You are here

தலைப்புச் செய்தி

பிரதமர் லீ: மாணவர்களுக்கு ஆதரவளிப்பது அவசியம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உதவி தேவைப்படும், குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையா ளம் கண்டு, தொடக்கத்திலேயே ஆதரவு வழங்கியது அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சமூக, பொருளியல் அளவில் கடைசி கால் பகுதியில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களில் ஏறக் குறைய பாதிப் பேர், செயல்பாடு களைப் பொறுத்தமட்டில் அனைத் துலக அளவில் முதல் கால் பங்கில் இடம்பெற்றுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார். டௌன்ஸ்வில் தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியின்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஊழியர் தங்கும் விடுதியில் வேலை பயிற்சி நிலையங்கள்

ஜூரோங் தீவுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள ‘ஆஸ்ப்ரி வெஸ்ட்லைட்’ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் எண்ணெய், எரிவாயு, ரசாயன தொழில்துறைகளுக்கான வேலைப் பயிற்சி நிலையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 7,900 ஊழியர்கள் தங்கக்கூடிய இவ்விடுதியில் உள்ள இந்த புதிய பயிற்சி நிலையங்கள் ஊழியர் களுக்கு உற்சாகம் அளிக்கின்றன. இந்த தங்கும் விடுதியைத் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று திறந்து வைத்தார். படத்தில் ஆஸ்ப்ரி பயிற்சி நிலையத்தில் ஊழியர்களுடன் திரு தர்மன் உரையாடுகிறார். படம்: தி நியூ பேப்பர்

வார இறுதி நாட்களில் ரயில் நிலையங்களில் அதிக ஊழியர்கள்

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி ரயில்கள் இரண்டாவது மாதமாக வார இறுதி நாட்களில் குறைவான நேரமே செயல்படும். இந்த ஏற்பாடு இன்று இரவு முதல் தொடங்குகிறது. இதனை யொட்டி எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்குகிறது. நிலையங்களில் சுமார் 300 ஊழியர்கள் முன்பு பணியாற்றி னர். இப்போது 600 பேர் பணி யாற்றுவர். இந்த ஜனவரி மாதத் தில் கிழக்கு-மேற்கு வழித்தடத் தில் பாய லேபார் முதல் பாசிர் ரிஸ் வரை சாங்கி விமானநிலை யம், எக்ஸ்போ ரயில் நிலையங்கள் ஆகியவற்றுடன் மொத்தம் 10 எம்ஆர்டி நிலையங்கள் வார இறுதி நாட்களில் குறைவான நேரமே செயல்படும். இரண்டு ஞாயிற்றுக்கிழமை களில் முழு நேரம் அவை மூடப் படும்.

மலேசிய சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்கள் மரணம்

மலேசிய நகரான போர்ட் டிக்சனில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில் நான்கு சிங் கப்பூரர்கள் மாண்டனர். ஜாலான் லுகுட் செப்பாங்கில் பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஒரு லாரி, ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அந்த கார்களில் ஒன்றான ஹோண்டா ஸ்ட்ரீம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. டிப்பர் லாரி ஒன்றால் அந்த கார் மோச மாக நசுக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

செந்தோசா ரிசோர்ட்சில் கூரை சரிந்ததில் நால்வர் காயம்

செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்டு உல்லாசத்தளத்தில் செவ்வாய்க் கிழமை காலை உட்கூரை சரிந்து விழுந்ததில் நால்வர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காலை சுமார் பத்து மணியளவில் நடந்தது. சம்பவம் பற்றி காலை 10.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உல்லாசத்தளத்தின் சூதாட்டக் கூடத் தின், இடைநிலை மாடிப் பகுதிக்கு இட்டுச்செல்லும் பகுதி யின் கூரைப் பகுதி சரிந்து விழுந் ததாக செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்டு உல்லாசத் தளத் தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

வண்ணமாய் சிரித்து வரவேற்ற வாணவேடிக்கை

2018 புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூரின் மரினா பேயில் திரண்ட மாபெரும் கூட்டம் மழையையும் பொருட்படுத்தாது மகிழ்வோடு காத்திருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ‘கவுண்ட் டவுன்’ முடிந்து புத்தாண்டு பிறந்ததை உணர்த்தும் விதமாக பலவண்ண வாணவேடிக்கைகள் வான்வெளியை அலங்கரித்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். கொட்டும் மழையில் நனைந்தவாறும் குடைகளை விரித்தவாறும் பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வான் மழையுடன் புத்தாண்டு வாழ்த்து மழை

முஹம்மது ஃபைரோஸ்

சிராங்கூன் சாலையில் அமைந் துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு பிரார்த்தனை மேற்கொள்ள திருமதி மாலினி செந்தில்ராஜ் வாராவாரம் தவறா மல் வந்துவிடுவது வழக்கம். புத்தாண்டை முன்னிட்டு நேற்று இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள தமது கணவர், 3 வயது மகன் மிதிலேஷ்வர் ஆகி யோருடன் நண்பகல் வாக்கில் வந்திருந்தார் 30 வயது திருமதி மாலினி. உலக அமைதிக்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் இன, சமய ஒற்றுமைக்கும் குடும்ப உறுப்பினர் களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் கடவுளிடம் தாம் வேண்டியதாக அவர் குறிப்பிட்டார்.

3.5% பொருளியல் வளர்ச்சி

பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் நல்ல தொரு தகவலை வெளிப்படுத்தி உள்ளார். சிங்கப்பூரின் பொருளி யல் கடந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட சிறப்பாக 3.5 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டது என்பதே அத்தகவல். நாட்டின் நீண்டகால சவாலாக விளங்கி வந்த நமது உற்பத்தித்திறன் புத்தெழுச்சி கண் டது பொருளியல் வளர்ச்சியின் முக்கிய பங்காக அமைந்துவிட்டது என்றார் அவர். இந்த வளர்ச்சி, ஆண்டின் தொடக்கத்தில் முன்னுரைக்கப் பட்டதைக் காட்டிலும் இருமடங்கு. கடந்த பத்தாண்டுகளில் அர சாங்கம் எவ்வளவோ முயன்றும் சிங்கப்பூரின் உற்பத்தித்திறன் போதுமான வளர்ச்சியின்றி நீடித் தது.

‘வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள் தொடரும்’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அகலமான நடைபாதைகள், சக்கர நாற்காலிகள், நடமாட்டக் கருவிக ளுக்கான சரிவுப்பாதைகள் என முதியோருக்குத் தேவையான வசதிகளுடன் புதுப்பிப்புப் பணிக ளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட் டுள்ளது புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம். செப்டம்பரில் மூடப்பட்ட இச் சந்தை இரண்டு மாதப் புதுப் பிப்புப் பணிகளுக்குப் பிறகு நவம் பர் மாதத்தில் திறக்கப்பட்டாலும் நேற்று அதிகாரபூர்வ திறப்பு விழா வைக் கொண்டாடியது.

ஆராய்ச்சி, புத்தாக்கச் செயல்களில் அதிகமான பிள்ளைகள் ஈடுபடவேண்டும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை ஒரு மணி நேரம் 20 நிமி டங்களுக்கு தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி மாணவிகள் தங் களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடலாம். உதாரணத்துக்கு, நிகழ்ச்சி ஒத்திகை, பாடத் திட்டங்கள், சக மாணவிகளுடன் கலந்துரையாட லில் ஈடுபடுதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடலாம். அதில் ஆசிரியர்கள் சம்பந்தப்படக்கூடாது என்பது பள்ளி விதிமுறை.

Pages