You are here

தலைப்புச் செய்தி

ஜூ கூன் விபத்து: மேலும் எழுவருக்கு சிகிச்சை

2017-11-17 06:10:00 +0800

ஜூ கூன் நிலையத்தில் மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் நேற்று மாலை வெளியிட்ட கூட்டறிக்கை தெரி விக்கிறது. அந்த விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண் ணிக்கை முன்பு 29 என்று கூறப்பட்டது.

ஆசியான் தலைமை நாடான சிங்கப்பூரின் முன்னுரிமைகள்

ஆசியான் அமைப்பின் புதிய தலைமை நாடாகப் பொறுப்பேற் றிருக்கும் சிங்கப்பூர், அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் பல்வேறு அம்சங்களில் ஒரு குழு வாக முன்னேற்றம் காண்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த வட்டாரத்தில் இணையப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு, மின்னிலக்கத் தொழில்நுட்பம், பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டால் ஆசியான் நாட்டு மக்கள் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுதல் போன்றவை சிங்கப்பூரின் முன்னுரிமை களாக இருக்கும் என்று நேற்று முன்தினம் மணிலாவில் உரை யாற்றியபோது பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

மத்திய கிழக்கை உலுக்கிய நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கானோர் மரணம்

மத்திய கிழக்கு நாடுகளான ஈரானிலும் ஈராக்கிலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப் படுகிறது. (படத்தில்) ஈரானின் கெர்மான்சா மாநிலத்தில் மோப்ப நாய் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைத் தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படை வீரர். படம்: ஏஎஃப்பி

2030ல் இந்தியாவுக்கு தேவை 55 புது விமான நிலையங்கள்

இந்தியாவுக்கு வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் புதிதாக 55 விமான நிலையங்கள் தேவைப் படும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்காக அரசாங்கம் 150,000 முதல் 200,000 ஹெக்டர் நிலப்பரப்பை ஒதுக்கவேண்டி யிருக்கும் என்றும் இந்தத் திட் டத்திற்காக US$36 பில்லியன் முதல் US$45 பில்லியன் வரை முதலீடு தேவைப்படக்கூடும் என் றும் சிஏபிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து மையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. “இந்தியாவுக்குப் புதிய விமான நிலைய உருவாக்கத் திட் டம் ஒன்று தேவை,” என சிஏபிஏ தெற்கு ஆசிய இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கபில் கோல் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்சில் பிரதமர் லீ

ஆசியான் உச்சநிலை கூட்டத்திலும் அதன் தொடர்பான இதர கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு பிலிப்பீன்ஸ் சென்றிருக்கிறார். அந்த நாட்டின் கிளார்க் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் சுமார் 1 மணிக்குத் தரையிறங்கிய பிரதமர் திரு லீக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனை எட்டியது

காமன்வெல்த் டிரைவ், ஹாலந்து வில்லேஜ் வட்டாரங்களில் ஐந்து அறை வீடுகள் மூன்று $1 மில்லி யனை எட்டியுள்ளன. இவையே, பினக்கல்@டக்ஸ்டன் வீடுக ளுக்கு அப்பால் இவ்வாண்டின் அதிகமான தொகையில் பரிவர்த் தனையான வீவக வீடுகளாகும். சொத்து முகவர் நிறுவனமான ‘புரோப்னெக்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில் புளோக் 50 காமன் வெல்த் டிரைவின் இரு வீடுகளும் அக்டோபரில் $1.035 மில்லியனுக் கும் ஆகஸ்டில் $1.028 மில்லிய னுக்கும் பரிவர்த்தனை செய்யப் பட்டது தெரியவந்துள்ளது.

கட்டடங்களில் பசுமைவெளி: 2030க்குள் இரட்டிப்பாகலாம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அடுக்குமாடிக் கட்ட டங்களில் பசுமைப் பரப்பை வரும் 2030க்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, தீவு முழுவதும் கட்டடங்களில் நூறு காற்பந்துத் திடல்களுக்கும் கூடுதலான பரப் பளவில், அதாவது 100 ஹெக்டர் பரப்பளவில் பசுமைவெளி அமைக்கப்பட்டுள்ளது. அதை 200 ஹெக்டராக அதி கரிக்க ‘லஷ்’ (LUSH) எனப்படும் நகர்ப்புற வெளிகள், உயர்ந்த கட்டடங்களுக்கான நில வடிவ மைப்புத் திட்டத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் மேம் படுத்தவுள்ளது.

இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை

 படம்: தமிழக ஊடகம்

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று பிரதமர் மோடி அறி வித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரொக்கப் பணத் திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பணப் புழக்கம் குறைந்தது. வங்கியிலுள்ள தங்களது பணத்தை எடுக்கவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டு களை மாற்றவும் மக்கள் மணிக் கணக்கில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அது போன்ற சம்பவங்களில் பலர் மாண்டதாக ஊடகச் செய்திகள் கூறின.

மரம் நடும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்

அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித் தொகு தியை சேர்ந்த குடிமக்களுடன் பிரதமர் லீ சியன் லூங் நேற்று மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங் மோ கியோவில் உள்ள லக்சஸ் ஹில்ல் பார்க்கில் மொத்தம் ஒன்பது செடிகள் நடப்பட்டன. மேலும், சிலர் தோட்டச் செடிகளுடன் அங்கு வந்திருந்தனர். சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டது. “மரங்களை நடுவதைத் தாண்டி, அவைகளைப் பரா மரித்து பசுமையைக் காத்து சிங்கப்பூரைத் தோட்ட நகர மாக்கும் இலக்கை அடைய குடிமக்கள் இணைந்து பாடுபடு வர்” என அங் மோ கியோ நாடா ளுமன்ற உறுப்பினர் இந்தான் அஸுரா மோக்தார் நம்பிக்கை தெரிவித்தார்.

தூய்மைக்கு முக்கியத்துவம்

தூய்மையான, குப்பைகள் குறைந்த சமூகத்தை உருவாக்க சிங்கப்பூரர் கள் தங்களது அன்றாட வாழ்க் கையில் முழு ஈடுபாட்டுடன் நடந்துகொள்வது அவசியம் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள் ளார். ஏராளமான மரங்கள் மற்றும் நீர்வழிகளுடன் கூடிய பூங்கா நகராக உருவெடுக்க சிங்கப்பூர் பெரிய அளவில் பாடுபட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் தூய்மைக்கு முக் கியத்துவம் கொடுத்துப் பேசிய திரு தர்மன், “தொடக்கமாக 20 முதல் 30 ஆண்டுகள் கடந்த பின்னர் நமது பழக்கவழக்கங்கள் பலவற்றில் நாம் இன்னும் முன் னேற்றம் காணவில்லை,” என்றார்.

Pages