You are here

உல‌க‌ம்

தைவானைத் தாக்கும் சூறாவளிக் காற்று

வீசிய பலத்த காற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கீழே விழுந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானைத் தாக்கும் கடும் சூறாவளிக் காற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்களும் அலு வலகங்களும் மூடப்பட்டன. பலத்த காற்று வீசுவதால் நூற்றுக்கணக் கான விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களில் தைவானைத் தாக்கும் மூன்றாவது சூறாவளிக் காற்று இதுவாகும். தைவானின் கிழக்குப் பகுதி யில் பலத்த சூறாவளிக் காற்று வீசுவதுடன் கனமழையும் தொடர்ந்து பெய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் 650,000 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நேரடி விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியது

விவாதத்திற்குப் பிறகு ஹில்லரியும் டிரம்பும் கை குலுக்கிக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கும் இடையே நியூயார்க்கில் நேற்று நடந்த முதல் சுற்று விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியுள்ளது. குறிப்பாக அந்த நேரடி விவாதத்தை தொலைக் காட்சி யிலும் ஃபேஸ்புக் போன்ற இணைப் பக்கங்கள் மூலமாகவும் பார்த்த ஆசிய நாட்டவர்கள் பலர் ஹில்லரிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே என்றும் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் பேர் அந்த நேரடி விவாதத்தைப் பார்த்ததாகக் கூறப்பட்டது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 2108 பேரை பாகிஸ்தான் போலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று அனைத்துலக தொண்டூழிய நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளை அமைத்து செயல்படுகிறது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் போலி என்கவுன்ட்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டு போலிசார் எவ்வித விசாரணையும் இன்றி பலரைச் சுட்டுக் கொன்று வருகின்றனர்.

உலகில் 90 விழுக்காட்டினர் அசுத்த காற்றையே சுவாசிக்கின்றனர்

ஜெனிவா: உலகில் 90 விழுக்காட்டினர் அசுத்தமான காற்றையே சுவாசித்து வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றுமாசினால் ஆண்டுக்கு 6 மில்லியன் பேர் மரணம் அடைவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே காற்று தூய்மைக்கேட்டுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் பல பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் இதுதொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அலெப்போவில் தாக்குதல்; ரஷ்யா மீது குற்றச்சாட்டு

டமாஸ்கஸ்: சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அரசாங்கப் படைக்கு ஆதரவாக ரஷ்யப் போர் விமானங்களும் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. தொடரும் தாக்குதல்களில் அங்கு குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் அதிமானோர் உயிர் இழந்ததாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் சிரியா நிலவரம் குறித்து கண்காணித்து வரும் மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

மெக்சிகோ சிட்டியில் டிரம்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ சிட்டியில் டிரம்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ சிட்டி: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடவுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கு எதிராக மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மெக்சிகோவில் வசிக்கும் அமெரிக்கர்கள் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலி யுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மெக்சிகோ நாட்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் டிரம்ப் மீது தாங்கள் கொண்டுள்ள சினத்தை வெளிப் படுத்தினர்.

மலேசிய ஆயுதப் படையில் ஒரு விழுக்காட்டினருக்கு ஐஎஸ் தொடர்பு

கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப் படையினரில் ஒரு விழுக் காட்டினர்தான் ஐஎஸ் தொடர்பைக் கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் தெரிவித்துள்ளார். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்ற போதிலும் தற்காப்பு அமைச்சு இதனைக் கடுமையாகக் கருதுகிறது என்றும் பாதுகாப்புத் துறையினரிடையே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகள் பரவாமல் தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்கும்படி தாம் உத்தரவிட் டிருப்பதாகவும் அமைச்சர் சொன் னார்.

பயணக் களைப்பால் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை பாதிப்பு

யங்கூன்: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மியன்மார் திரும்பிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் உடல்நிலை பயணக் களைப்பால் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் கூறியது. பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்குப் பயணம் மேற் கொண்டிருந்த திருவாட்டி சூச்சி வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் சாப்பிடத் தவறியதால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பாலம் சரிந்ததில் மூவர் பலி

படம்: ஜகார்த்தா போலிஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு பாலம் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்ததாகவும் நால்வர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது அந்தப் பாலம் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

நேரடி விவாதத்தில் இன்று ஹில்லரி=டிரம்ப் மோதல்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும் இன்று நேரடி விவாதத்தில் மோதுகின்றனர். இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்றிரவு விவாதம் நடக்கிறது. அதில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளில் நேரடியாகப் பேசி கருத்துகளைத் தெரிவிக்க வுள்ளனர்.

Pages