உல‌க‌ம்

பெய்ஜிங்: தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அதை உறுதிபட எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் ஜனவரி 14ஆம் தேதியன்று தெரிவித்தது.
பிரபல ‘குவேக்கர் ஓட்ஸ் கம்பெனி’ அதன் உணவுப் பொருள்களை மீட்டு வரும் பட்சத்தில் மேலும் அதிகமானவற்றை அந்தப் பட்டியலில் கடந்த சில நாள்கள் சேர்த்துக்கொண்டுள்ளது.
ஜார்ஜ்டவுன்: தண்ணீர் விநியோகத் தடையால் பினாங்கில் 590,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதியன்று மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் (பிபிஏபிபி) தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சி கிரிக்கெட் மட்டைச் சின்னத்தை இழந்துள்ளது.
தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் லாய் சிங்-டே மும்முனைப் போட்டியில் வெற்றிபெற்று உள்ளார்.