You are here

உல‌க‌ம்

நஜிப்: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்

கோலாலம்பூர்: நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் உள்பட தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதன் காரணமாக மலேசிய அரசாங்கம் கடுமையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார். மலேசியாவில் அண்மையில் நடப்புக்கு கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டம் குறித்து பலர் குறை கூறி வரும் வேளையில் திரு நஜிப் இவ்வாறு கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் ஒரு வீட்டுக்குள் நுழைகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதே‌ஷில் டாக்கா அருகே போராளிகள் மறைந் திருக்கும் பகுதியில் போலிசார் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக டாக்கா தகவல் கள் கூறின. சென்ற மாதம் டாக்கா உணவகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணகர்த்தா என்று சந்தேகிக் கப்படும் டமிம் செளத்ரி உள்பட மேலும் இரு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். உணவகத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை முதல் தேதி டாக்காவில் உள்ள பேக்கரி உணவகத்தினுள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் அங்கிருந்த பலரை கிட்டத்தட்ட 12 மணி நேரமாகப் பிணைப்பிடித்து வைத்திருந்தனர்.

மலேசியாவில் மாணவர்கள் பேரணி

படம்: மலேசிய இணைய ஊடகம்

கோலாலம்பூர்: மலேசிய மாணவர் கள் மற்றும் இளைஞர் இயக்கங் களின் கூட்டு முயற்சியில் கோலாலம்பூரில் நேற்று நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான 1எம்டிபி நிறு வனத்தின் நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்றைய பேரணி நடத்தப்பட்டது. பேரணியை முன்னிட்டு ஆர்ப் பாட்டக்காரர்கள் நேற்று மதியம் 1.30 மணியளவில் கோலாலம்பூரில் சோகோ பேரங்காடிக்கு முன்பு ஒன்றுகூடத் தொடங்கினர்.

துருக்கியில் கார்குண்டு வெடிப்பு: பலர் பலி

படம்: ராய்ட்டர்ஸ்

அங்காரா: துருக்கியில் சிஸ்ரே நகரில் உள்ள போலிஸ் தலைமை யகத்திற்கு அருகே நேற்று கார்குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 65 பேர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். அந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்திருப்பதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

சிரியாவில் அலெப்போ நகரில் தாக்குதல்: பல சிறுவர்கள் பலி

படம்: ஏஃஎப்பி

டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரில் அரசாங்கப் படை யினருக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் அரசாங்கப் படையினர் இரு நாட்களுக்கு முன்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டதாகக் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. அவர்களுடன் சேர்த்து பொதுமக்களில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

அரசாங்கப் படையினர் நாட்டு வெடிகுண்டு களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வேளை யில் அத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

சாபாவில் நிலநடுக்கம்

கோத்தா கினபாலு: சாபாவின் பல பகுதிகளை நேற்று 4.0 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் உலுக்கியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். நேற்று காலை 9.39 மணியளவில் கினபாலு மலையை ஒட்டிய சுற்று வட்டாரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கினபாலு மலையருகே உருவான இந்த நிலநடுக்கத்தை ரானாவ், கோத்தா கினபாலு, பெனம்பாங் மற்றும் துவாரான் பகுதியில் உள்ள மக்கள் உணர்ந்தனர். அதோடு, கினபாலு மலை உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மலையேறிகள் 3,080 மீட்டர் உயரத்தில் உள்ள பாகா முகாம் அருகே நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

காட்டுத் தீ: இந்தோனீசியாவில் 463 பேர் கைது

படம்: ராய்ட்டர்ஸ்

காடுகளை அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக சட்ட விரோதமாக காடுகளை அழித்து, எரித்ததாகக் கூறி இவ்வாண்டு மட்டும் 463 பேரை இந்தோனீசிய போலிசார் கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலிஸ் தலைவர் டிட்டோ கர்னாவியன் தெரிவித்துள்ளார். இத்தனை பேர் கைது செய்யப் பட்டதுடன் அரசாங்கம் எடுத்த தடுப்பு முயற்சிகள், சாதகமான காலநிலை காரணமாக காடுகளில், புதர்களில் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைந்திருப்பதாகவும் திரு டிட்டோ கூறினார்.

மியன்மாரில் புகழ்பெற்ற கோவில்கள் சேதம்

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த பகன் நகரில் உள்ள புகழ்பெற்ற பகோடா பெளத்த கோவில். படம்: ராய்ட்டர்ஸ்

யங்கூன்: மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு சிறுவர் கள் உள்பட மூவர் உயிரிழந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள மிகவும் பழமைவாய்ந்த பல கோவில்கள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த கோவில்களைப் பாதுகாக்கவும் அவற்றை சீரமைக்கவும் அரசாங்கம், ராணுவ வீரர்களையும் போலிசாரையும் அங்கு அனுப்பி உள்ளது. புதன்கிழமை ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பண்டைய நகரமான பகனில் உள்ள பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் சேதம் அடைந்தன. இந்நகரில் 2,000=லிருந்து 3,000 வரையிலான பகோடாஸ் பெளத்த கோவில்கள் உள்ளன.

காபூலில் தாக்குதல்: 13 பேர் பலி

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்குள் 10 மணி நேரமாக சிக்கியிருந்த மாணவி ஒருவரை காபூல் போலிசார் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச்செல்கின்றனர். ஏஎப்பி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத் திற்குள் துப்பாக்கிக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் பலியானதாக அந்நாட்டுப் போலிசார் கூறினர். தாக்குதலில் ஈடுபட்ட இரு துப்பாக்கிக்காரர்களும் 10 மணி நேரத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். புதன்கிழமை இரவு 7 மணிக்கு தாக்குதல் தொடங் கியதாகக் கூறப்பட்டது. தாக்குதலின்போது பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் உள்ளே சிக்கிக்கொண்டதாக போலிசார் கூறினர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பேரரசரின் அதிகாரக் குறைப்பு: மன்னிப்பு கேட்டார் மகாதீர்

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், அவரது ஆட்சிக் காலத்தில் பேரரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்திய செயலுக்காக தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தான் அன்று செய்த அந்தச் செயலால் இப்போது சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புமன்றச் சட்டமானது, பேரரசரின் ஒப்புதல் இன்றி நடப்புக்கு வந்து விட்டது என்று மகாதீர் சுட்டிக்காட்டினார்.

Pages