You are here

உல‌க‌ம்

அதிகாரிகளிடமிருந்து மீட்ட ஊழல் தொகை 114 மி.ரிங்கிட்

படம்: தி ஸ்டார்     

கோத்தாகினபாலு: மலேசியாவில் ஊழல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாபா நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் இருவரிடமிருந்து மொத்தம் 114 மில்லியன் ரிங்கிட் தொகையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ளது. ரொக்கமாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்தும் ஆணையம் கைப்பற்றியுள்ள மொத்தத் தொகை இது. 49 ஆண்டுகால வரலாற்றில் அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப் பட்ட லஞ்ச/ஊழல் விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ள மிகப் பெரிய தொகை இது என்று கூறப்பட்டது.

போராளிகள் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் சிரியா மக்கள்

ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து தப்பி வரும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடுவதாக தகவல்கள் கூறுகின்றன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட் ஏராளமானோர் ஐஎஸ் கட்டு பாட்டில் உள்ள பகுதிகளி லிருந்து வெளியேறி வருகின்றனர்.

மலேசியாவில் கைதான 9 ஆஸ்திரேலியர்கள் விடுதலை

கோலாலம்பூர்: சிப்பாங்கில் நடந்த எஃப்-1 கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் உள்ளாடையை அணிந்திருந்த 9 ஆஸ்திரேலியர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். பின்னர் நீதிமன்றம் இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தபின் விடுதலை செய்தது. தங்களின் செயலுக்காக நீதிமன்றத்தில் இந்த 9 பேரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இவர்கள் மீது நேற்று காலை குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 290ஆவது பிரிவின் கீழ் அந்த 9 ஆஸ்திரேலியர்கள் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

தென்கொரியாவில் கனமழையும் பலத்த சூறாவளியும்

படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவின் உல்லாசத்தல தீவான ஜி‌ஷுவில் தொடர்ந்து பெய்த கனமழையாலும் வீசிய பலத்த சூறாவளிக்காற்றி னாலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல தெருக்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. மோசமான பருவநிலை காரணமாக பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மின்சார விநியோகம் துண் டிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 25,000 வீடுகள் இருளில் மூழ்கிய தாக அதிகாரிகள் கூறினர். கொந்தளிப்புமிக்க கடல் அலையில் ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்தப் படகில் இருந்த 6 பேரும் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் தொலைக்காட்சித் தகவல்கள் கூறின.

கடலில் தத்தளித்த குடியேறிகளுக்கு உதவிக்கரம்

PHOTO: AFP

மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியாவுக்கு அருகே கடலில் தத்தளிக்கும் குடியேறிகள் பலரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வருகின்றனர். கடல் நீரில் மூழ்கும் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர். இன்னும் பலர் மீட்புக் குழுவினரின் வருகையை எதிர்பார்த்து மூழ்கும் நிலையில் உள்ள படகில் காத்திருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளைச் சென்றடையும் நோக்கத்தில் குடியேறிகள் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்தப் படகுகளில் பல கடலில் மூழ்குவதால் அப்படகுகளில் செல்வோர் கடலில் தத்தளிக்க நேரிடுகிறது. பலரை இத்தாலிய மற்றும் லிபிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

அன்வார்-முகைதின் சந்திப்பு

மலேசிய எதிர்க் கட்சியின் முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: மலேசிய எதிர்க் கட்சியின் முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிமும் மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) என்று அழைக்கப்படும் புதிய கட்சியின் இடைக்காலத் தலைவரான முகைதின், நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த கெஅடிலான் கட்சி ஆலோசகர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசினார். அன்வாருடன் 30 நிமிடம் முகைதின் பேசியதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திரு முகைதின், கட்சி ஒற்றுமை குறித்து தாங்கள் பேசியதாகக் கூறினார்.

ஒரே நாளில் 6,055 பேர் கடலில் மீட்பு

கடலில் தத்தளிக்கும் குடியேறியை மீட்கும் அதிகாரி. படம்: ஏஎஃப்பி

ரோம்: லிபியாவிலிருந்து ஐரோப்பா வுக்குக் கடல் வழியாகத் தப்பிக்க முயன்ற ஆயிரக்கணக்கான குடி யேறிகள் காப்பாற்றப்பட்டுள்ள தாக இத்தாலி, லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அந்த அபாயகரமான கடல் வழிப் பயணத்தை மேற்கொண்ட ஏறத் தாழ 6,055 குடியேறிகள் காப்பற்றப் பட்டனர். 22 பேர் கடலில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர்.

எஃப்1ல் ஆடை களைந்தோர் மீது நடவடிக்கை

படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தின்போது தங்கள் ஆடைகளைக் கழற்றி உள்ளா டைகளுடன் நின்று கொண் டிருந்த ஒன்பது ஆஸ்திரேலி யர்கள் அநாகரிகக் குற்றச் சாட்டை எதிர்நோக்கக்கூடும். அல்லது அவர்கள் அனைவரும் மலேசியாவிலிருந்து வெளி யேற்றப்படலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஒன்பது பேரும் மலேசியக் கொடியின் வடி வமைப்பிலான உள்ளாடை களை அணிந்துகொண்டு தங்கள் காலணிகளில் பீர் ஊற்றிக் குடிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளி களும் வலம் வந்ததை அடுத்து அவர்களுக்கு எதிராகக் கடு மையான எதிர்ப்பு கிளம்பியது.

ஒரே நாளில் 6,055 பேர் கடலில் மீட்பு

ரோம்: லிபியாவிலிருந்து ஐரோப்பா வுக்குக் கடல் வழியாகத் தப்பிக்க முயன்ற ஆயிரக்கணக்கான குடி யேறிகள் காப்பாற்றப்பட்டுள்ள தாக இத்தாலி, லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அந்த அபாயகரமான கடல் வழிப் பயணத்தை மேற்கொண்ட ஏறத் தாழ 6,055 குடியேறிகள் காப்பற்றப் பட்டனர். 22 பேர் கடலில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர்.

போதைப்பொருள் வைத்திருந்த சிங்கப்பூரர் இந்தோனீசியாவில் கைது

ஜகார்த்தா: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தோனீசிய விமான நிலைய அதிகாரிகள் சிங்கப்பூரர் ஒரு வரைக் கைது செய்துள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண் டாவது சிங்கப்பூரர் ஆவார். பாலி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கோ தியாம் ஆன் டெஸ்மண்ட் என்று அடையாளம் காணப் பட்டுள்ள அந்த ஆடவரிடம் 1.47 கிராம் மெதம்ஃபெடமினும் இரண்டு எக்ஸ்டசி மாத்திரை களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Pages