You are here

உல‌க‌ம்

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லண்டோ நகரில் ஓர் இரவு விடுதியில் ஒருவன் கண்மூடித் தனமாக சுட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 42 பேர் காயம் அடைந்ததாகவும் ஆர்லண்டோ போலிஸ் படைத் தலைவர் ஜான் மினா கூறினார். அந்தத் துப்பாக்கிக்காரனை போலிசார் சுட்டுக் கொன்றதாக வும் அவர் சொன்னார். இந்த/g சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன்விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் புதிய நகரங்கள் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் புதிய நகரங்கள் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் இந்துக் கோயிலுக்கு அருகே பல புதிய நகரங்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய நகரங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரங்களைப் பற்றிய மேலும் பல ரகசியங்கள் இன்று வெளியிடப்படவுள்ளன. அடர்ந்த காடு மூடிய நிலையில் பாழடைந்து காணப்படும் இந்த நகரங்கள் முன்பு நினைத்ததைத் காட்டிலும் பெரியவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

ஷங்காய் விமான நிலைய குண்டு வெடிப்பில் நால்வர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் உள்ள விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடித்ததில் நால்வர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புடோங் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திடீரென்று குண்டு வெடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நால்வர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குத்துச்சண்டை மன்னன் முகமது அலிக்கு இறுதி அஞ்சலி

குத்துச்சண்டை மன்னன் முகமது அலிக்கு இறுதி அஞ்சலி

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முகமது அலியின் உடல் அவரது சொந்த ஊரான லூயிஸ் வில்லில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முகமது அலி, 74வது வயதில் இம்மாதம் 4ஆம் தேதி காலமானார். அவரது உடல் காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

விமானிகள் வேலை நிறுத்தம்; காற்பந்து ரசிகர்கள் தவிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்சில் காற்பந்து ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு களுடன் யூரோ 2016 காற்பந்துப் போட்டி தொடங்கியிருக்கிறது. ஆனால் அடுத்த நாளே விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான காற்பந்து ரசிகர்கள் தவிப்புக்கு ஆளாகியிருக்கின்ற னர். விமானிகளின் நான்கு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுத் தொடங்கியது. இதனால் 30 விழுக்காடு விமானச் சேவை களை ஏர் பிரான்ஸ் ரத்து செய்தது. தொழிலாளர் சட்டத்தில் அர சாங்கம் செய்துள்ள சீர் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சுங்கை புசாரில் தலைகாட்டிய மகாதீர்; எதிர்க்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம்

சுங்கை  புசாரில் தலைகாட்டிய மகாதீர்; எதிர்க்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம்

சுங்கை புசார்: அடுத்த வாரம் சுங்கை புசாரில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் தோன்றிய முன்னைய பிரதமர் மகாதீர் முகம்மது பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். திரு மகாதீர் தமது துணைவியார் ஹஸ்மா முகம்மது அலியுடன் நேற்று ஹாவ் சியாங் சி என்ற சீன உணவகத்தில் நடைபெற்ற சிறப்பு குடிமக்கள் பிரகடனக் கூட் டத்தில் கலந்து கொண்டார்.

பினாங்கில் மேலும் ஒரு கோவில் சேதம்

பினாங்கில் மேலும் ஒரு கோவில் சேதம்

மலேசியாவின் பினாங்கு மாநி லத்தில் மேலும் ஒரு இந்துக் கோவில் சிதைக்கப்பட்டுள்ளது. பினாந்தி வட்டாரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீதரும முனீஸ்வரர் ஆல யத்தின் சிலைகள் கடந்த வியாழக்கிழமை உடைக்கப்பட்டுள் ளன. இந்தக் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், முனீஸ்வரர் ஆகிய கடவுள்களின் சிலைகள் அவற்றின் பீடத்திலிருந்து அகற் றப்பட்டு உடைக்கப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் கோவிலுக் குள் புகுந்து சிலைகள் சேதப்படுத் தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கோழிக் குழம்பில் விழுந்த பறவை நிறம் மாறியது

கோழிக் குழம்பில் விழுந்த பறவை நிறம் மாறியது

வேல்ஸ்: உணவு தேடி அலைந்த கடற்பறவை ஒன்று வேல்ஸ் நகரில் உள்ள உணவு தொழிற்சாலையின் குப்பைத் தொட்டியில் கொட்டிக்கிடந்த  மசாலா’ கோழிக் குழம்பில் தவறி விழுந்துவிட்டது. நல்லவேளையாக அங்கிருந்த ஊழியர்கள் அந்தக் கடல் பறவையைக் காப்பாற்றிவிட்டனர். இருப்பினும் வெண்மை நிறமாக இருந்த அந்த கடல் பறவையின் நிறம் ஆரஞ்சு நிறமானது. அந்தப் பறவையைக் காப்பாற்றிய ஊழியர்கள் மருத்துவமனையின் தொண்டூழியர் ஒருவரிடம் அதை ஒப்படைத்தனர்.

தொழிற்சங்கங்களுக்கு பிரெஞ்சு அதிபர் எச்சரிக்கை

பாரிஸ்: பிரான்சில் யூரோ 2016 காற்பந்துப் போட்டி தொடங்கியுள்ள வேளையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டாம் என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் எச்சரித்துள்ளார். தொழிலாளர் சட்டத்தில் அரசாங்கம் செய்துள்ள சீர்திருத்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பிரான்சில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

பங்ளாதே‌ஷில் இந்து ஆசிரமத்தின் ஊழியர் வெட்டிக்கொலை

டாக்கா: பங்ளாதே‌ஷில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்து ஆசிரமம் ஒன்றில் பணியாற்றி வந்த 60 வயதான நித்யரஞ்சன் பாண்டே என்பவர் நேற்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். கடந்த 3 நாட்களில் கொல்லப்பட்ட 2வது இந்திய வம்சாவளி நபர் இவராவார். மூன்று நாட்களுக்கு முன்பு, அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது இந்து கோயில் பூசாரி, சைக்கிளில் சென்றபோது 3 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக டாக்கா தகவல்கள் கூறின.

Pages