You are here

உல‌க‌ம்

ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை

ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை

சாபா­வி­லுள்ள தானி­யங்கி பணம் வழங்­கும் இயந்­தி­ரம் (ஏடிஎம்) அமைந்­துள்ள அறையின் கண்­ணா­டிக் கத­வு­கள் வெடி வைத்துத் தகர்க்­கப்­பட்­டுள்­ளன. நேற்று அதிகாலை 4.20 மணி­ய­ள­வில் இந்த சம்ப­வம் நிகழ்ந்த­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த வளா­கத்­தில் வெடிச் சத்தம் கேட்­ட­தாக அப்­ப­கு­தி­யில் இருந்­தோர் கூறி­யுள்­ள­னர். சென்ற மாதம் 12ஆம் தேதி மூன்று திரு­டர்­கள் மெம்பா­குட் நகரில் உள்ள ஏடிஎம் வளா­கத்தை­யும் வெடி வைத்துத் தகர்த்து 70,000 மலேசிய ரிங்­கிட்­டு­களைக் கொள்ளை­யிட்­ட­னர்.

அச்சத்திலும் ஆனந்தத்திலும் பிரிட்டிஷ் மக்கள்

 பிரிட்டனின் எதிர்காலம் எவ்வாறிருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்திய மக்கள். படங்கள்: என்வைடி

லண்டன்: ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்­டன் பிரிந்து செல்­வதற்­குச் சாத­க­மாக வாக்­கெ­டுப்பு முடி­வு­கள் இருப்­ப­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, பிரிட்­டிஷ் பவுண்­டின் மதிப்பு 31 ஆண்­டு­களில் இல்லாத அள­வுக்­குச் சரிந்தது. பிரிட்­டன் பிரிந்து செல்வதை ஆத­ரித்து 51.9 விழுக்­காட்டு வாக்­கு­களும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­ து­டன் தொடர்ந்து இணைந்­தி­ருப்­பதை ஆத­ரித்து 48.1% வாக்­கு­களும் பதி­வா­கின. 28 நாடு­களின் கூட்டான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டுப் பிரிந்து செல்லும் முதல் நாடு பிரிட்­டன்.

16 வாகன விபத்து; அப்பளம்போல நொறுங்கிய காரில் தாய், மகள் பலி

16 வாகன விபத்து; அப்பளம்போல நொறுங்கிய காரில் தாய், மகள் பலி

பேராக்: பதினாறு வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் மனைவி நூருல் சையஸெய்லா இர்யானி சுஹாய்மி, 28, ஒன்றரை வயது மகள் ஹன்னா ஹுமைரா ஆகியோரை இழந்த முகமது ஹஸ்னுன் ராம்லி, 29, மோசமான காயங்களுடன் கோலா குபுபாரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் காலை 9.30 மணியளவில் நேர்ந்த இந்த விபத்தில் இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டு போயினர்.

நட்டுனா தீவுகளில் ஜோக்கோவி

நட்டுனா தீவுகளில் ஜோக்கோவி

ஜகார்த்தா: தென்சீனக் கடல் விவகாரத்தில் இந்தோனீசியாவின் நிலைப்பாட்டை சீனாவுக்கு வலியுறுத்தும் வகையில் அந்தக் கடற்பரப்பில் உள்ள நட்டுனா தீவுகளுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ போர்க்கப்பல் ஒன்றில் சென்றுள்ளார். நட்டுனா தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடியதை அடுத்து திரு விடோடோ இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனீசியாவின் தலைமைப் பாதுகாப்பு அமைச்சரும் வெளி யுறவு அமைச்சரும் திரு விடோடோ வுடன் நட்டுனா தீவுகளுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப் பட்டது.

பிரெக்சிட் வாக்கெடுப்பு; இன்று தெரிந்துவிடும்

பிரெக்சிட் வாக்கெடுப்பு; இன்று தெரிந்துவிடும்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்து முடிவு எடுக்க பிரிட்டிஷ் மக்கள் நேற்று வாக்களித்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு நேற்று சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேற்றிரவு சுமார் 7 மணி நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பிய நாடாக பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று ஆதரிப்பவர்கள் 52 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலை வகித்துக் கொண்டிருந்ததாக கருத்துக்கணிப்பு தெரிவித்தது.

துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா கோரி செனட் சபையில் உள்ளிருப்புப் போராட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா கோரி அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பாக வாக்களிப்பை நடத்த குடியரசுக் கட்சியின் தலைமைத்துவம் இணக்கம் தெரிவிக்கும்வரை செனட் சபை யைவிட்டு வெளியேறப்போவ தில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் சூளுரைத்துள்ளனர். துப்பாக்கிக் கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை அண்மையில் நிராகரித்தது. இதனை எதிர்க்கும் வண்ணம் இந்த உள்ளிருப்புப் போராட்டம் அமைந்துள்ளது.

பிரிட்டன் விலகினாலும் நான் விலக மாட்டேன்

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் விலக வேண்டாம் என்றும் அதிலிருந்து வெளியேறுவதை ஆதரித்து வாக்களிக்க வேண்டாம் என்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தாலும் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் திரு கேமரன் கூறியுள்ளார். “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தால், பிரிட்டிஷ் மக்கள் மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர்,” என்றும் கேமரன் எச்சரித்தார்.

நிலநடுக்கத்தை சமாளிக்க பிலிப்பீன்சில் பாவனைப் பயிற்சி

நிலநடுக்கத்தை சமாளிக்க பிலிப்பீன்சில் பாவனைப் பயிற்சி

பிலிப்பின்சில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அதனை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய பயிற்சி மணிலாவில் நடந்தது. மணிலாவில் நடந்த பயிற்சியில் ஏராளமான தொண்டூழியர்கள் பங்கேற்றனர். டாக்சியில் காயமுற்ற பயணிகளைப் போல தொண்டூழியர்கள் நடிக்கின்றனர். நேற்று நடந்த இப்பயிற்சியின்போது நிலநடுக்கத்தின்போது ஏற்படக்கூடிய விபத்துகள் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவது பற்றியும் பாவனைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

வடகொரியாவின் இரு ஏவுகணை சோதனை

வா‌ஷிங்டன்: ஐநா தடையையும் மீறி வடகொரியா நேற்று சக்தி வாய்ந்த இரு ஏவுகணைகளை சோதனை செய்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித் துள்ளது. வடகொரியாவின் இத்தகைய சினமூட்டும் செயல்களால் அந்நாடு இன்னும் பல சிரமங் களை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. தென்கொரியாவும் அதன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இத்தகைய செயல்கள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று தென்கொரியா தெரிவித் துள்ளது. வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஆற்றல் மிக்க இரு நடுத்தர ஏவுகணைகளை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் செலுத்தி சோதனை மேற்கொண்டது.

பிடிபட்ட சீனப் படகை ஜோக்கோ பார்வையிடுவார்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பிடிபட்ட சீனாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேரில் சென்று பார்வையிட இருப்பதாக மாநில அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தோனீசியாவின் நட்டுனா தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதி குறித்த அதன் உரிமையை விட்டுக்கொடுக்காது என்று இந்தோனீசிய துணை அதிபர் காலா ஒரு பேட்டியில் கூறிய சில நாட்களில் அதிபர் ஜோக்கோ விடோடோ அந்தப் படகை பார்வையிடவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Pages