You are here

தலைப்புச் செய்தி

சாக்கடைக் குழிக்குள் பாய்ந்த கார்

சாக்கடைக் குழிக்குள் பாய்ந்த கார்

மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவில் கட்டு மானப் பணிகள் நிறைவுபெறாத சாக்கடைக் குழிக்குள் காருடன் கவிழ்ந்த இருவரைத் தீயணைப்பாளர்கள் உயிருடன் மீட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. மீட்புப் படையினர் கயிறு மூலம் குழிக்குள் இறங்கி காரினுள் இருந்தபடி உள்ளே சிக்கிக்கொண்ட இருவரை யும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஒரு தீயணைப்பு வாகனத்தையும் ஆறு தீய ணைப்பு வீரர்களையும் அனுப்பியதாக தாமான் சாரா தீயணைப்பு நிலையத் தலைவர் ராம்லி ஹாருண் சொன்னார்.

சைக்கிளோட்டி, பாதசாரிகளுக்கான வசதிகளுடன் கட்டடத் திட்டங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்து மேம்பாட்டாளர்கள் தங் களுடைய கட்டட வடிவமைப்பு களில் பாதசாரிகள், சைக்கிளோட் டிகள் ஆகியோருக்கு பாதுகாப் புடன் வசதிகளையும் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. இதனை இவ்வாண்டின் ஜூலை யிலிருந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று சொத்து மேம்பாட் டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சைக்கிளோட்டிகள், பாதசாரி களுக்கான பாதுகாப்பு அம்சங் களை உறுதி செய்தல், சைக்கிள் நிறுத்துமிடங்கள், குளியல் அறை யுடன் பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்ற வசதிகளை சொத்து மேம் பாட்டாளர்கள் செய்ய வேண்டும். மேலும் முக்கிய போக்குவரவு முனையங்களிலிருந்து நடைபாதை, சைக்கிள் பாதைகள் இணைக்கப்பட வேண்டும்.

ஊழியர்களுக்குப் பயிற்சிப் படிப்பு; புதிய கல்லூரி உதயம்

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பெரியவர்களில் மேலும் பலருக்குப் பயிற்சிப் படிப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒரு புதிய கல்லூரியைத் தொடங்குகிறது. ‘நிபுணத்துவ தொடர்கல்விக் கல்லூரி’ என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய கல்லூரி, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுடன் சேர்ந்து செயல்பட்டு நிபுணத்துவர் கள், நிர்வாகிகள், மேலாளர்கள் உள்ளிட்ட வேலை பார்க்கும் பெரியவர்களுக்காக பயிற்சிப் படிப்புகளை உருவாக்கும். இந்தப் பல்கலைக்கழகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது.

பிரதமர்: பொருளியல் உருமாற்றம் உயிர்நாடி

பிரதமர் லீ சியன் லூங்

சிங்கப்பூர் தன்னுடைய பொருளியலை உருமாற்றவேண்டிய அவசரப் பணியைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது மே தினச் செய்தியில் வலியுறுத்தி இருக் கிறார். அப்படிச் செய்தால்தான் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வாழ்வில் மேம்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றார் அவர். நல்ல வேலைகளைப் பெற ஊழியர்களை ஆயத்தப்படுத்துவதே பொருளியல் உருமாற்றத்தின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்துவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கம் வென்றார் சாந்தி 78வது சிங்கப்பூர் பொது விருது

தங்கம் வென்றார் சாந்தி 78வது சிங்கப்பூர் பொது விருது

திடல்தடப் போட்டியில் பெண் களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா தங்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 24.04 வினாடிகள். இதற்கு முன் இந்தப் பிரிவில் சாந்தி பதிவு செய்திருந்த தேசிய சாதனை நேரம் 23.60 வினாடிகள் ஆகும். நேற்று நடைபெற்ற பந்தயத்தை முடிக்க இந்த நேரத்தைவிட அதிகமாக எடுத்துக்கொண்ட போதிலும் தங்கம் வெல்ல அது போதுமானதாகவே இருந்தது. இந்தப் பந்தயத்தில் மலேசியா வைச் சேர்ந்த ஸைடாத்துல் ஸுல்கிஃப்லி இரண்டாம் நிலை யிலும் வியட்னாமைச் சேர்ந்த ஙுவேன் தி ஒன் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

‘அர்ப்பணிப்புப் படை மசெகவிடம் உள்ளது’

சிஜக வேட்பாளர் டாக்டர் சீ (இடது படம்)), மசெக வேட்பாளர் முரளிதரன் பிள்ளை.

கடந்த பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத் தொகுதியில் மசெக அணிக்குத் தலைமையேற்று போட்டியிட்ட முரளிதரன் பிள்ளை பாட்டாளிக் கட்சியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். இம்முறை தனித் தொகுதியான புக்கிட் பாத்தோக்கில் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு அத்தொகுதியின் குடியிருப்பாளர்களைச் சந்தித்து வருகிறார். புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள புளோக் 114ன் கீழ்த்தளத்தில் நேற்று அவர் குடியிருப்பாளர்களுடன் உரையாடுகிறார். (இடப்படம்) சிஜக வேட்பாளர் டாக்டர் சீ நேற்று புக்கிட் பாத்தோக் எம்ஆர்டி நிலையத்தில் வாக்கு வேட்டையாடினார்.

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மசெக- சிஜக நேரடிப் போட்டி

மசெக வேட்பாளர் முரளி பிள்ளையும் (வலது) சிஜகவின் டாக்டர் சீ சூன் ஜுவானும் நேற்று வேட்புமனுத் தாக்கல் மையத்தில் தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். படம்: தேர்தல் துறை

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி புக்கிட் பாத்தோக்கில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மசெக சார்பில் 48 வயது திரு முரளிதரன் பிள்ளையும் சிஜக சார்பில் அதன் தலைவர் 53 வயது டாக்டர் சீ சூன் ஜுவானும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் நிலையமான கெமிங் தொடக்கப் பள்ளி முன்பாக அந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

திருமா உதவிக்கரம்; பாமகவைச் சேர்ந்த இருவர் உயிர் பிழைத்தனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சாலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாட்டாளிக் கட்சி யைச் சேர்ந்த இருவரை மீட்டு காப்பாற்றியிருக்கிறார். விபத்தில் காயம் அடைந்த இருவரும் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தொண்டர் ஒருவர் கூறியதற்கு, “இப்போது இதுதான் முக்கியமா-?-,” என்றும் அவர் கடிந்துகொண்டார். சட்டமன்றத் தேர்தலில் காட்டு மன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் பிர சாரத்திற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.

இரண்டு ஊழியர்களின் மரணம் குறித்த விசாரணை முடிவுற்றது: எஸ்எம்ஆர்டி

இரண்டு ஊழியர்களின் மரணம் குறித்த விசாரணை முடிவுற்றது: எஸ்எம்ஆர்டி

இவ்­வாண்டு மார்ச் 22ஆம் தேதி இரு எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர்­களின் மர­ணத்­திற்குக் காரணம் முக்கிய மான பாது­காப்பு விதி­முறை­கள் பின்­பற்­றப்­ப­டா­ததே என்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் கூறியுள்ளது. இதன் தொடர்­பி­லான தனது விசாரணை முடிந்­து­விட்­ட­தாக நேற்று தெரி­வித்த எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம், பாதுகாப்பு விதி­முறை­கள் பின்­பற்­றப்­பட்டிருந்தால் நஸ்­ரு­லு­தின் நஜு­மு­தின், வயது 26, முகம்­மது அஸ்­ரி­யா­ஃப், வயது 24 என்ற அந்த ஊழி­யர்­களின் உயிரிழப்பு தவிர்க்­கப்­பட்­டி­ருக் கலாம் என்று தெரி­வித்­தது.

பிரதமர் லீ: அடுத்த ஆண்டில் இன்னும் அதிக குழந்தைகள் வேண்டும்

தமது டெக் கீ தொகுதியில் நேற்று நடைபெற்ற கேளிக்கை விழாவில் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்)

டெக் கீ சமூக மன்ற வளாகம் நேற்று கேளிக்கை விளை யாட்டுகள், குழந்தைகள் அழுகுரல்கள் என்று பரபரப்பாக காணப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைக் காட்சியில் அத்தொகுதியில் வாழும் குடும்பங்கள் கலந்து கொண்டன.
மொத்தம் 145 குழந்தைகள் போட்டியில் பங்கேற்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு. இதனால், உற்சாகமடைந்த அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் லீ சியன் லூங், “அடுத்த ஆண்டு நடைபெறும் குழந்தைக் காட்சியில் இன்னும் அதிக புதிய குழந்தைகளைக் காண விரும்புகிறேன்,” என்றார்.

Pages