You are here

இளையர் முரசு

‘புரோ போனோ’ விருது

படம்: பெரித்தா ஹரியான்

‘ஷரியா’ சட்டம் என்னும் இஸ்லாமிய சட்டத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்களின் தனித்துவ உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களால் தொடங்கப்பட்ட ஒரு குழு முயற்சிக்கு ‘ப்ரோ போனோ’ விருது பெற்றுள்ளார் பிரபு தேவராஜ். இந்தக் குழு முயற்சிக்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழக ‘புரோ போனோ’ குழு, இஸ்லாமிய சங்கம், ஐஆர்பி என்னும் சட்ட நிறுவனம் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நடத்திய 25வது ‘புரோ போனோ’ விருது நிகழ்ச்சியில் அந்த விருதைப் பெற்றார் திரு பிரபு.

தமிழ்மொழி விழாவில் முதல்முறையாக தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் அரங்கேற்றப்பட்டுள்ள நாடகம்

‘செங்குழல் சீவிய பத்தினித் தீ’ என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாடகம், இசைக்காணொளிப் போட்டி என்று மூன்று விதமான அங்கங்களோடு அரங்கேறியது ‘பார்வை 2017’.

பார்வையாளர்கள் சுற்று ஒன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு விறுவிறுப்பாக நடைபெற்றது இவ்வாண்டின் சிறப்பு. சங்கத் தமிழ்ப் புழக்கத்தையும் தமிழ் இலக்கியங்களையும் பற்றி தொழில்நுட்பத்தின் துணையோடு இளையர்களுக்காக இளையர்களே படைத்து வரும் பார்வை நிகழ்ச் சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

பற்களின் சுத்தம் பேணுவதில் பின்தங்கி இருக்கும் இளையர்கள்

பற்களைச் சரியாகத் துலக்காவிட் டால் வாய்க்குள் தண்ணீரோ அல்லது உணவோ இறங்காது. வாயைத் திறந்து மற்றவர் களிடம் பேசுவதற்குக்கூட நாம் தயக்கம் கொள்வோம். பற்களுக்கிடையே அழுக்குகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, அதனால் பல உடல்நல பிரச் சினைகளும் ஏற்படுகின்றன. தினமும் இரண்டு வேளை பற்களைத் துலக்குவதன் அவ சியத்தை நாம் அறிந்திருந்தாலும் பற்களைத் துலக்குவதைவிட முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கம், நூலைக் கொண்டு பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வது. பற்களைத் துலக்கும்போது நாம் பற்களை மேலோட்டமாகத் தான் சுத்தம் செய்கிறோம்.

வண்ணங்களிலும் வடிவங்களிலும் மின்னும் கலாசாரம்

படம்: ஆர்ஜிஎஸ்

சிங்கப்பூர் பல இனமக்கள் ஒன்றுகூடி வாழும் நாடாகும். ஆகையால், அனைத்து இனத் தவரையும் மதிக்கக் கற்றுக் கொண்டால்தான் நம்மால் ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இதற்கு நாம் மற்றவர்களுடைய கலாசாரத்தை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். எங்கள் பள்ளியின் தாய் மொழிகள் துறையும் அழகியல் துறையும் இணைந்து, கலாசாரம் நிறைந்த இடங்களான லிட்டில் இந்தியா ஆர்க்கேட், தேக்கா ஈரச்சந்தை, சைனா டவுன் காம்ப்ளெக்ஸ், கேலாங் செராய் ஆகிய இடங்களுக்கு ஒரு கற்றல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் பயணத்தில் உயர்நிலை மூன்றில் பயிலும் அனைவரும் ஈடுபட்டோம்.

Pages