உல‌க‌ம்

வட கொரியா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டுப் பெண்களுக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொகோடா: அமேசன் காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்களை கொலம்பியாவும் பிரேசிலும் அழித்துள்ளன.
பாரிஸ்: பிரான்சில் முதியோரிடம் மூட்டைப் பூச்சி சிகிச்சை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான யூரோக்களை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜகார்த்தா: நாட்டின் சுற்றுப் பயணத் துறையையும் பொருளியலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டு மக்களுக்கு விசா இல்லாத அனுமதி வழங்குவது குறித்து இந்தோனீசியா பரிசீலித்து வருகிறது.
தைப்பே: ஆப்பிள் நிறுவனம், ‘ஐபேட்’ தயாரிப்புக்கான வளங்களை வியட்நாமுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிடுவதாக நிக்கே நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆதாரங்களை மேற்கோள்காட்டி, டிசம்பர் 8ஆம் தேதி, அது அவ்வாறு தகவல் வெளியிட்டது.