You are here

உல‌க‌ம்

டிரம்ப்: மீண்டும் அகதிகளுக்கு அனுமதி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் மீண்டும் அகதிகள் நுழைவதற்கான அனுமதியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வழங்கியுள்ளார். ஜனவரி மாதம் பதவி ஏற்றவுடன் டிரம்ப் புதிய அகதிகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடை பிறப்பித்திருந்தார். அந்தத் தடையை இப்போது தகர்த்தாலும் குறிப்பிடப்படாத 11 நாடுகள் 90 நாட்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். இனி வரும் அகதிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு முறைகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை நீக்கும் புதிய பட்ஜெட்: மலேசிய எதிர்க்கட்சி

கோலாலம்பூர்: மலேசியாவில் பொருள் சேவை வரியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் 258,52 பில்லியன் ரிங்கிட்டுக்கான புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டுக்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சி பரிந்துரைத் துள்ளது. முன்னைய வரவு செலவுத் திட்டத்தைக் காட்டிலும் நாட்டின் மேம்பாட்டுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பொருள் சேவை வரியை முடிவுக்குக் கொண்டு வருவதோடு விரைவுச் சாலைக் கான தீர்வைக் கட்டணம் போன்றவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

பினாங்கு பஸ் விபத்து: 8 பேர் மரணம்; 42 பேர் காயம்

பட்டர்வொர்த்: மலேசியாவின் பினாங்கில் நேற்று முன்தினம் காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் மாண்டனர், 42 பேர் படுகாயம் அடைந்தனர். நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். பேருந்துகளின் ஓட்டுநர் கள் காயமின்றி உயிர் தப்பி னர். ஜூரு என்னுமிடத்தின் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. மாண்ட எட்டுப் பேரும் பெண்கள். அவர்களில் ஏழு பேர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மலே சியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த 9 பேர் இந்தோனீசியாவில் கைது

ஜகார்த்தா: ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்போடு தொடர்புள்ள ஒன்பது ஆடவர்களை இந்தோ னீசிய அதிகாரிகள் கைது செய் துள்ளனர். போலிஸ் நிலையங் களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஐஎஸ் இயக்கத்தின் ஆதிக்கத் தால் முஸ்லிம் பெரும்பான்மையினர் இருக்கும் இந்தோனீசியாவில் அண்மையில் அதிக எண்ணிக்கை யில் மக்கள் பயங்கரவாதிகளாக மாறிவருகின்றனர் என்றும் அத னால் போலிசார் அந்தப் பிரச்சி னையை எதிர்நோக்க முயற்சி எடுத்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-அமெரிக்கா ஆலோசனை அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை

ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார். பயங்கரவாத மிரட்டல்கள், வடகொரியா வின் அணுவாயுதத் திட்டம் ஆகியன குறித்து அவர்கள் விவாதித்தனர். “இவ்வட்டாரத்தின் பயங்கரவாத மிரட் டல் குறித்து இருவரும் தங்களது கருத்து களைப் பகிர்ந்துகொண்டதோடு சட்ட விரோத அணுவாயுதச் சோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகிய திட்டங்களை வடகொரியா தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பாக தங்களது அக்கறைகளை வெளிப்படுத் தினர்,” என்று பிரதமர் அலுவலகம் தெரி வித்தது.

கிம் ஜோங் நாம் வழக்கு: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நீதிபதி

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்பாங்: கோலாலம்பூர் அனைத் துலக விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம்மை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு நேற்றுக் காலை வந்தனர். இந்தோனீசியரான சித்தி அயிஷா, 25, வியட்நாமியரான டுவான் தி ஹுவாங், 28, இருவரும் நீதிபதி, வழக்கறிஞர்களோடு குற்றம் நடந்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர், கிம் ஜோங் நாம்மை, 45, இந்த இருவரும் நச்சுவாய்ந்த ரசாயனத்தைக் கொண்டு தாக்கி கொலை செய்ததை விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்துள்ளன.

நாடு திரும்பும் ஐஎஸ் ஆதரவாளர்களால் மிரட்டல்

மத்திய கிழக்கில் 2014ல் தலை விரித்தாடிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக சுமார் 110 நாடுகளிலிருந்து 40,000 பேருக்கும் அதிகமான வெளி நாட்டினர் அங்கு சென் றனர். அந்த வட்டாரத்தில் ஐஎஸ் அமைப்பை ஒழிக்க அமெரிக்க ஆதரவுடன் கூடிய கூட்டணிப் படைகள் முழுமூச்சாக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பயங்கரவாத அமைப்பு ஏறக்குறைய ஒடுங்கிவிட்டது. இந்நிலையில், அந்த அமைப் பில் சேர்வதற்குச் சென்றவர்களில் குறைந்தபட்சம் 5,600 பேர் தங்கள் நாட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். அல்லது வேறு எங்கோ பாதுகாப்பான இடத்திற் குச் சென்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா நடத்திய ஏவுகணை பயிற்சி

சோல்: தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஏவுகணை கண்காணிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நேற்றும் இன்றும் நடந்த அந்தப் பயிற்சி, தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அருகில் உள்ள கடல் பகுதியில் நடத்தப்பட்டது. இந்தத் தகவலைத் தென்கொரிய ராணுவம் அறிக்கை மூலம் வெளியிட்டது. தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சென்ற ஆண்டு நடந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதை அடுத்து இந்தப் பயிற்சி சில மாதங்களுக்கு ஒருமுறை நடந்துவருகிறது.

ஆசியானின் பாதுகாப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட புதிய திட்டம்

ஜகார்த்தா: தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஆசிய வட்டா ரத்தில் அதிகரித்து ஆசியானின் ஆகப்பெரிய பாதுகாப்புப் பிரச்சி னையாக இருப்பதால் அதை சமா ளிக்கும் புதிய திட்டத்தை இந்தோ னீசியா பரிந்துரைத்துள்ளது. இந்த வட்டாரத்தின் ஆறு நாடுகள் இணைந்து ‘மினி= இண்டர்போல்’ எனும் திட்டம் மூலம் புலணாய்வு தகவல்களை ‘அவர் ஐஸ்’ எனும் முறையின் கீழ் பகிர்ந்துகொள்ள அந்தப் புதிய திட்டம் வழிசெய்யும். பிலிப்பீன்ஸின் கிளார்க் நகரில் நடந்துவரும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் இந்தோனீசிய தற் காப்பு அமைச்சர் ரியாமிஸார்ட் ரியாகுடு அந்தப் புதிய திட்டத்தை முன்வைத்தார்.

மலேசியா: பயங்கரவாதத்தை எதிர்கொள்ள சிறப்புப் படைகள்

ஈப்போ: பயங்கரவாத மிரட்டல்களை இன்னும் திறம்பட கையாள மலேசிய போலிஸ் அதன் பொது இயக்கப் படையை வலுப்படுத்த உள்ளது. குறிப்பாக, ‘விஏடி69’ கமாண்டோ படை மற்றும் சிறப்பு நடவடிக்கைப் படையும் வலுப் படுத்தப்படும் என்று மலேசிய போலிஸ் தெரிவித்துள்ளது. சிறப்புப் படையின் ‘விஏடி69 மற்றும் 50’ பிரிவில் மேலும் 100 பேரை சேர்த்துகொள்ள போலிஸ் தலைவர் ஒப்புதல் அளித்ததாக உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் ஆணையாளர் ஸுல்கிஃப்லி அப்துல்லா கூறியுள்ளார்.

Pages