உல‌க‌ம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஜனவரி 25ஆம் தேதி இரவு சூறாவளி கிர்ரிலி கரையைக் கடந்தது.
காஸா: இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப் பெரிய வளாகத்தை இஸ்ரேலிய பீரங்கிகள் தாக்கி ‘பேரளவிலான உயிரிழப்புகளை’ ஏற்படுத்தி உள்ளதாக ஐநா ஜனவரி 24 அன்று கூறியது. ஆனால், இஸ்‌ரேல் அதனை மறுத்துள்ளது.
புத்ராஜெயா: மலேசியாவில் இணையக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்றை அரசாங்கம் அமைக்கும். அந்தக் குழு, அரசியல் கட்சிகளிடமும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமும் (எம்சிஎம்சி) இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் சட்டங்களை மதிப்பீடு செய்யும்.
தன் பணிமனையை கார்கள் மறைத்துக்கொண்டிருந்ததால்,மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு ஹசன் அல் ரசாக், பளுதூக்கி ஒன்றை வைத்து அவற்றை அப்புறப்படுத்தினார்.
தோக்கியோ: ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற உயிரோவிய ஸ்டுடியோவில் தீ வைத்து 36 பேரை கொன்றதற்காக ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பொது ஊடகமான என்எச்கே இந்த விவரத்தை வியாழக்கிழமை (25 ஜனவரி) அன்று வெளியிட்டது.