You are here

உல‌க‌ம்

மலேசியா: இளம்பெண் உட்பட இருவர் வெட்டிக் கொலை

மைதுரி ராஜா, 23

இளம்பெண் உட்பட இரு மலேசிய இந்தி யர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோலாலம்பூரில் அரங் கேறியுள்ளது. கொல்லப்பட்டோ ரில் ஒருவரான மைதுரி ராஜா, 23 (படம்), மிகவும் நல்ல பெண் என்றும் கருணை மிக்கவர் என்றும் சிகே8 என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அவரது நண்பர் கூறினார். கடந்த வியாழனன்று அதிகாலை 3.30 மணிக்கு தம் தோழி கொலை செய்யப்பட்டார் என்று தொலைபேசி வழியாகத் தமக்குத் தகவல் கிட்டிய தாக 22 வயது சிகே8 சொன்னார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம்: இலங்கை

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடை யிலான இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்ற இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து எங்கு வேண்டுமானாலும் விவா தம் நடத்தப்படலாம்.

ஆனால், நான் அதிபராக இருக்கும் வரை அவை தொடர்பான விசா ரணையில் வெளிநாட்டு நீதிபதி களை அனுமதிக்க முடியாது.

தைவான் ரயிலில் வெடிப்பு: 25 பேர் காயம்

தைவான் ரயிலில் வெடிப்பு: 25 பேர் காயம்

தைப்பே: தைவானில் ஒரு பயணிகள் ரயிலில் வெடி பொருள்களை வெடிக்கச் செய்தது தொடர்பில் 55 வயதான சந்தேகப் பேர்வழி ஒருவரை அந்நாட்டுப் போலிசார் கைது செய்துள்ளனர். அந்த வெடிப்பில் காயமடைந்த 25 பேரில் அந்த நபரும் ஒருவர். அவரது புனைப்பெயர் லின். அந்த வெடிப்பு பயங்கரவாதத் தொடர்பிலானது அல்ல என்று முதல்கட்ட தகவல்கள் உணர்த்து வதாக போலிசார் கூறினர்.

ஈராக்கில் ஐஎஸ் தாக்குதல்: பலர் பலி

பாக்தாத்தில் குண்டு வெடித்த இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே குண்டு வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாத் நகரில் இருந்து வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் பலாட் என்ற இடத்தில் ‌ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலமும் அதற்கு அருகில் ஒரு பள்ளிவாசலும் உள்ளன. வியாழக்கிழமை இரவு அந்த பள்ளிவாசல் மீது போராளிகள் ‘மோர்ட்டார்’ ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஒபாமா: போலிசார் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்

டாலஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்: படம்: ஏஎஃப்பி

வார்சா: அமெரிக்காவின் டாலஸ் நகரில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்துள்ளது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட கொடிய, திட்டமிட்ட தாக்குதல் அது என்றும் அது வெறுக்கத் தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “சட்ட அமலாக்க அதிகாரி களுக்கு எதிராக நடத்தப்படும் எந்த ஒரு வன்முறைக்கும் அல்லது இத்தகைய தாக்குதல் களுக்கும் எந்தக் காரணமுமே கூற முடியாது என்று திரு ஒபாமா கூறினார்.

ஐஎஸ்ஐஎஸ் சந்தேக நபர்கள் பலர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர் புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப் பட்டுள்ளதாக மலேசியாவின் தலைமை போலிஸ் அதிகாரி காலிட் அபு பக்கர் கூறியுள்ளார். தலைமைச் சட்ட அதிகாரி முகமது அபாண்டி அலியின் இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெரு நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், கைது பற்றி ‘தி ஸ்டார்’ செய்தியாளரிடம் உறுதி தெரி வித்தார். அதே நேரம் கடந்த வாரம் பூச்சோங் இரவு விடுதியில் நடை பெற்ற கையெறி குண்டு சம்ப வத்தில் மேலும் இரு சந்தேக நபர் களைத் தேடும் வேட்டை தொடரு வதாகவும் திரு காலிட் தெரிவித்தார்.

பங்ளாதே‌ஷில் மீண்டும் தாக்குதல்; பெருநாள் தொழுகைத் திடல் அருகே குண்டு வெடிப்பு

பங்ளாதே‌ஷில் நேற்றும் ஒரு பயங் கரவாதத் தாக்குதல் நடத்தப்பட் டது. கிட்டத்தட்ட 200,000 பேர் ஒன்று கூடி நோன்புப் பெருநாள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த வேளையில் தொழுகை இடத்துக்கு அருகே குண்டு ஒன்று வெடித்தது. பங்ளாதே‌ஷின் வடக்குப் பகுதி யில் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு திடலில் பெருநாள் தொழுகை நேற்றுக் காலை அமைதியாக நடந்துகொண்டு இருந்தது. அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்காக ஏராள மான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். காலை 9 மணியளவில் ஆயுதங் களோடு ஒரு கும்பல் அந்த இடத்தை நெருங்கியது.

மலேசியப் பள்ளிக்கூடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு உரை நிகழ்த்த ஏற்பாடு

பள்ளிக்கூடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு உரைகளை இடம் பெறச் செய்வது குறித்து போலி சாருடன் மலேசிய கல்வி அமைச்சு ஆலோசித்து வருகிறது. கல்வி துணை அமைச்சர் சோங் சின் ஊன் நேற்று இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு நட வடிக்கையின் தொடக்கநிலை யாக இது இருக்கும் என்றும் இதன் மூலம் ஐஎஸ் சித்தாந்தம் பள்ளிக்கூடங்களுக்குப் பரவி விடாமல் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒன்றுகூடிய மக்கள்

ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் ஒன்றுகூடிய மக்கள்

ஈராக்கில் சென்ற வார இறுதியில் கார் குண்டு வெடித்த பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். தலைநகர் பாக்தாத்திலுள்ள கராடா பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல கடைகள் உள்ள அப்பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் திரண்டிருந்தபோது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 245 பேர் உயிரிழந்தனர்; சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் அந்த கடைத்தொகுதி சில நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் நோன்புப் பெருநாளான நேற்று அப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடினர். படம்: ராய்ட்டர்ஸ்

தைவான் முதியோர் இல்லத்தில் தீ: ஐவர் மரணம்; பலர் காயம்

முதியோர் இல்லத்தில் தீ மூண்டதைத் தொடர்ந்து உறவினர் ஒருவர் கதறி அழகிறார். அவருக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவானில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று மூண்ட தீயில் அங்கிருந்த முதியவர்களில் ஐந்து பேர் மரணம் அடைந்ததாகவும் மேலும் 29 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். அங்கு தீ மூண்டதும் உடனடியாக முதியவர்கள் பலர் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பத்து மாடிகளைக் கொண்ட அந்த இல்லத்தின் மூன்றாவது மாடியில் மூவர் இறந்து கிடந்த தாகவும் காயமுற்றிருந்த 31 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

Pages