You are here

தலைப்புச் செய்தி

பிரதமர் லீ: பொருளியல் 3% வளர்ச்சி அடையும்

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3 விழுக்காடு வளர்ச்சி அடையும் எனப் பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை கூறினார். அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் வாழும் 200க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்காக அமெரிக்காவிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் பிரதமர் லீ தமது கணிப்பை முன்வைத்தார். சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளியல் 4.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தகத் தொழில் அமைச்சு இம்மாதம் வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புக் காட்டியது.

பந்தய கார்-டாக்சி மோதி நொறுங்கிய விபத்தில் இரண்டு பேர் காயம்

யீ‌ஷுன் அவென்யூ 1ல் நேற்று அதிகாலையில் ஒரு பந்தய காரும் டாக்சியும் மோதி விபத்துக்குள்ளாயின. விபத்தில் இரு வாகன ஓட்டுநர்களும் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய சிவப்புநிற மெக்ளேரன் பந்தய காரும் நீல நிற கம்ஃபர்ட் டாக்சி யும் நொறுங்கிப்போய்விட்டன. சமூக இணையத்தளங்களில் பதிவேற் றப்பட்ட படங்களும் காணொளியும் வாகனங்கள் நொறுங்கிக் கிடந்ததைக் காட்டின. பந்தைய காரின் வலதுபுறம் முற்றிலும் சேதம் அடைந்திருந்தது.

பினாங்கு நிலச்சரிவு: மூவர் பலி, 11 பேரைக் காணவில்லை

 படம்: ஏஎஃப்பி

பினாங்கு, தஞ்சோங் புங்காவில் உள்ள கட்டுமானத்தளம் ஒன்றின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரது சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களில் இருவர் இந்தோனீசியர். ஒருவர் மியன்மார் நாட்டவர். 11 பேர் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர். இரு ஊழியர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். நேற்று காலை நேர்ந்த இந்த விபத்தில் மாண்டுபோன ஊழியர் கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். கட்டுமானப் பகுதியின் மேற்பார்வையாளரான மலேசியர் ஒருவரும் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

‘ரயில் கட்டணமுறை மாற்றப்படும்’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறி ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதையில் பயணத் தைத் தொடர்பவர்கள் இரண்டா வது முறையும் புதிதாக பயணம் செய்பவர்களைப் போன்று கட் டணம் செலுத்த வேண்டியதிருக் காது. இந்த நடைமுறை விரை வில் செயல்படுத்தப்படும் என்று கூறிய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், பயணம் செய் யும் தொலைவுக்கு ஏற்ற பயணக் கட்டண மாற்று விதிகள் ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் என்றார். டௌன்டவுன் மூன்றாவது பாதையில் ரயில் சேவையை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.

காட்டுப்பன்றி தாக்கியதால் ஆடவர் காயம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

ஹில்வியூ அவென்யூவில் அமைந் துள்ள கூட்டுரிமை வீடுகளுக்கு வெளியே 44 வயது ஆடவர் ஒருவரைக் காட்டுப்பன்றி தாக்கி காயப்படுத்திவிட்டது. நேற்றுக் காலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆட வரின் இரு கால்களிலும் சிராய்ப்பு களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டன. ஹில்வியூ எம்ஆர்டி நிலையத்தை நோக்கி நடந்து சென்றபோது அந்தப் பன்றி தம்மை நோக்கி வருவதை அந்த ஆடவர் உணர்ந்தார். சுதாரித்து ஓடத் தொடங்கிய அவர், நிலைதடுமாறி விழ, பன்றி யின் தாக்குதலிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை. அதன்பின் அவ்விடத்தைவிட்டு அந்தப் பன்றி தப்பித்து ஓட முயன்றபோது அவ்வழியாக வந்த பேருந்து அதன்மீது மோதியது.

இன்ப தீபாவளி, இரட்டிப்பு மகிழ்ச்சி!

விஜய் குமார்-சுமிதா நாயர் தம்பதிக்கு இவ்வாண்டு தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாள்! 2013 டிசம்பரில் திருமணமான இவர்கள் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கினர். பிறகு செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருத்தரித்த 35 வயது திருமதி சுமிதா கடந்த ஏப்ரலில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். இறைவன் தந்த பரிசான மகன் அர்ஜூன் தேவ், செல்லப் பிராணி ‘பப்பள்ஸ்’ உடன் தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் சுமிதா- விஜய் தம்பதி, இந்த நன்னாளில் தங்களது பெற்றோர்களை நேரில் சந்தித்து, ஆசி பெற்று, அளவளாவி மகிழ உள்ளனர். படம்: திமத்தி டேவிட் செய்தி: epaper.tamilmurasu.com.sg

கடலில் விழுந்த விமானத்தைக் கயிறு கட்டி இழுத்தனர்

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் வர்த்தகத் தலைநகரும் துறைமுக நகருமான அபிஜான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் நால்வர் உயிரிழந்தனர். இடி, மின்னலுடன் கடுமையான புயலும் மழையும் இருந்ததால் அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அலைகளால் அடித்து வரப்பட்டு கரையோரம் வந்த அந்த விமானத்தை மீட்புப் படையினர் கயிறு கட்டி இழுத்துக் கரைசேர்த்தனர்.

பங்ளாதே‌ஷில் அகதிகள்: சிங்கப்பூர் $270,000 உதவி

பங்ளாதே‌ஷில் அடைக்கலம் புகுந் திருக்கும் மியன்மாரின் ரோஹிங்கியா அகதிகளுக்கு சிங்கப்பூர் சுமார் $270,000 மதிப்புள்ள உதவி களை வழங்குகிறது. அந்த உதவி களை வழங்குவதற்காக சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் குழு நேற்று பங்ளாதேஷ் போய்ச் சேர்ந்தது. சிங்கப்பூர் ஆயுதப்படையின் KC-135R விமானம் போர்வைகள், உணவு, மருத்துவப் பொருட்கள், மருந்துகள், விளக்குகள் முதலான பல நிவாரணப் பொருட்களுடன் பங்ளாதே‌ஷின் சிட்டகாங் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த முதல்கட்ட உதவிப் பொருட்களை சிங்கப்பூர் அரசாங் கமும் மெர்சி ரிலிஃப் என்ற அரசு சாரா உதவி அமைப்பும் வழங்கி இருக்கின்றன.

உணவுக் கடைக்காரர்களுக்கு உதவ புதிய தகவல் மையம்

உணவுக் கடைக்காரர்களுக்கு உதவ புதிய தகவல் மையம்

உணவங்காடி தொடங்க விரும்பு வோருக்கும் இப்போது உணவுக் கடை வைத்துள்ளோருக்கும் அதிக உதவிகள் கிடைக்கவிருக் கின்றன. எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் தகவல் மையம் அமைக்கப்படுவது டன் உற்பத்தித்திறன் மானியமும் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப் புள்ளது. உணவங்காடி வர்த்தகம், உணவங்காடி ஒன்றை ஏலக் குத்தகை எடுப்பது, உணவு சுகா தாரம் பற்றிய பயிற்சி வகுப்பு களுக்கு எங்கு செல்வது போன்ற தகவல்களை தோ பாயோ வீட மைப்பு வளர்ச்சிக் கழக மையத்தில் அமைந்துள்ள மறுசீரமைக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தில் பெறலாம்.

Pages