You are here

உல‌க‌ம்

ஆப்கான் பள்ளிவாசலில் நடந்த இரண்டு தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் மரணம்

படம்: ஏஎஃப்பி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் தனித்தனியே நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆப்கான் தலைநகர் காபூலில் ‌ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த முதல் தாக்குதலில் பெண் களும் குழந்தைகளும் உட்பட குறைந்தது 39 பேர் மரணமடைந்த னர். 45 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை மாலை தொழு கைக்குக் கூடியிருந்தவர்களின் மத்தியில் தற்கொலைத் தாக்குதல் காரன் குண்டை வெடிக்கச் செய் துள்ளான்.

மன்னரின் $123மி. இறுதிச் சடங்கின் ஒத்திகை

மன்னரின் $123மி. இறுதிச் சடங்கின் ஒத்திகை

பேங்காக்: 250,000 பேர் கலந்து கொள்ளவிருக்கும் தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் இறுதிச் சடங்கு அடுத்த வாரம் நடைபெறவிருக்கி றது. அதற்கான ஒத்திகை நேற்று தலைநகர் பேங்காக்கில் நடந்தது. ஓராண்டுகாலம் நடந்து வந்த இறுதிச் சடங்கின் ஏற்பாடுகளில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கட்டட அமைப்புகளும் அடங்கும். ஒத்திகை சுமார் ஐந்து மணி நேரம் நடந்தது. அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் இறுதிச் சடங்கு ஐந்து நாட்களுக்கு நடை பெறும். கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மறைந்த மன்னரின் நல்லுடல் இம்மாதம் 26ஆம் தேதி தகனம் செய்யப்படும். அரண்மனைக்கு அருகே நடை பெற்ற ஒத்திகையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

ஜோகூரில் பஸ் குப்புறக் கவிழ்ந்தது; இருவர் காயம்; 45 பேர் உயிர் தப்பினர்

ஜோகூர் பாரு: உலு திராமில் இருந்து கோத்தா திங்கிக்கு 47 பேருடன் சென்று கொண்டிருந்த விரைவுப் பேருந்து ஒன்று சாலையில் இருந்து வழுக்கி குப்புறக் கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் இருவருக்கு பலத்த காயம். இந்தச் சம்பவம் குறித்து நேற்று காலை 9.47 மணிக்கு தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி தீயணைப்புப் பிரிவின் தளபதி°ஜஃபார் மஹ்மூட் கூறினார். விசாரணையில் அந்தப் பேருந்து சாலையில் வழுக்கிச் சென்று குப்புறக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவை எதிர்கொள்ள ஆயத்தமாகிறது தென்கொரியா

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் மைக் பொம்பியோ

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மாபெரும் மிரட்டலாக இருந்து வரும் வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத ஆற்றலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா அதன் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது தென்கொரியாவிடம் “ஹியுன்மூ IV” என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஏவுகணை உள்ளது.

பிலிப்பீன்ஸ்: ராணுவ ஆட்சி தொடரும்

மணிலா: பிலிப்பீன்ஸின் மிண்டானோ பகுதியில் கடைசிப் பயங்கரவாதியை ஒழிக்கும் வரை ராணுவ ஆட்சி நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் டுட்டர்டே நேற்று கூறினார். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மராவி நகரம் முற்றிலும் மீட்கப்பட்டு விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அறிவித்தார். மிண்டானோ பகுதியில் கடந்த மே மாதம் 23ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை அப்பகுதியில் ராணுவ ஆட்சி நீடிக்கும் என்று அதிபர் டுட்டர்டே கூறியுள்ளார்.

கிழக்கு சிரியாவில் ரஷ்ய விமானத் தாக்குதல்: 16 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர். சிரியாவின் கிழக்குப் பகுதியின் ஒரு பகுதி ஐஎஸ் போராளிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. அவர்களுக்கு சிரியப் படையின் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் போர்ச் சூழலில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்குள்ள பொதுமக்கள் அருகேயுள்ள அபு கமல் என்னும் கிராமத்திற்குச் செல்ல முனை கின்றனர். அந்தக் கிராமத்திற்குச் செல்ல அவர்கள் மிக நீளமான இயுப்ரேட்ஸ் என்னும் ஆற்றைக் கடக்க வேண்டும்.

ஈராக்: கிர்குக் பகுதியை விட்டு 100,000 குர்தியர்கள் வெளியேற்றம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள கிர்குக் வட்டாரம் ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது முதல் இதுவரை 100,000க்கும் அதிகமா னோர் அச்சத்தின் காரணமாக அப்பகுதியைவிட்டு வெளியேறி யுள்ளனர் என்று குர்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஈராக்கின் வடக்குப் பகுதி களில் வசித்து வந்த ஆயிரக் கணக்கான குர்தியர்கள், ஈராக் ராணுவத்தினரால் விரட்டப் பட்டுள்ளனர். குர்தியர்களின் வீடுகள், கடைகள் என அனைத்தையும் ராணுவத்தினர் சூறையாடியுள் ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஈராக்கிய ராணுவம் இது போன்ற தகாத செயல்களில் ஈடு படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா வலி யுறுத்தியுள்ளது.

மலேசிய ஐஎஸ் போராளி மராவியில் கொல்லப்பட்டிருக்கலாம்

மணிலா மராவியின் தெற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 13 போராளிகளில் மலேசியாவைச் சேர்ந்த முக்கிய போராளியான மஹ்முட் அகமதும் (படம்) ஒருவராக இருக்கக்கூடும் என்று பிலிப்பீன்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மஹ்முட் அந்தப் பகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது என்றும் அந்தப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளும் அவ்வாறு கூறியதாக ரனாவ் படையின் தலைவர் கர்னல் ரோமியோ °பரான்வர் கூறியுள்ளார்.

சந்தேகப் பேர்வழி வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவன்

கோலாலம்பூர் மலேசியாவில் பீர் திருவிழாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்ட 19 வயது சந்தேகப் பேர்வழி வெடிகுண்டு தயாரிப்பதில் இதே திறன் படைத்த இறந்த மற்றொரு மலேசிய போராளியுடன் போட்டி போடக்கூடியவன் என்று கூறப்படுகிறது. அந்த சந்தேகப் பேர்வழி சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் நடைபெறவிருந்த பீர் திருவிழாவிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக இவன் கைது செய்யப்பட்டிருப்பதாக தி ஸ்டார் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஜசின்டா ஆர்டன்

வெல்லிங்டன் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். தொழிற் கட்சியின் ஜசின்டா ஆர்டன், சென்ற மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அந்நாட்டின் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. நியூசிலாந்தின் இரு பெரிய கட்சிகளான தேசிய கட்சி 56 இடங்களிலும் தொழிற் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரு கட்சிகளில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான இடங்களைக் கைப்பற்றவில்லை. மூன்றாவது நிலையில் ஒன்பதே இடங்களில் வெற்றி பெற்ற வின்ஸ்டன் பீட்டர்சின் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியே ஆட்சி அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்திருந்தது.

Pages