You are here

உல‌க‌ம்

‘அணுவாயுதக் களைவுக்குப் பிறகே வடகொரியா மீதான பொருளியல் தடைகள் அகற்றப்படும்’

அணுவாயுதக் களைவு விரைவில் இடம்பெறவேண்டும் என்பதை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிந்துள்ளார் என்று அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கை நிறைவு பெறாதவரை வடகொரியா மீதான பொருளியல் தடைகளை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொம்பியோ எச்சரித்துள்ளார். “அணுவாயுதக் களைவை விரைந்து செய்து முடிக்கவேண் டும் என்பதை திரு கிம் அறிந்து உள்ளார் என நாங்கள் நம்பு கிறோம்,” என்று திரு பொம்பியோ கூறினார்.

பிரான்சில் தம்பதி கைது

பாரிஸ்: பிரான்சில் 31 ஆண்டுகள் தீர்க்கப்படாத வழக்கில் தம்பதியரை அந்நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 1987ல் மத்திய பிரான்ஸ் வட்டாரத்தில் அவர்களுடைய மகள் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிசார் அவர்களுக்கு வலை வீசியிருந்தனர். மரபணு மூலம் தம்பதியர் அடையாளம் காணப்பட்டனர் என்று பிரெஞ்ச் போலிசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

 

தேர்தல் முடிவை எதிர்த்து பிரிபூமி கட்சி மனுத்தாக்கல்

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் மகா தீரின் கட்சியான மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் தேர்தல் முடி வை எதிர்த்து மனுத்தாக்கல் செய் துள்ளனர். மே 9ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் முடிவை ஏற்க அவர்கள் மறுத்துள்ளனர். தாசெக் குளுகோர், ஜெம்போல், தாப்பா, பாகான் சிராய் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் லுபோக் மெர்பாவ், பேராக் கில் உள்ள சங்காட் ஜோங், ஜோகூரில் உள்ள காஹாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதி களிலும் போட்டியிட்டவர்கள் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

‘தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும்’

கோலாலம்பூர்: மலேசியாவை 61 ஆண்டுகள் ஆட்சி செய்த தேசிய முன்னணி கூட்டணி அண்மைய தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் அந்தக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது. இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. அம்னோ கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளனர். அம்னோ மூத்த தலைவர்கள் மன்றத்தின் தலைமைச் செயலாள ரான முஸ்தபா யாக்கூப், “அம்னோ, மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீனர் காங்கிரஸ் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியில் இனி கூட்டணி உணர்வை எதிர்பார்க்க முடியாது,” என்றார்.

எதிர்பார்ப்புகளை மிஞ்சி மலேசியா வெற்றி அடையும்

கோலாலம்பூர்: எதிர்பார்ப்புகளைத் தாண்டி மலேசியா வெற்றி காணும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். ஜப்பான் சென்றிருந்தபோது திரு மகாதீர் இவ்வாறு கூறினார். ஜப்பானில் உள்ள வேலை நன்னெறி முறைகளை மலேசியர் கள் பின்பற்றினால் ஜப்பானைப் போன்று மலேசியாவும் வெற்றி பெறும் என்பதை தான் ஒப்புக்கொள்வதாக திரு மகாதீர் கூறினார்.

நஸ்ரி: அம்னோ கட்சி தனித்து செயல்படுவதே நல்லது

பெட்டாலிங் ஜெயா: தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து சரவாக்கின் நான்கு கட்சிகள் விலகியதைத் தொடர்ந்து அக் கூட்டணியில் அம்னோ இணைந் திருப்பதைவிட தனித்து செயல் படுவதே சிறந்தது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார். தேசிய முன்னணி கூட்டணி என்பது “முடிந்துபோன கதை” என்று குறிப்பிட்ட திரு நஸ்ரி, அக்கூட்டணி தற்போது கலைக்கப் படுவது நல்ல விஷயமாக இருக்கலாம் என்று கூறியதாக மலேசியா டுடே இணைய செய்தித் தளம் தெரிவித்தது.

‘சிங்கப்பூரில் நடந்த சந்திப்பு கிம்முக்கு கிடைத்த வெற்றி’

சோல்: அணுவாயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்க படிப் படியான அணுகு முறை தேவை என்பதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புக்கொண் டுள்ள வேளையில் சிங்கப்பூரில் நடந்த இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு கிடைத்த வெற்றி என்று வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் துறைமுகத்தை தாக்கிய சவூதி ஆதரவுப் படைகள்

சானா: ஏமன் நாட்டில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து சவூதி ஆதரவு பெற்ற படைகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது கூட்டணிப் படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற ஹுதி கிளர்ச்சிப் படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை நேற்று முக்கிய துறைமுகத்தை தாக்கத் தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

சரவாக்கை ஆளும் புதிய கூட்டணி

கூச்சிங்: மலேசியாவின் அண் மைய தேர்தலில் தோல்வி அடைந்த தேசிய முன்னணி கூட்டணி யிலிருந்து சரவாக்கின் நான்கு கட்சிகள் விலகியுள்ளன. மலேசியாவின் ஆகப் பெரிய மாநிலமான சரவாக்கில் பிபிபி, பிஆர்எஸ், பிடிபி, எஸ்யுபிபி ஆகிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகி கபுங் கான் பார்டை சரவாக் (ஜிபிஎஸ்) எனப்படும் புதிய கட்சி தொடங்க ஒருமனதாக முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்பட்டது.

அதிவேக ரயில்: முடிவை மாற்றிய மகாதீர்

பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூருக் கும் கோலாலம்பூருக்கும் இடையி லான அதிவேக ரயில் திட்டத்தின் தொடர்பில் தனது முந்தைய முடிவை மாற்றி, “அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது,” என்று மலே சியப் பிரதமர் மகாதீர் முகம்மது குறிப்பிட்டுள்ளார்.

Pages