You are here

உல‌க‌ம்

மியன்மார் அமைதி முயற்சியில் பல இனக் குழுக்கள் பங்கேற்பு

அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பல்வேறு இனக் குழுக்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும். படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் பல ஆண்டுகளாக நீடிக்கும் இனக் கலவரங்களுக்கு முடிவு கட்டும் விதமாக அரசு ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சில் ஆயுதம் ஏந்திப் போராடிய பலதரப்பட்ட இனக் குழுக்கள் பங்கேற்றன. தலைநகரில் 17 இனக் குழுக் களை உள்ளடக்கிய அமைதிப் பேச்சுக் கூட்டத்தை ஆங் சான் சூச்சியும் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் தொடங்கி வைத் தனர். இந்தக்கூட்டத்தின் மூலம் இனக் குழுக்களிடமிருந்து ஆயு தங்களைக் களையச் செய்ய முடியும் என்று அரசு நம்புகிறது.

மலேசியாவில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

படம்: தி ஸ்டார்

மலே­சி­யா­வின் பத்­து­மலை­யி­லுள்ள ஓர் இந்­துக் கோயில், சில கேளிக்கை விடு­தி­கள், காவல் நிலை­யங்கள் ஆகி­ய­வற்­றில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­ட­தாக ஐஎஸ் தீவி­ர­வா­தி­கள் என சந்­தே­கிக்­கப்­படும் 3 பேரை மலே­சிய தீவிரவாதத் தடுப்புப் போலி­சார் நேற்று முன்தினம் கைது செய்­துள்­ள­னர். மலே­சி­யா­வின் தேசிய தினத் திற்கு முந்தைய நாளில் வெடி­குண்டு, துப்­பாக்கி போன்ற ஆயு ­தங்க­ளால் மேற்­கண்ட இடங்களில் தாக்­கு­தல் நடத்த இந்த மூவ­ரும் திட்­ட­மிட்­டி­ருந்தது தெரிய வந்­ துள்­ளது.

லிபியா அருகே 6,500 குடியேறிகள் மீட்பு

சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

ரோம்: லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியி லிருந்து திங்கட்கிழமை 6,500 குடியேறிகள் பத்திரமாக மீட்கப் பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர் கூறினர். பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரின் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளால் இது சாத்தியமானது என்று இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிர்கிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டது

படம்: @MICHAELAGEEV / TWITTER

பெய்ஜிங்: கிர்கிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அது “தீவிரவாத மற்றும் வன்முறைத் தாக்குதல்,” என்று சீன வெளியுறவு அமைச்சு தெரி வித்துள்ளது.

அந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தாக்கு தலுக்குக் காரணமானவர் களைக் கண்டுபிடிக்குமாறு கிர்கிஸ்தான் அதிகாரிகளை சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாய்லாந்தில் ஸிக்கா பாதிப்பு

தாய்லாந்தில் சாலையோரங்களில் பூச்சி மருந்து அடிக்கும் சுற்றுப்புறத் துறை ஊழியர்.

பேங்காக்: தாய்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக ஸிக்கா கிருமி தொற்றுவது அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கான ஐரோப்பிய நிலையப் புள்ளிவிவரத் தகவல் தெரிவித்துள்ளது. ஸிக்கா நோய்க்கு காரணமான கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கத் தாய்லாந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த நிலையத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஸிக்கா கிருமி தொற்றிய நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களில் அக்கிருமி மேலும் பரவுவதைத் தடுக்க உடனடியாக அவசர நடவடிக்கை நிலையங்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘தி எட்ஜ்’ குழுமத்திற்கு அமைச்சர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

‘தி எட்ஜ்’ குழுமத்திற்கு அமைச்சர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரம் தொடர்பில் செய்தி வெளியிட்டதற்காக தி எட்ஜ் நாளேடு மற்றும் வார சஞ்சிகை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு மலேசிய உள்துறை அமைச்சு சென்ற ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அத்தகைய உத்தரவினால் ‘தி எட்ஜ்’ குழுமத்திற்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடியும் அமைச்சின் தலைமைச் செயலாளரும் செலுத்த வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகை குறித்து உள்துறை அமைச்சு தாக்கல் செய்திருந்த மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு நேற்று தள்ளுபடி செய்தது.

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப் போர்

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப் போர்

லிபியாவில் முன்னாள்அதிபர் கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின் பல போராளிக் குழுக்கள் உருவாகியுள்ளன. போதாக் குறைக்கு மத்திய கிழக்கின் பல பகுதிகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவினர் தொடர்ந்து பல நாடுகளின் பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக விளங்கி வருகின்றனர். படத்தில் லிபியாவின் ஐநா அங்கீகாரம் பெற்ற அரசாங்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பார்க்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

தொழிலதிபர் காருக்கு தீ வைத்தவர் கைது

கோலாலம்பூர்: மலேசியத் தலை நகருக்கு வடக்கே உள்ள கெப்போங் துணை நகரத்தில் தொழிலதிபர் ஒருவரின் காருக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு தனது காரை நிறுத்திவிட்டுச் சென்ற அந்தத் தொழிலதிபரின் கார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட வுள்ளது. தீக்கிரையான மெர்சிடிஸ் கார். படம்: தி ஸ்டார்

பிரசல்சில் மீண்டும் பயங்கரம்

பிரசல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த மார்ச் மாதம் அந்நாட்டின் விமான நிலையத்தின் மீதும் பெருநகரப் பகுதியின் மீதும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மேற் கொண்ட தாக்குதலில் 32 பேர் மரணமடைந்தனர். அதிலிருந்தே அந்நாட்டில் பயங் கரவாதத் தாக்குதல் மீண்டும் எந் நேரமும் நடக்கலாம் என்ற அச்சத் தில் அங்கு பாதுகாப்பு படையினர் முழு விழிப்புநிலையில் வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அதி காலை அந்நாட்டு நேரப்படி 2.30 மணிக்கு பிரசல்சில் உள்ள குற்ற வியல் ஆய்வு நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேவாலயம் மீது தாக்குதல், பதின்ம வயதினர் கைது

தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவனை பொதுமக்களில் சிலர் மடக்கிப் பிடித்தனர். அவனை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: மேடான் நகரில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக பதின்ம வயதினர் ஒருவரை இந்தோனீசிய காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவனிடமிருந்து நாட்டு வெடி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப் பட்டது. செயின்ட் யோசஃப் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து அந்த 17 வயது இளையரும் உட்கார்ந்து இருந்தான்.

Pages