You are here

உல‌க‌ம்

பிரான்ஸ் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற பொது தொழிலாளர் ஊழியர் சங்க கூட்டுக் குழுவின் தலைமை செயலாளர் பிலிப் மார்ட்டினெஸ் (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்சில் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப் படவுள்ள மாற்றங்களுக்கு அங் குள்ள தொழிற்சங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் அந்நாட்டு ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளனர். இதனால், ஏற்கெனவே எரி சக்தி பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ள போக்குவரத்து கட் டமைப்பு மேலும் சீர்குலையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

ஃபலுஜா நகரை மீட்க ஈராக் ராணுவம் இறுதித் தாக்குதல்

 ஐஎஸ் நிலைகளைக் குறிவைத்து பீரங்கித் தாக்குதல் நடத்தும் ஈராக்கிய குர்தியப் படையினர். படம்: ஏஎஃப்பி

ஐஎஸ் போராளிகளின் கோட்டை யாகக் கருதப்படும் ஃபலுஜா நகரை அவர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கான இறுதிக்கட்ட தாக்குதலை ஈராக் ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.2014ஆம் ஆண்டு ஐஎஸ் வசம் சென்ற அந்த நகரை மீண்டும் தன்வசப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வாரமாகவே ஈராக் ராணுவம் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்த நகரில் பொதுமக்கள் சுமார் 50,000 பேர் சிக்கியிருப்ப தாகவும் சில நூறு குடும்பங்கள் மட்டுமே இதுவரை அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு சீனப் படகையும் இந்தோ. கைப்பற்றியது

நட்டுனா தீவின் கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் படகு. படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: நட்டுனா தீவின் கடற் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த மற்றொரு சீனப்படகை கைப்பற்றியுள்ளதாக இந்தோனீ சியா நேற்று தெரிவித்தது. சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது ‘குய் பெய் யூ’ என்ற சீனப் படகு கண்டுபிடிக்கப்பட்டு வழிமறிக்கப் பட்டது என்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இந் தோனீசிய ஆயுதப் படைகள் தெரி வித்தது. “நாங்கள் அந்தப் படகைப் பிடித்தோம். அதன் இயந்திரம் பழுதடைந்ததால் நடுனா தீவுக்கு இழுத்து வந்து கட்டி வைத்துள் ளோம்,” என்று இந்தோனீசிய கமாண்டரான ரியர் அட்மிரல் ஏ. டாஃபிக் குறிப்பிட்டார்.

 

 

சிட்னி: முதலை இழுத்துச் சென்ற பெண் மாயம்

சிட்னி விலங்கியல் தோட்டத்திலுள்ள முதலை. படம்:ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலிய கடற்கரையில் இரவில் தோழியுடன் நீச்சலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை முதலை இழுத்துச் சென்று விட்டது. இதனால் அந்தப்பெண் இறந்திருக்கலாம் என்று அஞ்சுவதாக ஆஸ்திரேலிய போலிசார் நேற்றுத் தெரிவித்தனர். ஞாயிறு இரவு குயின்ஸ்லாந்து தெற்கே தோர்ன் டோன் கடற்கரையில் முதலை களுக்குப் பெயர்போன பகுதியில் நாற்பது வயதுகளில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய பெண் கள் நீச்சலில் ஈடுபட்டனர். “இழுக்கப்பட்ட தோழியை பாதுகாப்பான பகுதிக்கு இழுத்து வருவதற்காக மற்றொரு பெண் போராடினார். ஆனால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சிறிது நேரத் தில் காணாமல் போனார்,” என்று போலிசார் கூறினர்.

புதிய அதிபரின் வேலை நேரம்

அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே, படம்: ஈபிஏ

மணிலா: பிலிப்பீன்சின் புதிய அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே, பிற்பகல் ஒரு மணியிலிருந்து நள்ளிரவு வரை மட்டுமே வேலை செய்வேன் என்று கூறியிருக்கிறார். “எனக்கு காலை 8.00 மணி முதல் 5.00 மணி வரையிலான வேலை பற்றி கவலையில்லை,” என்றார் அவர். சொந்த ஊரான டாவோவில் திரு டுட்டர்டே இருபது ஆண்டுகளுக்கு மேலாக மேயராகப் பணி யாற்றியிருக்கிறார். இதனால் அதிபர் மாளிகை வாழ்க்கை பழகும்வரை அன்றாடம் மணிலாவிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே நேற்று பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம் அவரை அடுத்த அதிபராக அறிவித்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் திரு டுட்டர்டே பங்கேற்கவில்லை.

700 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கக்கூடும்

இத்தாலிய கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

டிரிபோலி: மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மூன்று படகுகள் விபத்துக்குள்ளானதாக இத்தாலிய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகளில் சுமார் 700 குடியேறிகள் வரை கடலில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அகதி களுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹூடுட் மசோதாவுக்கு மலேசியாவில் எதிர்ப்பு

மலேசிய நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ள ஹூடுட் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஹூடுட் மசோதா நிறைவேற்றப் பட்டால் பதவி விலகுவோம் என்று போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியோங் லாயும் பிரதமர் அலுவலக அமைச்சர் மா சியவ் கியோங்கும் அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சரும் மஇகா எனும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமான எஸ். சுப் பிரமணியமும் ஹூடுட் மசோதா வுக்கு எதிராகக் குரல் கொடுத்துள் ளார். பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஹூடுட் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் மசோ தாவை தனிப்பட்ட உறுப்பினராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஐரோப்பாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

பாரிஸ்: ஐரோப்பாவின் பல பகுதிகளில் மின்னல் தாக்கிய தில் ஒருவர் பலியானதாகவும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிஸில் பூங்கா ஒன்றில் நடந்த பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற பதினொரு பேர் ஒரு மரத்திற்கு அடியில் தஞ்சம் புகுந்தபோது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் நடைபெற்ற சிறுவர்கள் காற்பந்து விளையாட்டுப் போட்டி யின்போது மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர். போலந்தின் தெற்குப் பகுதியில் ஒருவர் மலையேறிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறின.

கோவில் மடாதிபதியைக் கைது செய்ய தாய்லாந்து போலிசார் நடவடிக்கை

பேங்காக்: கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து திருடப் பட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அதை தவறாகக் கையாண்டதாக தாய்லாந்தில் உள்ள ஒரு புத்த கோவிலின் மடாதிபதியான 72 வயது தம்மசாயோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரைக் கைது செய்ய 2,200 போலிசாரும் ராணுவ வீரர்களும் அந்த தம்மாகயா புத்த ஆலயத்திற்குள் செல்லவிருப்பதாக பேங்காக் தகவல்கள் கூறுகின்றன. அந்த மடாதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் வரத் தவறியதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய போலிசார் மே 17ஆம் தேதி கைது ஆணை பிறப்பித்தனர்.

டிரம்ப் ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதல்

டிரம்ப் ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதல்

நியூயார்க்: அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் அந்நாட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர் களுக்கும் -எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலைத் தொடர்ந்து 35 பேரை போலிசார் கைது செய்தனர். மேற்கு கலிஃபோர்னிய மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றி முடிந்த பின்னர் வெளியில் அவரது ஆதரவாளர் களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலிசார் கூறினர்.

Pages