You are here

தலைப்புச் செய்தி

பீஷான் நிலைய நீர் இறைக்கும் கருவியில் கோளாறு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

பீஷான் நிலையத்தில் நீரை வெளி யேற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பீஷான் சுரங்கப் பாதையில் வெள்ளநீர் நிறைந்ததாகவும் அதனால் வடக்கு=தெற்கு ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் கிட்டத்தட்ட 21 மணி நேரத்துக்கு நீடித்தது. பீஷான் எம்ஆர்டி நிலையத் துக்கு அருகே தரைப் பாதை, சுரங்கப் பாதையுடன் இணையும் பகுதியிலுள்ள ஒரு திறந்த பகுதி வழியாக வெள்ளநீர் சுரங்க ரயில் பாதைக்குள் சென்றாக ஆரம்ப கட்ட விசாரணை தெரிவித்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

புருணை காட்டில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் ராணுவத்தினரைச் சந்தித்த பிரதமர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புருணை சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், அங்குள்ள தெம் புரோங் காட்டுப் பகுதியில் பயிற்சி யில் ஈடுபட்டிருக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களை நேற்று சந்தித்தார். சிங்கப்பூர் காலாட்படைப் பிரிவு, 6வது பட்டாலியன் வீரர்களுடன் பிரதமர் லீயும் அவரது துணைவி யார் ஹோ சிங்கும் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டனர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரலான திரு லீ, சிங்கப்பூர் படை வீரர் களின் கடப்பாட்டை மெச்சினார். எதார்த்த சூழலில், அதே நேரத்தில் பாதுகாப்பான சூழலில் பயிற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை யும் அவர் வலியுறுத்தினார்.

‘ஆக்டிவ் எஸ்ஜி’ பாலர் பள்ளி ஊட்டச்சத்து, உடற்பயிற்சி திட்டம்

விளையாட்டுகளுக்கான தேசிய பிரசார நடவடிக்கையான ‘ஆக்டிவ் எஸ்ஜி’ பாலர் பள்ளி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து, உடற் பயிற்சித் திட்டத்தை ஏற்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து உள்ளது. ‘Nurture Kids’ எனப்படும் அந்தத் திட்டத்திற்காக ஃப்ரிஸ் லேண்ட் கேம்பினா ஏ‌ஷியா என் னும் பால்பொருள் நிறுவனத்துடன் அது பணியாற்றுகிறது. வீசுதல், வீசப்படுவதைப் பிடித் தல் போன்ற அடிப்படைத் திறன் களை வளர்க்கும் பல்வேறு வித மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள எட்டு பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கானது இத்திட்டம். திட்டம் செயலுக்கு வந்தது முதல் பத்து வாரங்கள் கழித்து அதன் செயல்திறன் பரிசீலிக்கப் படும்.

சிறப்பு உதவி மாணவருக்கு மேலும் ஆதரவு வேண்டும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு மேலும் ஆதரவு வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார். சிறப்பு உதவி தேவைப்படும் பிள் ளைகளுக்கான ரெயின்போ சென்டர் யீ‌ஷூன் பார்க் பள்ளிக் கூடத்திற்கு நேற்று அதிபர் சென்றார். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏறக் குறைய 10 ஆண்டு காலமாக பயி லும் 17 வயது டேனியல் இஷாக் அப்துல்லா என்ற பையனை அதிபர் சந்தித்து, அவரது ஓவியங்களை அவர் பார்வையிட்டார். ரெயின்போ நிலையத்தின் பணிகளைப் பாராட்டிய அதிபர், சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கா. சண்முகம்: இன ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் கவனம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பல இன ஒருமைப் பாடு பயங்கரவாதத்திற்கு எதி ரான முக்கிய தற்காப்பு என்றும் அது கவனத்துடன் வளர்க்கப்பட வேண்டும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண் முகம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். பயங்கரவாத மிரட்டலுக்கு எதிராக சிங்கப்பூரைப் பலப் படுத்துவது பற்றிய நாடாளு மன்றத் தீர்மானம் குறித்து திரு சண்முகம் பேசினார். பல இன ஒருமைப்பாடு என்ற அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டி, பயங்கரவாதம், தீவிரவாதச் சிந்தனை ஆகிய மிரட்டல்களைக் கடப்பாட்டோடும் உறுதியோடும் கையாளவேண் டும் என்று அவர் கூறினார்.

‘அமெரிக்க வரலாற்றில் மோசமான தாக்குதல்’

லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குழுமியிருந்தவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியான தாகவும் 400க்கும் அதிக மானோர் காயமுற்றதாகவும் போலிசாரும் அமெரிக்க ஊட கங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன. விடுதி ஒன்றின் 32வது மாடியிலிருந்து இசைக் கச்சேரி யில் இருந்தவர்களை நோக்கி 10 நிமிடங்களுக்கு மேலாக துப்பாக்கி மழை பொழிந்த அந்த ஆடவர், போலிசார் சூழ்ந்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான் என்று போலிசார் கூறினார். அவனது அறையில் 10க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்க்குழாய் உடைப்பு; ஒரு வாரத்தில் 2வது சம்பவம்

புக்கிட் பாத்தோக் சென்ட்ரல் புளோக் 222, 223க்கு அருகே நேற்றுக் காலை தண்ணீர்க் குழாய் ஒன்று உடைந்ததில் பல மீட்டர் உயரத்திற்கு நீர் பீய்ச்சியடித்தது. புல்தரை வழியாகச் செல்லும் அந்த பிரதான தண்ணீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பற்றி தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. அந்த உடைப்பு தனது உணர் கருவிகளாலும் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கழகம் குறிப்பிட்டது. உடனடியாக தனது அதிகாரி களையும் பழுதுபார்ப்பு ஒப்பந்த தாரர்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பிய கழகம், காலை 9 மணி அளவில் நீர்க்கசிவு நிறுத்தப்பட்ட தாகத் தெரிவித்தது.

அதிபர் ஹலிமா யாக்கோப் : சமூகங்களுக்கு இடையில் நல்லுறவு வளர்ப்பது அவசியம்

உலகெங்கிலும் இன, சமயப் பூசல்கள் பொங்கி எழும் இன்றைய சூழலில், சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வலு வான நல்லுறவை வளர்ப்பது அதிமுக்கியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக் கிறார். இதனால்தான் வெவ்வேறு சமய மக்களிடையில் புரிந்து ணர்வை வளர்ப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நோக்கத்திற்காக, அனைத்து சமய அமைப்பு இளை யர் பிரிவை அமைக்கத் திட்டமிடு வதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக அவர் சொன்னார்.

ஈராக்கில் மன ஊக்கத்துடன் சிங்கப்பூர் துருப்பினர் தொண்டு

படம்: தற்காப்பு அமைச்சு

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், ஈராக்கில் தொண்டாற்றும் சிங்கப்பூர் துருப்பினரை நேற்று சந்தித்தார். அவர்கள் பெரும் மனஊக்கத்துடன் இருப்பதாக டாக்டர் இங் அறிவித்தார். ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பு மூலம் பல மிரட்டல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை எதிர்த்து பன்னாட்டு கூட்டணிப் படை போராடி வருகிறது. அந்தப் படையினருக்கு மருத்துவ ஆதரவு வழங்குவதற்காக இந்த ஆண்டு ஜூன் முதல் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் மருத்துவக் குழு ஈராக் நாட்டில் பணியில் ஈடுபட்டு வருகிறது.

‘சிங்கப்பூரின் பாதுகாப்பில் நிறுவனங்களுக்கும் பங்கு’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பாதுகாப்பில் நிறு வனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கூறிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், வேலையிடங்களையும் ஊழியர் களையும் பயங்கரவாத மிரட்டல் களைச் சமாளிக்கும் வகையில் தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மீளக்கூடிய ஆற்றலை வலுப் படுத்த உதவும் சமய நல்லிணக் கம், பரஸ்பர நம்பிக்கை, ஒருங் கிணைப்பு ஆகியவற்றை சமூ கத்தில் மேம்படுத்தவும் நிறு வனங்கள் உதவலாம் என்று அவர் சொன்னார். சிங்கப்பூரில் நேற்று நடை பெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட் டில் திரு டியோ பேசினார். “சாத்தியமான தாக்குதல் களைக் கண்டுபிடித்துத் தடுப் பதற்கு நமது பாதுகாப்பு அமைப் புகள் கடுமையாகச் செயல் பட்டுவருகின்றன.

Pages