You are here

உல‌க‌ம்

தமிழ் உலகம் இழந்த தமிழறிஞர்

யேல்-என்யுஎஸ் கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் பெர்னாட் பெட். படம்: இணையம்

லதா

அழகுத் தமிழ் பேசி பல தமி­ழர்­களுக்குத் தமிழ் உணர்வு ஊட்டி வந்த அமெ­ரிக்க பேரா­சி­ரி­யர் பெர்னாட் பெட் அமெ­ரிக்­கா­வில் கால­மானார். அவ­ருக்கு வயது 54. சிங்கப்­பூ­ரில் யேல்- என்­யு­எஸ் கல்­லூ­ரி­யில் மானு­ட­வி­யல் துறைப் பிரிவை அமைத்து, அங்கு பணி­யாற்றி வந்த பெர்னாட் பெட் மாரடைப்­பினால் உயி­ரி­ழந்த­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்றன. ஓராண்டு ஆய்வு விடுப்­பில் கடந்த ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வின் ஸ்டாம்­ஃ­போர்ட் பல்­கலைக்­க­ழ­கத்­தில் ஆய்வை மேற்­கொண்­டி­ருந்தார் அவர்.

உட்லண்ட்ஸில் தற்காலிகப் பேருந்து நிலையம் திறப்பு

உட்லண்ட்ஸில் தற்காலிகப் பேருந்து நிலையத்தைப் பார்வையிடுகிறார் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான்.

உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப் பட்டது. பல புத்தாக்க அம்சங்கள் அப் பேருந்து நிலையத்தில் நிறைந்து உள்ளன. பேருந்து நிலையத்தின் உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய மின் வண்டிகள் அங்கு இடம்பெற்றிருப்பது இது வரை உள்ள பேருந்துநிலைய வசதிகளில் ஆகப் புதியது என்று சொல்லப்படுகிறது. மேலும், பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் காத்திருப்பு இடத்தைச் சென்றவடைவதற்கு உத வும் வகையில் கைப்பிடிக் கம்பி களில் ‘பிரெய்ல்’ முறை குறியீடுகள் அமைக்கப்பட்டு இருப்பதும் முதல்முறை என்று சொல்லப் படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்த மலேசியா முடிவு

மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாகிட் ஹமிடி

கோலாலம்பூர்: மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்த அமைச்சரவை முடிவு செய் திருப்பதாக மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். 1.5 மில்லியன் பங்ளாதேஷ் ஊழியர்களை மலேசியாவுக்கு கொண்டு வரும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஊழியர்கள் தேவைப்படும் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டு முடிவடையவிருந்தால் அதனை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சருமான சாகிட் கேட்டுக்கொண்டார்.

டோனல்ட் டிரம்பின் பிரசாரக் கூட்டம் ரத்து

டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தும் போலிசார்.

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் சிகாகோவில் வெள்ளிக் கிழமை இரவு நடக்கவிருந்த பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்தார். சிகாகோவில் கூட்டம் நடை பெறுவதாக இருந்த இல்லினாய் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டிருந்த டிரம்பின் ஆதரவாளர் களுக்கும் அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நஜிப்: மகாதீரின் மக்கள் பிரகடனம் சுயலாப நோக்கம் கொண்டது

 திரு நஜிப், கூச்சிங்கில் ஒரு வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். படம்: தி ஸ்டார்

கூச்சிங்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் வெளியிட்ட மக்கள் பிரகடனம் உள்நோக்கம் கொண்டது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ராசக் தெரி வித்துள்ளார். அது மக்களுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல என்றும் திரு மகாதீரின் சுயலாபத்திற்காக கொண்டுவரப்பட்ட பிரகடனம் என்றும் திரு நஜிப் கூறினார்.

மகாதீரை பதவியிலிருந்து நீக்கியதை சாடினார் கெஅடிலான் கட்சி உறுப்பினர்

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருடன் பிரதமர் நஜிப் ரசாக் அரசியல் கருத்துவேறுபாடு கொண் டிருக்கலாம். அதற்காக திரு மகாதீரை பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்கியது சரியல்ல என கெஅடிலான் கட்சி உதவித் தலைவர் என். சுரேந்திரன் கூறியுள்ளார்.

 திரு மகாதீரின் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்த பிரதமர் அலுவலகம் அவர் நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்காதது தான் காரணம் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என். சுரேந்திரன் கூறினார்.

சூச்சியின் உதவியாளருக்கு நாடாளுமன்ற கீழ் அவை ஆதரவு

ஆங் சான் சூச்சியும் அவரது கட்சி முன்மொழிந்துள்ள அதிபர் வேட்பாளர் டின் கியவும் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சி முன்மொழிந்த அதிபர் வேட்பாளரான டின் கியவிற்கு நாடாளுமன்ற கீழ் அவை அதன் அமோக ஆதரவைத் தெரிவித் துள்ளது. கீழ் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 317 உறுப் பினர்களில் 274 பேர் டின் கியவிற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர். திருவாட்டி சூச்சியின் உதவியாளரும் அவரது முன்னாள் கார் ஓட்டுநருமான 69 வயது டின் கியவ், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பதை கீழ் அவை உறுதிப் படுத்தியுள்ளது. கீழ் அவையில் அவருக்கு ஆதரவாக பெரும் பாலானோர் வாக்களித் திருப் பதாக கீழ் அவை நாடாளுமன்ற சபாநாயகர் வின் மிண்ட் கூறினார்.

ஜப்பானில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

ஜப்பானில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

தோக்கியோ: ஜப்பானில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து எழுந்த ராட்சத அலையும் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்னமும் ஜப்பானிய மக்களின் மனதில் நிலைத்திருக்கவே செய் கின்றன. ஐந்து ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும் அந்தப் பேரிடரின் பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னமும் மீளமுடியாத நிலையில் நேற்று அங்கு பல இடங்களில் நினைவு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தோக்கியோவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே, ஜப்பானியப் பேரரசர் அகிகிட்டோ உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சுங்கை காடுட்டில் 8 மாடி அறைகலன் மையம்

அறைகலன் கட்டடத்தின் மாதிரி வடிவத்தை அமைச்சர் லிம் ஹங் கியாங் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எட்டுமாடி அறைகலன் மையம் ஒன்று சுங்கை காடுட்டில் கட்டப் படவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய வுள்ள இந்த மையம் 2018 இறுதிக் குள் தயாராகிவிடும் என எதிர் பார்க்கப்படுவதாக வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங் தெரிவித்தார். ‘தி ஜேடிசி ஃபர்னிச்சர் ஹப்@ சுங்கை காடுட்’ என்ற அந்த மையத்தில் புதிய தொழில் உத்தி களுக்கு ஏற்ற கடைகள் இருக்கும். அறைகலன்களையும் அதற்கு தொடர்பான பொருட்களையும் ஒரே கூரையின்கீழ் கொண்டு வருவது மையத்தின் நோக்கம். சிங்கப்பூர் அனைத்துலக அறைகலன் கண்காட்சியை நேற்றுத் தொடங்கி வைத்து அமைச்சர் லிம் ஹங் கியாங் பேசினார்.

சூச்சியின் கட்சி அதிபர் வேட்பாளரை முன்மொழிந்தது

ஆங் சான் சூச்சி 2010ஆம் ஆண்டு வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டபோது திரு டின் கியவ் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.

யங்கூன்: மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அரசியல் அனுபவம் உள்ள வருமான டின் கியவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந் துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியரான 69 வயது டின் கியவ், திருவாட்டி சூச்சியின் நெருங்கிய நண் பராவார். ஆங் சான் சூச்சிக்கு வாகன ஓட்டுநராகவும் அவர் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைமையிலான நாடாளுமன்ற கீழவை நேற்று டின் கியவை அதிபர் வேட்பாளராக முன் மொழிந்தது.

Pages