You are here

இளையர் முரசு

மொழிசார்ந்த பார்வையை மேம்படுத்திய பயிலரங்கு

படம்: திமத்தி டேவிட்

நாடகம் வழியாக தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த பார்வையை மாணவர்களிடையே வளர்க்க வும் அவர்களின் தன்னம் பிக்கையை ஊக்குவிக்கவும் ‘மேஜிக் லென்டன்’ அமைப்பு நாடகப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த மூன்று மணி நேரப் பயிலரங்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சென்ற மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. மூளையையும் உடலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் பயிலரங்கின் ஆரம்பத்தில் நடத்தப்பட்டன. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று தேவையான அளவுக்கு நடிப்பது பற்றி மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார் தமிழக நடிகர் இளங்கோ குமாரவேல்.

வித்தியாசமான அனுபவம் வழங்கிய இசை நிகழ்ச்சி

படம்: திமத்தி டேவிட், செய்தி: சுதாஸகி ராமன்

கண்ணாடிச் சுவர்களுடைய பெரிய அறைக்குள் திரண்ட இளையர் கூட்டம்; நேரடியாக இசையைத் தயாரித்த மூன்று ‘டீஜேக்கள்’; ஹெட்ஃபோன்கள் எனப்படும் காது ஒலிப்பான்களின் உதவி யுடன், அருகில் இருப்போருக்குத் தொந்தரவின்றி, தங்களுக்குப் பிடித்தமான இசையைத் தேர்ந் தெடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர் பங்கேற்பாளர்கள். ‘ஐ லைட் மரினா பே’ ஒளி கலைக் கண்காட்சித் தொகுப்பின் அங்கமாக அமைந்த ‘சைலண்ட் டிஸ்கோ’ இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் செவிகளுக் கும் கண்களுக்கும் நிகழ்ச்சிகள் விருந்தாய் அமைந்தன. மரினா பே வட்டாரத்தில் இம்மாத வார இறுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வளங்களைப் பகிர்ந்து செயல்திறன் மேம்பாடு

கார்த்திகேயன் சண்முகம்

நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த தீர்வுகள் உருவாக்குவதுடன் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தையும் வழங்குகிறது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்படும் ‘சிஓஐ-எஸ்சிஎம்’ எனப்படும் புத்தாக்க, விநியோகத் தொடர்பு நிர்வாக நிலையம். நிறுவனங்கள் தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதுடன் ஒன்றிணைந்து நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டு பொதுவான சவால்களைச் சமாளிக்கும் விதத்தில் 2013ஆம் ஆண்டிலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கி வருகிறது இந்த நிலையம்.

கல்வி, திறன் மேம்பாட்டுக்கு உதவிக்கரம்

சமைத்த உணவை அலங்கரிக்கும் கணபதி தனபாலன்.

கணபதியின் பெற்றோர் இருவரும் வீட்டில் மிக சுவையான உணவை சமைத்துத் தருவார்கள். குறிப்பாக, தாயார் சமைக்கும் பிரியாணியின் மீது கணபதிக்கு மிகவும் விருப்பம் என்பதால் தாயாரைப் போல் தானும் சுவையான உணவைச் சமைக்கவேண்டும் என்று அவரும் விரும்பினார். முதன்முதலாக ஆட்டிறைச்சி பிரியாணி செய்த அவரது சமையல் பயணம் முக்கியமான இலக்குடன் தொடர்கிறது. சமையல் திறனை வளர்த்துக்கொள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சமையல் படிப்பை மேற்கொண்டார் கணபதி தனபாலன், 22.

மாணவர் படைப்பில் உருவாகும் ‘மோகா’

‘மோகா’ படைப்பில் ஒரு காட்சிக்கான ஒத்திகையில் மாணவர்கள். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்

உலகில் நிலவி வரும் போர், சண்டை சச்சரவுகள் அதனி டையே வாழ்ந்து வரும் காதல், மனிதாபிமானம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டது தான் ‘மோகா’. நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் இவ்வாண்டு படைக்கும் கலை இரவுக் கொண்டாட்டம் ‘மோகா 2017’. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ‘மோகா’ வின் கருப்பொருள் ‘மோதலும் காதலும்’. அன்றாட வாழ்வில் காதலின் தாக்கம், காதல் இல்லையெனில் அதனால் ஏற்படும் மோதல்கள் போன்றவற்றை ஆராய முனைந்துள்ளது ‘மோகா’ குழு.

‘மோகா’ படைப்பில் ஒரு காட்சிக்கான ஒத்திகையில் மாணவர்கள். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்

Pages