You are here

உல‌க‌ம்

சீனாவின் முன்னேற்றத்தை அமெரிக்கா தடுக்கவில்லை

அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர்

டாவோஸ்: ஆசிய வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதில் அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு, சீனாவின் முன் னேற்றத்தை தடுப்பதற்காக அல்ல என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு இந்த வட்டாரத்தின் வளர்ச்சியையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உதவும் வகையில் அமெரிக்க தற்காப்புப் படை அதன் முழு வளங்களையும் பயன்படுத்தும் என்றும் திரு கார்ட்டர் கூறினார்.

பனிப்புயல்: வீடுகளுக்குள்ளேயே இருக்க 50 மில்லியன் மக்களுக்கு ஆலோசனை

வா‌ஷிங்டனில் பனிப்புயல்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்கியதைத் தொடர்ந்து தலைநகர் வா‌ஷிங்டன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பனிப்பொழிவு வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பனிப்புயல் காரண மாக சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு உறைபனி குவியும் என எச்சரிக்கப் பட்டிருந்தது. பனிப்புயல் தற்போது வடக்கு நோக்கி வீசத் தொடங்கி யிருப்பதால் பல மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சோமாலிய உணவகம் மீது குண்டு வீச்சு; 19 பேர் பலி

படம்: ஏஎஃப்பி

மொகாடி‌ஷு: சோமாலிய நாட்டின் தலைநகர் மொகாடி‌ஷுவில் உள்ள பிரசித்தி பெற்ற கடற்கரையோர உணவு விடுதி மீது துப்பாக்கிக்காரர்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் குறைந்தது 19 பேர் பலியானதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன்- தொடர்புடைய ஷெபாப் போராளிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல் நடத்திய போராளிகளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஒருவன் பிடிபட்டுள்ளதாகவும் போலிசார் கூறினார். சோமாலியாவில் போராளிகள் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பிரெஞ்சு பிரதமர்: ஐஎஸ் தோற்கடிக்கப்படும் வரை அவசரநிலை நீடிக்கும்

பிரெஞ்சுப் பிரதமர் மெனுவல் வேல்ஸ்

பாரிஸ்: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டம் வெற்றி பெற்று ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்படும் வரை பிரான்சில் அவசரநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெனுவல் வேல்ஸ் கூறியுள்ளார். கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஐஎஸ் போராளிகள் பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை மிரட்டும் கடும் பனிப்புயல்

நியூயார்க்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதி களில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அச்சம் அடைந் துள்ளதாக தகவல்கள் கூறின. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசக்கூடும் என்பதால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு உறைபனி மூடலாம் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

42 மில்லியன் ரிங்கிட் விவகாரம்: நஜிப் மறுப்பு

திரு நஜிப்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறு வனத்தின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லி யன் ரிங்கிட் தொகை தமது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் நஜிப் ரசாக் மறுத் திருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக திரு நஜிப் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த நிதியை பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப் படுகிறது. ஆனால், 42 மி.

முக்ரிஸ் நீக்கப்பட்டால் அம்னோ பிளவுபடும்

 கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ்

கோலாலம்பூர்: கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கெடா கட்சித் தலைவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் அம்னோ கட்சி மிகப் பெரிய பிளவை எதிர் நோக்கும் என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம்

 லிட்வினென்கோ. படம்:(கோப்புப் படம்) நியூயார்க் டைம்ஸ்

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென் கோவை 2006ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு அநேகமாக ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு புட்டினை கடுமையாகக் குறை கூறிவந்த லிட்வினென்கோ அவரது 43 வயதில் ரஷ்ய உளவுத் துறையினரால் லண்ட னில் கொலை செய்யப்பட்டார். லண்டன் ஹோட்டலில் லிட்வினென்கோ தங்கியிருந்த போது விஷம் கலந்த தேநீரைக் குடித்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவர் மரணம் அடைந்தார்.

பத்துமலையில் தீவிர பாதுகாப்பு

படம்: த நியூஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் டுவிட்டர்

வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. “எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் போதுமானதற்கும் அதிகமான போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள் ளனர்,” என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் அப்துல் சமா மட் தெரிவித்தார். இதுவரை மிரட்டல் எதுவும் வரவில்லை என்றாலும் போலிஸ் அப்பகுதியில் அதிக கவனம் செலுத்தும் என்று திரு அப்துல் செய்தியாளர்களிடம் கூறினார்.

முக்ரிஸை வெளியேற்ற கெடா அம்னோ முயற்சி

அலோர் ஸ்டார்: கெடா மாநில முதலமைச்சர் முக் ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அம்மாநில அம்னோ தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். கெடா மாநில தலைமைத்து வத்தில் மாற்றம் செய்யக் கோரி அனைத்து அம்னோ பிரிவு தலைவர்களும் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் கேட்டுக் கொண் டிருப்பதாக கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா, செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

Pages