You are here

தலைப்புச் செய்தி

கவிழ்ந்த கனரக வாகனம்; போக்குவரத்து விளக்கு சேதம்

ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஒரு சாலையில் கனரக வாகனம் ஒன்று நேற்று காலை கவிழ்ந்தது. இதன் விளைவாக அருகில் இருந்த போக்குவரத்து விளக்கு சேதமடைந்தது. சாலையில் இடிபாடுகள் சிதறிக் கிடந்தன. இந்த விபத்து ஜாலான் புரோவில் காலை 8.40 மணிக்கு நிகழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப் படுகிறது. சாலைக்குள் கனரக வாகனம் வளைந்துகொண்டிருந்தபோது அது கவிழ்ந்ததாக அறியப் படுகிறது.

ஜூரோங் வட்டாரத்தில் கவிழ்ந்து கிடந்த கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் தண்ணீர்க் குழாய் வெடிப்பு சீர்செய்யப்பட்டது

கிறிஸ்மஸ் தினத்தன்று காலை 5.30 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 4ல் தண்ணீர்க் குழாய் வெடித்ததில், மூன்று மீட்டர் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது. குழாய் நீர் சாலையோரத்தில் வெளியேறிய காரணத்தால் பிடோக் ரிசர்வாயர் சாலையை நோக்கிச் செல்லும் சாலை, சுன்யுவான் தொடக்கப் பள்ளி அருகே இரண்டு தடச் சாலையின் ஒரு தடம் மட்டுமே பயன்பாட்டிற்கு செயல்பட முடிந் தது. தண்ணீர் உணர்கருவி செயல் முறை மூலம் தண்ணீர்க் குழாய் உடைந்து நீர் கசிவு ஏற்பட்டது காலை 5.30 மணியளவில் அறியப் பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஊழியர்களை அனுப்பி வைத்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கான கடைசிநேர அழைப்பு இனி இராது

சாங்கி விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணி கள் அனைவரும் இனி தங்கள் நேரத்தைத் தாங்களே கவனித்துக் கொள்ளவேண்டும். ஜனவரி மாதம் 1ஆம் தேதியி லிருந்து விமானத்தின் கடைசிநேர அழைப்புகள் இனி இருக்காது. குறிப்பிட்ட பயணிகளுக்கான அழைப்புகளும் இனி விமான சேவைகளால் செய்யப்படாது. இந்தப் புதிய நடைமுறையால் மற்ற முக்கிய அறிவிப்புகள் செய் யப்படும்போது பயணிகளும் வரு கையாளர்களும் அவற்றைக் கூர்ந்து கவனிக்கமுடியும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

லாரி மோதிய விபத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

சிங்கப்பூரில் ஜாலான் பூரோ நோக்கிச் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் மேம்பாலச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 33 வயது இந் திய நாட்டு கட்டுமான ஊழியர் மாண்டார். இரண்டு லாரிகள், ஒரு சிறிய லாரி சம்பந்தப்பட்ட அவ்விபத்து குறித்து தங்களுக்கு வெள்ளிக் கிழமை மாலை 4.49 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் போலி சார் கூறினர். சாலையில் அசைவற்றுக் கிடக் கும் ஆடவர் ஒருவரை துணை மருத்துவ ஊழியர்கள் கவ னித்துக்கொண்டிருக்கும் படம் Safety Watch-SG ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.

துல்லிய பயிற்சியில் கடலோரக் காவல் படை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிக ரித்துள்ள நிலையில், கடற்துறைச் சவால்களை எதிர்கொள்ளும் வித மாக சிங்கப்பூர் போலிஸ் படையின் கடலோரக் காவல் படையினர் யதார்த்த சூழலுடன் கூடிய பயிற் சிக்கும் நவீன சாதனங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பிரானி தீவில் இருக்கும் தங் களது தலைமையகத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் செய்தியா ளர்கள் முன் கடலோரக் காவல் படையினர் (பிசிஜி) துல்லியப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கூட்டத்தினுள் கார் புகுந்து 19 பேர் காயம்; இருவர் கைது

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் கூட்டத் திற்குள் கார் புகுந்ததில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல மான ஃபிளிண்டர்ஸ், எலிசபெத் ஸ்திரீட் களின் சந்திப்பில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வெள்ளை நிற சுசுகி கார் ஒன்று மோதியதாக போலிசார் தெரிவித்தார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அந்த காரின் ஓட்டுநரையும் இன்னோர் ஆடவரையும் போலிசார் கைது செய்தனர்.

வா‌ஷிங்டன்: ரயில் தடம் புரண்டு மூவர் மரணம்

அமெரிக்காவின் வா‌ஷிங்டன் மாநிலத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது மூவர் உயிரிழந் தனர்; கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந் தனர். சியாட்டலில் இருந்து போர்ட்லேண்டை நோக்கிச் சென்ற அந்த அம்ட்ராக் ரயில், சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 14 பெட்டிகளில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்குள்ளான ரயிலில் 80 பயணிகள் உட்பட மொத்தம் 86 பேர் இருந்ததாக அம்ட்ராக் நிறுவனம் தெரிவித்தது.

கேலாங் கால்வாயில் பாய்ந்த கார்; ஓட்டுநர் ஓட்டம்

படம்: ‌ஷின் மின்

கேலாங் அருகே நிகழ்ந்த விபத்தில் கால்வாயில் பாய்ந்து கார் நசுங்கிய தால் ஓட்டுநர் அதே இடத்தில் காரை கைவிட்டுவிட்டு ஓடி விட்டார். சிம்ஸ் வேயில் மவுண்ட்பேட் டன் ரோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் ஞாயிறு இரவு 8.50 மணியளவில் விபத்து நிகழ்ந்தது என்று போலிஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடைய வில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் சொன்னார். கேலாங் லோரோங் 6ல் நிகழ்ந்த விபத்தின் புகைப்படத்தில் வெள் ளை நிறக்காரின் முன்பக்கம் நசுங் கியிருப்பதைக் காண முடிந்தது.

இந்தோனீசியாவின் ஜாவாவில் நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனீசியத் தீவான ஜாவாவை நேற்று நில நடுக்கம் உலுக்கியது. 6.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக் கத்தில் மூவர் உயிரிழந்த னர், ஏராளமானோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கூறப் படுகிறது. கட்டடம் இடிந்து விழுந்ததில் பெக்கலொங்கான் நகரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரும் சியாமிஸ் நகரில் 62 வயது ஆடவர் ஒருவரும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யோக்யகார்த்தா நகரில் 34 வயது பெண் ஒருவர், வீடு இடிந்து விழுந்ததில் சிக்குண்டு மாண்டார். 43 கட்டடங்கள் மிகவும் மோச மான நிலையில் சேதமடைந்து இடிந்து தரைமட்டமாகியதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கை குழுக்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சிகளை முடுக்கிவிட, சிங்கப்பூரின் சில முக்கிய இடங் களில் துரித நடவடிக்கை காவல் துறைக் குழுக்களை சிங்கப்பூர் காவல்துறை அறிமுகப்படுத்தியுள் ளது. ஆண்டிறுதி விழாக்காலத்தின் போது பாதுகாப்பை வலுப்படுத்த, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஆர்ச்சர்ட், மரினா பே வட்டாரங்களில் டிசம்பர் 1 முதல் துரித நடவடிக்கை குழுக்கள் காவற்பணி ஆற்றி வருகின்றன. சிங்கப்பூர் காவல்துறையின் பாதுகாப்புக் காவல் பிரிவின் (Procom) ஒரு பகுதியான இக் குழுக்கள், ஏற்கெனவே நடப்பி லுள்ள தரைப்பணி படை, அவசர நடவடிக்கைக் குழு ஆகியவற்றுக் குத் துணையாகச் செயற்படும்.

Pages