You are here

உல‌க‌ம்

பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவருக்கு நெருக்குதல்

பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவருக்கு நெருக்குதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று திரு கோர்பின் தீவிரமாக பிரசாரம் செய்தார். இந்நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேற பிரிட்டன் எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே நெருக்குதல் அதிகரித்துள்ளது.

பூச்சோங்கில் கையெறி குண்டு வீச்சு: 8 பேர் காயம்; பயங்கரவாதச் செயல் அல்ல

பூச்சோங்கில் கையெறி குண்டு வீச்சு: 8 பேர்  காயம்; பயங்கரவாதச் செயல் அல்ல

கோலாலம்பூர்: சிலாங்கூரில் பூச்சோங் போலிவார்ட் பேரங் காடியிலுள்ள இரவு கேளிக்கை விடுதியின் முன்புறம் கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் காயம் அடைந்ததாக சிலாங்கூர் மாநில போலிஸ் படை துணை ஆணையர் அப்துல் ரஹிம் ஜபார் தெரிவித்தார். இதுவொரு கையெறி குண்டுத் தாக்குதல் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். நேற்று அதிகாலை 2.15 மணியளவில் அந்த கேளிக்கை விடுதியில் கூடியிருந்தவர்கள் ஸ்பெயினுக்கும் இத்தாலிக்கும் இடையே நடந்த காற்பந்துப் போட்டியை தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு கையெறி குண்டு வெடித்ததாக அந்த அதிகாரி சொன்னார்.

‘மாற்றுக் கருத்து கொண்ட பிரிட்டிஷ் மக்களிடம் உறவை மேம்படுத்தவேண்டும்’

பிரிட்டிஷ் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும் திரு பாரிஸ் ஜான்சன்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று வாக்களித்தவர்களிடம் உறவை மேம்படுத்தும் நேரம் வந்து விட்டதாக பிரட்டிஷ் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும் திரு பாரிஸ் ஜான்சன் தெரிவித் துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் இவர் இறங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.

மஇகா துணைத் தலைவர் தேவமணிக்குப் பதவி

மஇகா துணைத் தலைவர் திரு எஸ்.கே தேவமணி

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தமது அமைச்சரவை யில் செய்யப்படும் சில மாற்றங்கள் குறித்து நேற்று பிற்பகல் அறிவிப்பு செய்தார். இரண்டு நாடாளுமன்ற உறுப் பினர்களை அமைச்சர்களாக அவர் நியமனம் செய்துள்ளார். தமக்கு ஆதரவாக இருக்கும் இருவருக்கு கூடுதல் அதிகார முள்ள பதவிகளைத் திரு நஜிப் வழங்கியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, நான்கு பேருக்குத் துணை அமைச்சர் பதவியையும் அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில், யாரும் எதிர் பார்க்காத வகையில் இரண்டாவது நிதி அமைச்சரான அகமது ஹுஸ்னி ஹனஸ்ட்லா பதவி விலகியுள்ளார்.

மலேசியாவில் தட்டம்மைத் தொற்று 340 விழுக்காடு உயர்வு

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தட்டம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 340 விழுக்காடு உயர்ந்துள்ளது. தட்டம்மைக்கு எதிராகப் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம் என்று மலேசியாவின் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த ஆண்டில் 1,318 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மரணம் அடைந்தனர். இவ்வாண்டில் யாரும் தட்டம்மை காரணமாக மரணம் அடையவில்லை,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மடகாஸ்கார் விளையாட்டரங்கில் வெடிகுண்டு தாக்குதல்

அந்தனராரிவோ: மடகாஸ்காரின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது கையெறி குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது இருவர் மாண்டதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விளையாட்டரங்கத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலின் காரணமாக ஏறத்தாழ 80 பேர் காயமுற்றனர். இதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று மடகாஸ்கார் அதிபர் திரு ஹெரி ராஜாவ் னாரிமாம்பியானினா அறிவித் துள்ளார். இத்தாக்குதலுக்கு அரசியலில் நிலவி வரும் கருத்து வேறுபாடு தான் காரணம் என்று அவர் குறைகூறினார். “அரசியலில் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் தலைவரைப் பிடிக்காவிட்டால் பொதுமக்களைக் கொலை செய் வது சரியல்ல.

‘புடவை அணியக்கூடாது’ என்றது அழைப்பிதழ்; மன்னிப்பு கேட்க எம்.பி. வலியுறுத்து

திரு வி. சிவகுமார். படம்: தகவல் சாதனம்

பெட்டாலிங் ஜெயா: ஈப்போ நகர மன்றத்தின் ஊழியர்களுக்கான நோன்புப் பெருநாள் விருந்தில் புடவை அணிந்து வரக்கூடாது என்ற விதிமுறை மன்றத்தின் அழைப்பிதழில் இடம்பெற்றதை அடுத்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. விருந்துக்கு வருபவர்கள் அவரவர் பாரம்பரிய உடைகளில் வரலாம் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் புடவைக்கு மட்டும் தடை விதிக்கப் பட்டிருந்தது.

சோமாலியாவில் தாக்குதல்: 15 பேர் மரணம்

தாக்குதலில் மாண்டவர்களைப் பார்வையிடும் சோமாலிய ராணுவ வீரர்கள்.

மொகாடி‌ஷு: சோமாலியத் தலை நகர் மொகாடி‌ஷுவில் உள்ள ஹோட்டலில் பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப் தாக்குதல் நடத்தியதில் குறைந் தது 15 பேர் மாண்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித் துள்ளனர். தாக்குதலில் பலர் காயமுற்றனர் மொகாடி‌ஷுவின் மையப் பகுதியில் உள்ள நாசா ஹப்லோட் ஹோட்டலில் முதலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயங்கர வாதிகள் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் மாண்டவர்களில் பொதுமக்கள், பயங்கரவாதிகள், ஹோட்டல் பாதுகாவலர்கள் ஆகியோரும் அடங்குவர்.

வெஸ்ட் வெர்ஜினியாவுக்கு பேரிடர் உதவி

வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு  வீடு. படம்: ஏஎப்ப

சால்ஸ்டன்: அமெரிக்க மாநிலம் வெஸ்ட் வெர்ஜினியா வில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 24க்கு உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மாநிலம் மிக மோசமான பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தாக அதிபர் ஒபாமா கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிகளை உடனடியாக வழங்க அதிபர் ஒபாமா ஆணையிட்டுள்ளார்.

பிரிட்டன்: தொழிற்கட்சியில் குழப்பம்

தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளி யேறியதை அடுத்து அந்நாட்டைச் சூழ்ந்திருக்கும் குழப்பநிலை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி யையும் விடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்ற பிரசாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதம் திருப்திகரமானதாக அமை யவில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொந்தளிக்கின் றனர். அக்கட்சியின் நிழல் அமைச்சரவையைச் சேர்ந்த பாதி பேர் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக நிழல் சுகாதாரச் செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

Pages