, ஆளும் ராணுவத்துடன் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அக்குழுக்களில் ஒன்றான டிஎன்எல்ஏ-இன் தலைவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.