You are here

தலைப்புச் செய்தி

ஆற்றில் குப்பை சேராதிருக்க இன்னமும் நாம் கற்கவேண்டும்

சிங்கப்பூர் ஆற்றைத் தூய்மைப் படுத்தும் இயக்கம் 40 ஆண்டு களுக்கு முன் தொடங்கியது. என்றாலும் சிங்கப்பூரர்கள் கண்ட படி குப்பைகளைப் போட்டு ஆற்றை மாசுபடுத்தும் காரியங் களைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இன்னமும் கற்றுக்கொள்ளவேண்டி இருக் கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். நிலத்தில் கண்டபடி குப்பை களைச் சேர்ப்பதால் அவை கடைசியில் ஆற்றையும் வடிகால் களையும் சேர்வதை அவர் சுட்டிக் காட்டினார். “ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பலத்த பதிலடி கொடுப்போம்: எகிப்து அதிபர் சூளுரை

படம்: ஏஎஃப்பி

மாநிலத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்=சிசி சூளுரைத்துள்ளார். அந்த மாநிலத் தில் உள்ள ரவ்டா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்களில் 235 பேர் மாண்டனர். அந்த மரணத்தைத் தொடர்ந்து அரசாங்கம் அறிவித்த மூன்று நாள் துக்கம் நேற்று தொடங்கிய வேளையில், அதிபர் அப்துல் ஃபட்டா தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.

இந்தியா: ரயில் தடம் புரண்டு மூவர் மரணம்

படம்: ஆல் இந்தியா ரேடியோ ஃபேஸ்புக்

இந்தியாவின் கோவா மாநிலம், வாஸ்கோடகாமாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா நோக்கிச் சென்ற விரைவு ரயில், உத்தரப் பிரதேச மாநிலம், மாணிக்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர். வாஸ்கோடகாமா = பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரி வித்தார். உயிரிழந்தோரில் ஆறு வயது சிறுவனும் அவனுடைய தந்தையும் அடங்குவர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

தமிழக அரசு தரப்புக்கு இரட்டை இலை; தினகரன் மேல்முறையீடு

 படம்: சதீஷ்

எக்கச்சக்கமான ஆவணங்கள் பரிசீலனை, தொடர் மனுக்கள், கால அவகாச கோரிக்கைகள் என நீண்ட போராட்டத்துக்குப் பின், பல்வேறு கட்டங்களைத் தாண்டி தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு அதிமுகவின் கட்சிச் சின்னமான இரட்டை இலையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் நடை பெற்ற இரட்டை இலைச் சின்னம் தொடர்பான நீண்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வெளியானது. அமைப்பு ரீதியாகவும், அமைச் சரவையிலும் முதல்வர் பழனிசாமி அணிக்கே அதிக ஆதரவு இருப் பதால் சின்னத்தை அத்தரப்புக்கு வழங்கியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரே கூரையின் கீழ் 25 தொழிற்சங்கங்கள்,சபைகள்

படம்: சாவ் பாவ்

நிறுவனங்கள் விரிவடையவும் வெளிநாடுகளில் தொழிலில் ஈடு பட அவற்றுக்கு உதவவும் முன்னெ டுக்கப்படும் தேசிய முயற்சியில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங் கள் இன்னும் அணுக்கமாகச் செயலாற்ற இணங்கியுள்ளன. இதற்கு ஏதுவாக ஜூரோங்கில் தொழிற்சங்க மையம் என்ற ஒரு புதுப்பிக்கப்பட்ட இடம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மையத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்த மையத்தில் உள்ள வசதி களைப் பல சங்கங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.

ஜூ கூன் நிலைய ரயில் மோதல்: சமிக்ஞை சாதன நிறுவனம் நன்கு செயல்பட்டிருக்கலாம்

கிழக்கு-மேற்கு ரயில் வழித் தடத்திற்கான புதிய சமிக்ஞை முறையை வழங்கும் நிறுவனம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கலாம் என்று போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கருத்து தெரி வித்தார். கிழக்கு=மேற்கு ரயில் தடத் தில் சென்ற வாரம் ஒரு ரயில் மோதல் சம்பவம் நிகழ்ந்தது. அந்த வழித்தடத்தில் ‘துவாஸ் மேற்கு விரிவாக்கம்’ என்ற ஒரு சிறு பகுதியில் தனது முறையைச் சோதித்துப் பார்க்கும் சவால்மிக்க பொறுப்பு பிரான்ஸ் நாட்டின் ‘தாலஸ்’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டது. அதே நேரத்தில் அந்த வழித் தடத்தின் பெரும் பகுதி பழைய முறையிலேயே செயல்படுகிறது.

கட்டடத்தை முற்றுகையிட்ட ராணுவ வீரர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், இந்தோனீசியா இருதரப்பு உறவுகளின் ஐம்பதாம் ஆண்டைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். சிங்கப்பூரில் நேற்று அவர்கள் ஒன்றுதிரண்டு கட்டடம் ஒன்றை முற்றுகையிடுவதுபோல பயிற்சி செய்தனர். இது இருநாடுகளுக்கு இடையிலான 29வது பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போயஸ் தோட்டத்தில் சோதனை: தடயங்கள் சிக்கின

படம்: சதீஷ்

சசிகலா உறவினர்களின் வீடு கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத் திய ஒருசில நாட்களுக்குள் அமரர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட வேதா இல்லத் தில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு வந்த கடி தங்கள், ஒரு மடிக்கணினி, ஒரு கணினி, சில ‘பென் டிரைவ்’களை எடுத்துச் சென்றதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களின் அடிப் படையில் அடுத்தகட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனீசியாவில் கனமழை; எந்நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை

இந்தோனீசியாவின் சில பகுதிகளில் நேற்று பிற் பகலில் பெருமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை உணர்ந்த போகோர் பேரிடர் நிர்வாக முகவை வாகனமோட்டிகளுக்கு ஓர் எச்சரிக் கையை விடுத்துள்ளது. மேற்கு ஜாவா, போகோர், பங்காங் சுற்றுலாப் பகுதி போன்றவற்றில் பயணம் செய்யும் வாகன மோட்டிகள் மலைப் பாதைகளில் செல்லும்போது அதிக கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு அந்த முகவை தெரிவித்துள்ளது.

Pages