You are here

உல‌க‌ம்

சவூதி அரேபிய பெண்ணுரிமைப் போராளிகள் எழுவர் கைது

ரியாத்: பெண்ணுரிமை வழக்கறிஞர்கள் ஏழு பேரை சவூதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட இருக்கும் சில வாரங்களுக்கு முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கைக்கான காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படாத போதிலும் பெண்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் முயன்றதாகக் கூறப்பட்டது.

மலேசியாவின் அம்னோ கட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 2019க்குள் நடைபெற வேண்டும்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் ஆளுங்கட்சியான அம்னோ, அதன் உச்ச மன்ற தேர்தல்களை நடத்த அடுத்த ஆண்டு ஏப்ரல் வரைக்கும் அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மலேசி யாவின் ஆகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவில் மூன்று முக்கிய பதவிகளுக்குப் வேட்பா ளர்கள் போட்டியிடுவது அவசியம்தானா என எதிர்க் குரல்கள் எழுந்து உள்ளன. இம்மாதம் மே 9ஆம் தேதி நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் அம்னோ கூட்டணியான தேசிய முன்னணி அதிர்ச்சித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ, தேசிய முன்னணி கட்சிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினா ர்.

பதவி விலக சிலாங்கூர் முதல்வர் சம்மதம்

கோலாலம்பூர்: கூட்டரசு அரசாங் கத்திற்கு உதவ தாம் தேவைப்படும் நிலை ஏற்படுமாயின் சிலாங்கூர் முதலமைச்சர் பதவியை கைவிடத் தாம் தயாராக இருப்பதாக பொரு ளியல் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். “நான் இன்னமும் சிலாங்கூர் முதலமைச்சர்தான். கூட்டரசுக்கு தாம் உதவவேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் முதலமைச் சர் பதவியைக் கை விடுவேன்,” என்று அவர் செய்தியா ளர்களிடம் தெரி வித்தார்.

‘லிபியா மாதிரி’யை பின்பற்ற மாட்டேன்: அதிபர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: தம்மைச் சந்திக்கும் போது உடன்பாட்டில் கையெழுத் திட்டால் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்குப் பாது காப்புத் தர இருப்பதாகவும் இன் னும் நிறையச் செய்ய விரும்பு வதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஆனால், லிபியாவை மாதிரியாகக் கொண்டு தாம் நடக்கப்போவதில்லை என அவர் உறுதி கூறியுள்ளார்.

அன்வார்: தேர்தல் முடிவு வெளியான போது நஜிப் தொடர்புகொண்டார்

கோலாலம்பூர்: மே 9ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப் தொலைபேசி வழியாக தம்மை இரு முறை தொடர்புகொண்ட தாக அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார். அரச மன்னிப்பு வழங்கப்பட்டு அண்மையில் விடுதலையான திரு அன்வார், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் ‘அடுத்து என்ன செய்யவேண்டும்?’ என அறிவுரை கேட்கவே அவர் தம்மைத் தொடர்புகொண்ட தாக அன்வார் தெரிவித்தார்.

பிரதமர் மகாதீர்: கல்வி அமைச்சை மகாதீர் ஏற்கவில்லை

நாட்டின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கி இருப்பதால் அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக கல்வி அமைச்சர் பொறுப்பைத் தாமே வகிக்கப்போவதாக நேற்று முன்தினம் பிரதமர் மகாதீர் கூறியிருந்தார். இருப்பினும் அவ்வாறு செய்வது பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கைக்கு முரணாக அமையும் என்று தோன்றியதால் கல்வி அமைச்சர் பொறுப்பை அவர் ஏற்கவில்லை. நேற்றைய அமைச்சரவைப் பட்டியலில் கல்வி அமைச்சராக மகாதீரின் கட்சியைச் சேர்ந்த டாக்டர் மாஸ்லீ மாலிக் அறிவிக்கப்பட்டார்.

மலேசியா: 14 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் நேற்று மாலை புதிய அமைச்சர்களின் பெயரை அவர் அறிவித்தார்.

மலேசிய பிரதமர்: என்னை விமர்சிப்பவரை கைது செய்வதில் உடன்பாடு இல்லை

கோலாலம்பூர்: சமூக ஊடகத்தில் தம்மை அவமதிப்போரை போலிசார் கைது செய்ய வேண்டும் என்பதில் தமக்கு உடன் பாடில்லை என மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். மகாதீரையும் இஸ்லாத்தையும் மிதமிஞ்சிய வகையில் அவமதிக்கும் தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி யது தொடர்பாக ஆடவர் ஒருவர் மீது அரசு சாரா அமைப்பு களின் பிரதிநிதிகள் புகார் தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் லங்காவி போலிசார் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தனர்.

நஜிப் வீடுகளில் தொடர்ந்து விடிய விடிய சோதனை

படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கோலாலம்பூர் வீடுகளில் போலிஸ் குழுவினர் நேற்றும் தொடர்ந்து சோதனை நடத்தினர். கோலாலம்பூரில் தாமான் டுட்டாவில் இருக்கும் திரு நஜிப்பின் வீட்டில் நேற்று நண்பகல் நேரத்திலும் போலிஸ் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அந்த வீட்டில் சோதனை அதி காலை 4 மணிக்கே முடிந்துவிட் டது என்றாலும் தொடர்ந்து போலி சார் அங்கு இருந்ததற்கான காரணம் தெரியவில்லை. யாரும் கைதான தாகவும் தெரியவில்லை.

மகாதீர்: சோதனை பற்றி எனக்குத் தெரியாது

கோலாலம்பூர்: முன்னாள் பிர தமர் நஜிப் ரசாக்கின் வீடுகளில் நடந்த சோதனையை நடத்து வதற்கான போலிஸ் திட்டங்கள் பற்றி தமக்குத் தெரியாது என்று நேற்றுப் பிற்பகலில் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்தார். போலிஸ் குழுவினர், கோலா லம்பூரில் இருக்கும் நஜிப் ரசாக் கின் இரண்டு இருப்பிடங்களில் புதன்கிழமை சோதனை நடத் தினர். அந்தச் சோதனை நேற்றும் தொடர்ந்தது. “போலிசார் செயல்படுவதற் கான நடைமுறைகள் இருக்கின் றன. இரவு நேரத்தில்தான் சோதனை நடத்த வேண்டுமா என்பது பற்றி எனக்குத் தெரி யாது. “ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இதுபோல மக்களை நான் கொடுமைப்படுத்தப் போவ தில்லை.

Pages