You are here

தலைப்புச் செய்தி

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு

படம்: ஜெயபிரகாஷ் ஜோகீ போஜன்.

நேஷனல் ஜியாகிரஃபிக்’ புகைப் பட போட்டியில் 11,000 படைப்பு களைப் பின்னுக்குத் தள்ளி சிங் கப்பூர் புகைப்படக்காரர் வாகை சூடியுள்ளார். ஜெயபிரகாஷ் ஜோகீ போஜன் என்னும் அவர், இந்த ஆண்டின் சிறந்த ‘நேஷ னல் ஜியாகிரஃபிக் நேச்சர் ஃபோட்டோகிராஃபர்’ விருதை வென்றுள்ளார். இதனை நேஷ னல் ஜியாகிரஃபிக் சஞ்சிகை தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. ஆற்று நீரில் நிற்கும் ஓராங் ஊத்தான் எனப்படும் மனித குரங்கை படம் எடுத்த விதமே அவர் விருதை வெல்வதற்குக் காரணம். ‘ஃபேஸ் டு ஃபேஸ் இன் எ ரிவர் இன் போர்னியோ’ எனத் தலைப்பிட்டு அப்படத்தை அவர் அனுப்பி இருந்தார்.

அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: பங்ளாதேஷ் ஆடவர் கைது

படம்: நியூயார்க் டைம்ஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் குழாய் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்த முயன்ற பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை அமெரிக்க அதி காரிகள் கைது செய்துள்ளனர். அகாயத் உல்லா என்ற அந்த 27 வயது ஆடவரின் குடும்ப உறுப்பினர்களையும் அவனுடைய கூட்டாளிகளையும் பங்ளாதேஷ் போலிசார் தேடி வருகின்றனர். “உல்லாவின் குடும்பத்தாரை போலிஸ் தேடி வருகிறது. ஆனால் இதுவரையிலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று சிட்டகாங் வட்டார காவல் துறை அதிகாரி அபுல் கைர் நதீம் கூறினார்.

பேருந்துச் சேவை விரிவாக்க ஐந்தாண்டு திட்டம் நிறைவு

அரசாங்க நிதிபெற்ற 1,000 பேருந்துகளை சிங்கப்பூர் சாலை களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த, $1.1 பில்லியன் செலவிலான ஐந்தாண்டு கால பேருந்துச் சேவை விரிவாக்கத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்ட 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 218 பேருந்துச் சேவைகள் மேம்பாடு கண்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாடிப் பேருந்துகளை அறிமுகம் செய்தல், பேருந்துச் சேவைகளின் பயண எண்ணிக்கையை அதி கரிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த மேம்பாடு அடையப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூர்=ஈப்போ பேருந்து விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து சென்ற பேருந்து ஒன்று மலேசியாவின் பேராக் மாநிலத்தில் நேற்று விபத்தில் சிக்கியது. கோப்பேங் அருகே வடக்கு =தெற்கு விரைவுச் சாலையில் லாரியுடன் அப்பேருந்து மோதி யதில் ஒருவர் மாண்டார், 13 பேர் காயமுற்றனர். அந்த ஈரடுக்குப் பேருந்து லாரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது. அந்த நேரத் தில் பேருந்தின் பின்னால் வந்து கொண்டு இருந்த கொள்கலன் லாரி தனது வேகத்தைக் கட்டுப் படுத்த இயலாமல் பேருந்தின் பின்னால் மோதியது. காயமுற்றோரில் 12 பேர் பேருந்து பயணிகள்.

ரயில் சுரங்கப்பாதையில் வெள்ளத்தை தடுக்க குழு

ரயில் சுரங்கப்பாதைகளில் வெள் ளம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் நிரந்தரக் குழு ஒன்றை நிலப்போக்குவரத்து ஆணையமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் அமைத்திருக்கின்றன. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று இதனை அறிவித்தார். அடிப்படை வசதி ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ, அடிப்படை வசதி பராமரிப்பு பற்றிய கூட்டு கருத் தரங்கில் நேற்று உரையாற்றினார். “புதிய குழு நம்முடைய தலை முறைக்கு அப்பாலும் நடை முறைக்கு வரக்கூடிய நீண்டகால நடவடிக்கைகளை ஆராயும். அவற்றை அமல்படுத்தும்,” என்று தெரிவித்தார்.

மின்சார கார் பகிர்வு தொடக்கம்

பல ஆண்டு காலம் திட்டமிட்டு, பற்பல தாமதங்களுக்குப் பிறகு, பொது கார் பகிர்வுத் திட்டத்திற் கான மின்சார வாகனங்கள் டிசம்பர் 12ம் தேதி முதல் சாலைகளில் ஓடவிருக்கின்றன. தொடக்கமாக, மொத்தம் 80 வாகனங்கள் பகிர்வுக்குக் கிடைக்கும் என இச்சேவையை வழங்கும் ‘புளூஎஸ்ஜி’ நிறுவனம் தெரிவித்தது. இரு வகையான சந்தா திட்டங்கள் நடப்பிலிருக்கும் என அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. அவற்றில் ஒன்றான வருடாந்திர தவணைக் கட்டண உறுப்பினர் திட்டத்திற்கு மாதத்திற்கு $15 கட்டணம் விதிக்கப்படும். மற்றொரு திட்டமான வாராந்தர உறுப்பினர் திட்டத்திற்குத் தொடர் கட்டணம் எதுவும் கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள் www.

தாய்லாந்து: வெள்ளத்தால் பிளந்த சாலைக்குள் விழுந்த வாகனம்

தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள சொங்க்லா மாநிலத்தின் தெஃபா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் விரைவுச்சாலை ஒன்றில் பெரிய பிளவு ஏற்பட்டது. அப்போது அச்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று அந்த சாலைப் பிளவில் விழுந்து விபத்துக்குள்ளானது. தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் எட்டு மாநிலங்- களில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை ஆறு பேர் மாண்டுள்ளனர். படம்: அப்துல்லா லா வாங்க்னி

வெள்ள அபாயத்தை தடுக்க $500மி. திட்டம்

உலகப் பருவநிலை ஒரு நிலையிலி ருந்து வேறோர் நிலைக்கு வழக்கத் தைவிட அதிகமாக மாறிவரும் சூழலில் சிங்கப்பூரிலுள்ள வடி கால், கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளுக்காக பொதுப் பயனீட் டுக் கழகம் அடுத்த இரண்டிலி ருந்து மூன்று ஆண்டுகளுக்கு $500 மில்லியன் செலவிட உள் ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ள கால்வாய் மேம்பாட்டுப் பணிகளையும் கணக்கில் கொள் ளும்போது இதற்காக செலவிடப் படும் தொகை $1.2 பில்லியனை எட்டும்.

சிங்கப்பூர்-இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சி

படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு

இந்தியா சென்றுள்ள சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இந்திய ஆகாயப்படையின் ‘வைஸ் மார்ஷல்’ ஏ.பி.சிங்குடன் சிங்கப்பூர்=இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சியைப் பார் வையிடச் சென்றார். மேற்கு வங்காளத் தின் கலைகுண்டா விமானத் தளத்தில் அப்பயிற்சி நடை பெறுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் இந்தக் கூட்டுப் பயிற்சி இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று டாக்டர் இங் நம் பிக்கை தெரிவித்தார். படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு

Pages