You are here

உல‌க‌ம்

‘1எம்டிபி விசாரணை முடிவடைய சில காலம் பிடிக்கும்’

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரம் தொடர்பில் போலிசார்
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய
மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர்,
விசாரணையை விரைவில் முடிக்குமாறு போலிசாரை
நெருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பலரின்
வாக்குமூலங்களை போலிசார் பதிவு செய்ய
வேண்டியிருப்பதால் விசாரணை முடிவுற சில காலம்
பிடிக்கும் என்று திரு காலிட் கூறினார். சிலரின்
வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இரு வாரங்கள்கூட
ஆகிறது என்றும் அவர் கூறினார்.

ஆசியான்: தென் சீனக் கடலில் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்

சீன வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (வலமிருந்து 2வது),

வியன்டியான்: தென் சீனக் கடற் பகுதியில் சீனா உரிமை கொண் டாடுவதை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஆசியான் நாடுகளுக்கு இடையே மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணுவமற்ற தென் சீனக் கடலின் முக்கியத்து வத்தை வலியுறுத்திய ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், அங்கு எல்லா நடவடிக்கைகளிலிருந்தும் சுயமாக விலகியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அண்மைய அனைத் துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அமைச்சர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரான்ஸ் எல்லையில் சோதனை; போக்குவரத்து நிலைகுத்தியது

பிரான்ஸ் எல்லையில் சோதனை; போக்குவரத்து நிலைகுத்தியது

பிரான்ஸ் எல்லையில் ஞாயிறு அன்று காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதால் 15 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விடுமுறையை முடித்து இங்கிலாந்தின் தென் முனையான டோவர் துறைமுகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டவர்கள் வாகனத்திலேயே சிக்கி பல மணி நேரம் புழுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 12 மைல் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி

மொவிடா வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் ஆறு பேர் நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான ஃபசார் நோர்

பெட்டாலிங் ஜெயா: மொவிடா உணவகம், மதுபானக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புள்ளதாக சந் தேகிக்கப்படும் ஆறு ஐஎஸ் தீவிர வாதிகள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்ட இமாம் வஹ் யூடின் கர்ஜோனோ, 21, தொழிற் சாலை ஊழியர் ஜஹாலி என்று அழைக்கப்படும் ஜோனியஸ் ஒன்டி, 24, ஆகிய இருவர் மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பிரதமர் நஜிப்: உங்கள் களங்கத்தைப் போக்குக

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறையின் வழக்குகளில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் தங்கள் மீதான களங்கத்தை போக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். விசாரணையில் அரசாங்கம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று கூறிய அவர், 1எம்டிபி தொடர்பில் பொதுமக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதிப்படுத் தினார். “பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் மீதான களங்கம் அகற்றப் படுவதற்-கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இதைத்தான் அர சாங்கம் விரும்புகிறது,” என்று திரு நஜிப் சொன்னார்.

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலிஸ் மலைப்பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள நீச்சல் குளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிக வெப்பம் காரணமாகவும் பலத்த காற்று வீசுவதாலும் அப்பகுதியில் காட்டுத் தீ பரவுவதாக அதிகாரிகள் கூறினர். காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் சுமார் 900 தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

ஆப்கான் அதிபர்: தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் கொல்லப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று துக்க தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி சூளுரைத்தார். ஆப்கான் தலைநகர் காபூலில் ஹஸாரா சிறுபான்மை இனத்தவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப் பட்டனர்.

சீனாவில் கனமழை: பலர் பலி; ஏராளமானோர் வெளியேற்றம்

சீனாவில் கனமழை: பலர் பலி; ஏராளமானோர் வெளியேற்றம்

சீனாவில் கடந்த ஒருவாரமாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் சிக்கி குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. பல பகுதிகளில் 18,000க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி இந்த மாநிலத்தில் 7.2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஹுபெய் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 11 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். சீனாவின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இந்தப் பேரிடரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்தார் ஹில்லரி

அமெரிக்க செனட்டர் டிம் கெய்னை துணை அதிபர் வேட்பாளராக ஹில்லரி கிளின்டன் தேர்வு செய்துள்ளார்.

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளரை திருவாட்டி ஹில்லரி கிளின்டன் தேர்வு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ஹில்லரி, அமெரிக்க செனட்டர் டிம் கெய்னை துணை அதிபர் வேட்பாளராக தான் தேர்ந் தெடுத்திருப்பதாக அறிவித்துள் ளார்.

டிரம்ப்: மிரட்டல்களை சமாளிப்பேன்

70 வயது கோடீஸ்வரர் டோனல்ட் டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா எதிர் நோக்கும் பல்வேறு மிரட்டல் களை வெற்றிகரமாக சமாளிக்கப் போவதாக திரு டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசுக் கட்சியின் நியமனத்தை ஏற்றுக்கொண்ட பிறகு கட்சியின் மாநாட்டில் அவர் உரையாற்றினார். தன்னை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கிளிவ்லேண்ட் நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், “நமது நாட்டை இன்று அச்சுறுத்தும் குற்றச்செயல்களும் வன்முறைச் சம்பவங்களும் விரைவில் முடிவுக்கு வரும்,” என்று உறுதி அளித்தார்.

Pages