You are here

தலைப்புச் செய்தி

சாய் சீயில் தாதிமை இல்லம்

தொழிலாளர் இயக்கத்தின் இரண் டாவது தாதிமை இல்லம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 350 பேருக்கு பராமரிப்பு வழங்கக் கூடிய சாய் சீயில் உள்ள ‘என்டியுசி ஹெல்த்’தின் இந்தப் புதிய வசதி, மூத்தோரை கூடிய விரைவில் வீடுகளுக்கு அனுப்புவதை இலக் காகக் கொண்டுள்ளது. அங் கிருந்தவாறே அவர்களுக்கான மறுவாழ்வு பராமரிப்பைப் பெறலாம். “அதிக எண்ணிக்கையிலான தாதிமை இல்லங்களை உருவாக்கு வது நீண்டகாலத் தீர்வாக இருக்காது. ஒவ்வொரு தாதிமை இல்லமும் ஐந்து முதல் 10 விழுக்காட்டினரை வீடுகளுக்கு அனுப்பும் திறனைக் கொண்டுள் ளது.

நியூயார்க் தாக்குதலில் 8 பேர் பலி

நியூயார்க் தாக்குதலில் 8 பேர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நக ரில் ஒரு சிறிய ரக லாரி ஒன்றை 100 கி.மீ. வேகத்தில் ஓட்டிவந்த ஒருவர், நடையர்கள் மீதும் சைக் கிளோட்டிகள் மீதும் தன் வாக னத்தை ஓட்டி எட்டு பேரைக் கொன்றுவிட்டார். இதர 11 பேர் காயம் அடைந்தனர். ஒரு பள்ளிப் பேருந்து மீதும் அவர் தன் வாடகை வாகனத்தை மோதினார். அந்த சந்தேக நபரை துப்பாக்கியால் சுட்டு போலிசார் உயிரோடு பிடித்தனர். சிறிய லாரிஓட்டி உஸ்பெகிஸ் தானைச் சேர்ந்த செஃபுளோ சாய்பாவ், 29, என்பவர். 2010 முதல் அமெரிக்காவின் புளோ ரிடா மாநிலத்தில் தம்பா என்ற நகரத்தில் அவர் வசித்துவந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சாங்கியின் 4வது முனையம் செயல்பட தொடங்கியது

சாங்கி விமான நிலையத்தின் புதிய நான்காவது முனையம் நேற்றுக் காலை முதல் செயல்பட தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமானப் போக்குவரத்தின் வர லாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தின் செயல் பாடுகள் தங்கு தடையின்றி சுமூக மாக நடைபெற்றன. முதல் விமா னம் ஹாங்காங்கிற்குப் புறப்பட விருந்த நிலையில் பயணிகள் காலை 4 மணி முதல் புறப்பாட்டு கூடத்திற்கு வரத் தொடங்கினர். தங்களின் பயணத்தை சுயமாகவே உறுதி செய்யும் (செக்-இன்) முறையை பயணிகள் பயன்படுத்தினர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் மணம் கமழும் ‘அறம்’

சிங்கப்பூர் எழுத்தாளார் விழா வரும் வெள்ளிக்கிழமை தமிழ் மணத்தோடு தொடங்க உள்ளது. ‘அறம்’ என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா வின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ கத்தின் பெயர்பெற்ற வில்லுப்பாட்டு கலைஞர் திருமதி பாரதி திருமக னின் வில்லுப்பாட்டும் இடம்பெறும். சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியின் முன் னோட்டமாக இந்த அங்கம் இடம் பெறுகிறது. வெள்ளி இரவு 8 மணிக்கு நவீன இசையுடன் தமிழ் கவிதை களைச் சுவைக்கலாம்.

கலந்துறவாடல் மிக முக்கியம்

படம்: சாவ் பாவ்

கோல்டுஹில் அவென்யூவின் ஒரு மூலையில், பங்களாக்கள், தரை வீடுகளுக்கு மத்தியில் அமைந்து உள்ள நிலப்பகுதியில், எல்லா வகையான பழங்களும் காய்கறி களும் வளர்கின்றன. பழங்களும் காய்கறிகளும் அறுவடை செய்யப் பட்டு, அண்டை வீட்டாருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. நேற்று இவ்விடத்திற்கு வரு கையளித்த நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கம்போங் உணர்வு எனப்படும் கிராமிய உணர்வு நிலைத்திருப்பதாகவும் சிங்கப்பூர் முழுவதிலும் இந்த வலுவான சமூக உணர்வு வளர்க்கப்படவேண் டும் என்றும் கூறினார்.

‘பயங்கரவாத தாக்குதலின்போது ஒவ்வொரு குடிமகனின் செயலும் மிக முக்கியமானது’

பயங்கரவாதத் தாக்குதல் நிகழும் பட்சத்தில் என்ன செய்ய வேண் டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியிருக்கிறார். மக்கள் விழிப்புடனும் எச்சரிக் கையுடனும் இருந்தால் அவர்களால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தடுத்துவிட முடியும் என்று அவர் கூறினார். “பயங்கரவாதச் சம்பவத்தில் மாட்டிக்கொண்டால் ஓடிவிட, ஒளிந்துகொள்ள, உதவிக்கு குரல் கொடுக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்,” என்றார் அவர். திரு டியோ நேற்று ‘எக்சர்சைஸ் நார்த்ஸ்டார்’ என்ற பாவனைப் பயிற்சியைப் பார்வையிட்டார்.

தாய்லாந்து மன்னரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப்

தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் அரச முறை இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பேங்காக் சென்றுள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் அவரது கணவர் திரு அல்ஹப்‌ஷீயையும் தாய்லாந்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். “மன்னர் பூமிபால் தாய்லாந்துக்கும் சிங்கப்பூருக்கும் நல்ல உறவு நிலவ அடித்தளத்தை உருவாக்கிய மாபெரும் மன்னர். அவர் என்றென்றும் மக்களின் மனத்தில் நிலைத்திருப்பார்,” என்று அதிபர் ஹலிமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஆச்சரியம், ஆனந்தம், அற்புதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆர்ச்சர்ட் சாலையில் இடம்பெறவுள்ளள ஒளி யூட்டின் முன்னோட்டக் காட்சியின் படம் இது. இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கும் சுரங்க நடைபாதை களும் பல வண்ண ஒளி நூலிழை களால் அலங்கரிக்கப்பட்ட மரங் களையும் கொண்டதாக இருக்கும். தங்ளின் கடைத் தொகுதியில் தொடங்கி பிளாசா சிங்கப்பூரா வரை கிட்டத்தட்ட 2.88 கிலோ மீட்டர் தூரம் இந்த ஒளி அலங் காரங்கள் இருக்கும்.

சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நேரடி வேலை அனுபவம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எல்லாரையும் உள்ளடக்கும் வேலை யிடத்தைச் சாதிக்க ஊக்கமூட்டும் ஒரு நடவடிக்கையாக, சிறப்பு உதவி தேவைப்படுவோருக்கான சங்கத் துடன் சேர்ந்து 10 வகுப்புகளைக் கொண்ட நேரடி வேலைப் பயிற்சி செயல்திட்டம் ஒன்றை இஸ்தானா தொடங்கியிருக்கிறது. சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின்படி அதிபர் மாளிகையில் வேலை அனுபவத்தைப் பெறுவர். பத்து பயிற்சி வகுப்புகளும் 32 மணி நேரம் நடக்கும். அந்த வகுப்புகளில் சேர்ந்து மாணவர்கள் சமையல்கலை, தோட் டக்கலை முதலான பலவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்.

ஐஎஸ் அமைப்பை வீழ்த்தும் கூட்டணிக்கு சிங்கை ஆயுதப் படைகளின் வளம், வீரர்கள் உதவி தொடரும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்க போராடி வரும் உலகக் கூட்டணிக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆதரவு அடுத்த ஆண்டும் தொடரும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை யில் அந்த நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை திங்கட்கிழமை திரு லீ சந்தித் தார். அப்போது திரு லீ அமெரிக்க அதிபரி டம் இந்த உறுதியை வழங்கினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந் தித்தனர். அப்போது திரு லீ இந்த விவரங் களைத் தெரிவித்தார்.

Pages