You are here

உல‌க‌ம்

மோசமான வானிலையால் ஆட்டம் கண்ட விமானம்; 17 பேர் காயம்

ஹாங்காங்: இந்தோனீசியாவின் பாலியில் இருந்து 204 பயணிகள், 12 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று ஹாங்காங் நோக்கிப் புறப்பட்ட ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் பாலியில் தரையிறங்கியது. மோசமான வானிலையால் நடுவானில் அந்த ஏர்பஸ் விமானம் அதிகமாகக் குலுங்கியதாகவும் அதில் 17 பயணிகள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் எழுவருக்கு பாலி விமான நிலைய மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர பத்துப் பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர்

லண்டன்: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான், 45 (படம்), லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 57%, அதாவது 1,310,143 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட பெரும் பணக்காரர் ஸாக் கோல்ட்ஸ்மித்திற்கு 994,614 வாக்குகள் கிட்டின. இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக வாக்குகள் பெற்ற அரசியல்வாதி என்ற பெருமையையும் சாதிக் பெற்றார். பாகிஸ்தானியக் குடியேறிகளின் மகனான சாதிக் ‘ஐஎஸ்’ அமைப்பின்பால் கருணைகொண்டவர் என்று பிரதமர் டேவிட் கேமரன் உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையிலும் அதை மீறி வெற்றி பெற்றுள்ளார்.

கனடா: மேலும் தீவிரமடையும் காட்டுத் தீ

ஒட்டாவா: கனடாவின் ஃபோர்ட் மெக்மரே நகரில் மூண்டுள்ள பெரும் காட்டுத் தீ இன்னும் மோசமடைந்துள்ளது. ஏற்கெனவே 1,010 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தீயில் நாசமாகி விட்ட நிலையில் வறண்ட கால நிலையும் பலத்த காற்றும் தீ மேலும் பரவ துணை செய்கின்றன. தீயின் உக்கிரம் இப்போதுள்ளதைப் போல இருமடங்காகும் என எதிர் பார்க்கப்படுகிறது. “தென்மேற்குத் திசையிலிருந்து காட்டுப் பிரதேசமான வடகிழக்குப் பகுதியை நோக்கி காற்று வீசு கிறது.

திருவாட்டி சூச்சிக்குப் புதிய அமைச்சு வழங்க முடிவு

திருவாட்டி சூச்சிக்குப் புதிய அமைச்சு வழங்க முடிவு

யங்கோன்: ஆங் சான் சூச்சி அம்மையாருக்காகப் புதிய அமைச்சை உருவாக்க மியன்மார் அதிபர் ஹிதின் கியாவ் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதிபருக்கு இணையான அதிகாரம் கொண்ட ஆலோசகர் பொறுப்பில் இருந்து வரும் திருவாட்டி சூச்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் புதிய அமைச்சு அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது.

சரவாக்: ஹெலிகாப்டர் சிதைவுகள், அமைச்சரின் உடல் மீட்பு

சரவாக்: ஹெலிகாப்டர் சிதைவுகள், அமைச்சரின் உடல் மீட்பு

கூச்சிங்: சரவாக் மாநிலத்தில் காணாமற்போன ஹெலிகாப்டரின் பாகங்கள் என்று நம்பப்படும் சிதைவுகளை, தேடி மீட்கும் அதி காரிகள் கண்டுபிடித்து உள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்து உள்ளார். ஹெலிகாப்டரின் முழுப் பகுதியையும் கண்டுபிடிக்கும் வரையில் தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோன், 52, அவரது கணவர் மற்றும் நால்வர் அந்த ஹெலிகாப்டரில் சென்றனர். யூரோகாப்டர் AS350 என்னும் அந்த ஹெலிகாப்டர் பெத்தோங் கிலிருந்து மாலை 4.12 மணிக்கு கூச்சிங் நோக்கிக் கிளம்பிச் சென்றது.

வடகொரியாவில் 36 ஆண்டுகளில் முதல் அரசியல் மாநாடு

பியோங்யாங்: வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி மாநாடு 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியது. அதிபர் கிம் ஜோங்-உன்னின் தலைமைத்துவத்தை வலுப்படுத் தும் நோக்குடனும் கட்சியில் அவ ரது செல்வாக்கை உயர்த்தும் வண்ணமும் இம்மாநாடு நடத்தப் படுவதாக ஊடகங்கள் குறிப்பிடு கின்றன. இருப்பினும் இம்மாநாடு வடகொரியாவின் கொள்கைகளிலோ அரசியல் தலைமைத்துவத்திலோ மாற்றத்தை ஏற்படுத்துமா என்று உலகம் உற்றுநோக்கி வருகிறது. ஐந்தாவது அணு ஆயுதச் சோதனையை வடகொரியா நடத்த இருப்பதாகக் கணிக்கப்பட்டு வரும் வேளையில் அதிபர் கிம், தமது அணுவாயுத லட்சியத்தை மறுஉறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 ரிங்கிட் விலை ஏற்றியதற்கு 4,000 ரிங்கிட் அபராதம்

ஷா அலாம்: நாஸி லிமா உணவின் விலையை ஒரே ஒரு ரிங்கிட் ஏற்றியதற்காக உணவகம் ஒன்றுக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுபாங் ஜெயாவில் உள்ள அந்த உணவகத்தில் நாஸி லிமாவின் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் 2.50 ரிங்கிட்டாக இருந்தது. ஜூன் மாதம் அந்த விலை 3.50 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலை ஏற்றம் குறித்து உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சைச் சேர்ந்த முகமது ஸரிஃப் அன்வார் முகமது அலி நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

வங்கிக் கணக்கிற்கு வந்த $4.6 மில்லியன்: ஆடம்பரச் செலவு செய்த மலேசிய மாணவி

சிட்னி: தமது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை எடுத்துச் செலவு செய்து தீர்த்த மலேசிய மாணவி ஒருவர் மீது ஆஸ்திரேலியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது பெயர் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ, 21, என ஊட கங்கள் குறிப்பிடுகின்றன. ஆஸ் திரேலியாவில் ரசாயனப் பொறி யியல் படித்து வரும் அவரது வங்கியின் சேமிப்புக் கணக்கிற்கு அளவற்ற கடன் தொகை வரவு வைக்கப்பட்டது. அதிர்ஷ்டம் தமக்கு வந்த தாகக் கருதிய மாணவி, உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து ஆடம்பரச் செலவுகளைச் செய்யத் தொடங்கினார்.

சிரிய அகதி முகாம் தாக்குதலுக்குக் கண்டனம்

டமாஸ்கஸ்: சிரியாவின் அகதி முகாமில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போர்க் குற்றத்துக்கு இணையானது என்று மூத்த ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். வடக்கு இட்லிப் மாநிலத் திலுள்ள கமவுனா முகாமில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக ஸ்டீஃபன் ஓபிரியன் ‘பிபிசி’ செய்தியிடம் கூறினார். இந்தத் தாக்குதலை சிரியா அல்லது ரஷ்யப் படைகள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

சர்ச்சையைக் கிளப்பிய ‘இன்ஸ்டகிராம்’ படம்; பாலர்பள்ளிகளைக் கண்காணிக்கும் மலேசிய போலிசார்

சர்ச்சையைக் கிளப்பிய ‘இன்ஸ்டகிராம்’ படம்; பாலர்பள்ளிகளைக் கண்காணிக்கும் மலேசிய போலிசார்

மலேசியாவில் உள்ள பாலர்பள்ளிகள் மாணவர்களுக்கு போர்ப் பயிற்சி அளிக்கும் மையங்களாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மலேசிய போலிசார் நாடு முழுவதுமுள்ள பாலர்பள்ளிகளைக் கண் காணித்து வருகின்றனர் என புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குநர் ஃபுஸி ஹாருன் கூறியுள்ளார். பாலர் பள்ளியில் பயிலும் சிறாரும் ஆசிரியை ஒருவரும் கையில் பொம்மைத் துப்பாக்கிகளுடன் சீருடையில் காட்சியளிக்கும் சில புகைப்படங்கள் இணையத் தில் வெகுவாகப் பரவி சர்ச்சையைக் கிளப்பியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Pages