You are here

இளையர் முரசு

தேடித் திரட்டியதைப் புத்தகமாக்கிய வீணா

கணவர், பிள்ளைகளுடன் வீணா சுப்பிரமணியம். படம்: வீணா

வில்சன் சைலஸ்

மகளுக்கு ஏற்பட்ட தீராத தோல் தடிப்பு நோய், இல்லத்தரசியான தாயை எழுத்தாளராக மாற்றியது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ‘எக்ஸீமா’ எனும் ஒரு வகை தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டவர் 34 வயது வீணாவின் மகள் மூன்றரை வயது சுஜிதா சேஷன். “லேசாகச் சொரிந்தாலே ரத்தம் கசியத் தொடங்கிவிடும்,” என மகளின் மோசமான நிலை பற்றிப் பகிர்ந்துகொண்ட வீணா சுப்பிரமணியம், பிறப்பு முதல் மகளுக்கு ஏற்பட்ட நோயால் தமது வேலையை விட்டுவிட்டு இல்லதரசி ஆனதாக கூறினார்.

இசைத் துறையில் முன்னேறக் கிடைத்த அங்கீகாரம்

 உள்ளூர் பாடகர் சுதாசினி ராஜேந்திரன்.

முஹம்மது ஃபைரோஸ்

உள்ளூர் இசைத் துறையில் இன்னும் அதிகமான கலை ஞர்கள் முழுநேரமாக இசைப் படைப்புகளை உருவாக்க ஊக்குவித்துவரும் பாடகரும் பாடலாசிரியருமான சுதாசினி ராஜேந்திரனுக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரின் நான்கு அதி காரத்துவ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பாடக்கூடிய வளர்ந்துவரும் இசைக் கலைஞ ர்களையும் பாடகர்களையும் அங்கீகரிக்கும் வகையில் ‘நெக்ஸ்ட்’ இசை விருது நிகழ்ச்சி முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பிரிவில் ‘சிறந்த வளர்ந்து வரும் கலைஞர்’ என்ற விருதை வென்றுள்ளார் இந்த 27 வயது இளையர்.

பலவீனத்தை பலமாக மாற்றி வெற்றி பெற்ற இளையர்

படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்

உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் கணிதப் பாடம்தான் முகம்மது நிஸாமுதீன் அப்துல் ரஹ்மாக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்தது. சாதாரண நிலைத் தேர்வில் அவர் சிறந்த தேர்ச்சி பெறவில்லை. அதனால் விரைவு நிலையில் பயின்ற நிஸாமுதீன், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்குதான் தகுதி பெற்றார். வர்த்தகத் துறை தொடர்பான பட்டயக் கல்வியையே பயிலலாம் என்று விரும்பிய நிஸாமுதீனின் ஆசை நிறைவேறவில்லை. தனியார் துறையில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தது. ஆனால் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்வது குறித்து அவரது தந்தை ஆலோசனை வழங்கினார்.

இல்லம் நோக்கி பதற்றமிக்க பயணம்

சுதாஸகி ராமன்

பரபரப்பான சிங்கப்பூரை விட்டு பசுமையான பாலித் தீவிற்கு மேற் கொள்ளப்பட்ட விடுமுறைப் பயணம் விபரீதத்தில் முடியும் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. இத்தனைக்கும் பாலித் தீவுக்குச் செல்வது இதுவே எனக்கு முதல்முறை. பாலித் தீவின் கிழக்கில் உள்ள அகுங் எரிமலை கடந்த செப் டம்பர் மாதத்திலிருந்தே புகை யைக் கக்கி அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாலிக்குச் செல்லவேண்டாம் என்றும் அப்படியே சென்றால் எரி மலை அருகில் உள்ள பகுதிகளைத் தவிர்க்கவும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

புகை கக்கும் எரிமலைக்கு அருகில் கிடைத்த அரிய அனுபவம்

படம்: மோகனன் பாலகிருஷ்ணன்

வில்சன் சைலஸ்

எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் சொந்த நாட்டிற்குப் பலரும் திரும்பிச் சென்றுகொண்டிருக்கையில் சாகசங்களை அதிகம் விரும்பும் 31 வயது மோகனன் பாலகிருஷணன், பாலித் தீவில் சுற்றுலாவை நண்பர்களுடன் தொடர்கிறார். இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பாலித் தீவில் விடுமுறையைக் கழிக்க சென்ற மோகனனுக்கு இந்தப் பயணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. வரலாற்றில் இடம் பிடித்துள்ள அகுங் எரிமலையின் அண்மைய சீற்றத்தை நேரில் கண்ட அவர், பாலியில் இருந்தவாறு தமது அனுபவத்தைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

பாதைகள் பலவிதம்; முயன்றால் வெற்றி நிச்சயம்

முஹம்மது ஃபைரோஸ்

தொடக்கம் எவ்வாறாக இருந்தா லும் கடந்து செல்லும் பாதையில் ஒருமுகத்தோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி கிட்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கின்றனர் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் இருவர். வழக்கநிலை (தொழில்நுட்பம்) மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியான கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்று ‘ஐஎஸ்சி’ எனப்படும் தொழில்நுட்பக் கல்விக் கழக திறன் சான்றிதழைக் கடந்த ஆண்டு பெற்ற சரண்யா ராமநாதன், இயந்திரப் பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்களில் ஒருவர்.

Pages