You are here

உல‌க‌ம்

பனிப் புயல்: சிறு விமான நிலையத்தில் தரையிறங்கிய எஸ்ஐஏ விமானம்

நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயல் காரணமாக நியூயார்க்கில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்க நேரிட்டது. பலத்த காற்று, கடுமையான பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்ட ஓடுபாதைகளால் நியூயார்க்கின் பிரதான விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப் புயல் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் புயல்; மின்சாரமின்றி ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குத் தீவை சக்திவாய்ந்த புயல் உலுக்கியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக மின்சாரம் இன்றி ஆயிரக்கணக்கானோர் தவிக்க நேரிட்டது. வெள்ள அபாயம் உள்ள இடங்களில் இருந்து பலர் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளனர்.

வெப்பக் காற்று பலூன் விபத்தில் சுற்றுப்பயணி மரணம்

கெய்ரோ: எகிப்தின் லுசோர் நகரில் வெப்பக் காற்று பலூன் விழுந்து நொறுங்கியதில் பெண் சுற்றுப்பயணி ஒருவர் மரணமடைந்தார். 12 பேர் காயமுற்றனர். விபத்து நிகழ்ந்தபோது அந்த பலூனில் சுற்றுப்பயணிகளும் எகிப்தியர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது. விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

வியட்னாமிற்குள் கடத்தப்பட்ட $4 மி. போதைப் பொருள்

ஹனோய்: டீ பாக்கெட்டுகளுக் குள் மறைத்து வைக்கப்பட்டு லாவோஸிலிருந்து கடத்தி வரப் பட்ட $4 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட் களை வியட்னாம் போலிசார் பிடித்துள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான வியட்னாமில் பிடிக்கப் பட்ட ஆகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவமாக இது வகைசெய்யப்பட்டுள்ளது. லாவோஸ், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒட்டியுள்ள வியட்னாம், ‘தங்க முக்கோண’ போதைப் பொருள் வணிக மையமாக வர்ணிக்கப்படும் இந்த வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாகாங் வெள்ளத்தால் இருவர் மரணம்; 9,000 பேர் வெளியேற்றம்

குவாந்தான்: கனமழை காரணமாக மலேசியாவின் பாகாங் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டு 50 தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளத்தில் மூழ்கி இதுவரை இருவர் உயிர் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாரான், ஜெரான்டுட், குவாந்தான், ரொம்பின், பெக்கான், லிப்பிஸ் ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குவாந்தான் நகரிலிருந்து சுமார் 7,000 பேர் 28 தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

மகன் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு; பொங்கி எழுந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக குடியரசுக் கட்சியின் பிரசாரக் குழு உயர் அதிகாரி களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடை யிலான கூட்டத்துக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகன் ஏற்பாடு செய்தது தேசத் துரோகத் துக்கு ஈடானது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை ஆலோசகரான ஸ்டீவ் பெனன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் மைக்கல் வூல்ஃப் என்பவரால் புனையப்பட்ட ஃபயர் அண்ட் ஃபியூரி எனும் நூலில் பெனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

வியட்னாம் குண்டு வெடிப்பில் இரண்டு சிறுவர்கள் மரணம்

ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் நேற்று குண்டு வெடித்ததில் ஒரு வயதுக் குழந்தையும் ஐந்து வயது சிறுமியும் உயிரிழந்ததாக போலிசார் கூறி னர். அந்த குண்டு வெடிப்பில் மேலும் 6 பேர் காயம் அடைந்த தாகவும் பல வீடுகள் நாசமானதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த வெடிப்புக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் புலன்விசாரணை செய்து வரு கின்றனர்.

பள்ளத்தில் பேருந்து விழுந்ததில் 46 பேர் மரணம்

படம்: ஏஎஃப்பி

லிமா: பெரு தலைநகர் லிமாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து பசமாயோ கடற் கரை நகருக்கு அருகே நெடுஞ் சாலையில் ஆபத்தான வளைவில் எதிரே வந்த லாரி மீது மோதியதைத் தொடர்ந்து அந்தப் பேருந்து 100 மீட்டர் ஆழமான ஒரு பள்ளத்தில் விழுந் தது. செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அந்த விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். அந்தப் பேருந்தில் மொத்தம் 57 பேர் சென்றதாகக் கூறப்பட்டது. பள்ளத்தில் இருந்து பயணிகளை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தொடர்வதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழி

ஜோகூர்பாரு: ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 44 வயது ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியென சந்தே கிக்கப்படும் ஒருவரை மலேசியப் போலிசார் அடையாளம் கண்டுள்ள தாக தி ஸ்டார் தகவல் கூறியது. கடந்த மாதம் கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீண்டும் ஓர் ஏவுகணை சோதனை: வடகொரியா தயாராவதாகத் தகவல்

வடகொரியா மேலும் ஒரு ‘கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை’ சோதனைக்குத் தயா ராகும் தகவல் பரவி வருவதாக சிபிஎஸ் என்னும் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித் துள்ளது. கடந்த நவம்பர் மாதம் வட கொரியாவின் மூன்றாவது ஏவு கணைச் சோதனை நடத்தப்பட்ட அதே பகுதியில் அந்தப் புதிய ஏவுகணைச் சோதனையை நடத் துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அது குறிப்பிட்டது. இவ்வாண்டுக்கான முதல் ஏவு கணையை வடகொரியா விரை வில் ஏவுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற ராணுவ அதிகாரிகளின் தக வலை மேற்கோள் காட்டி ‘எம்பிசி நியூஸ்’ தெரிவித்துள்ளது.

Pages