You are here

உல‌க‌ம்

உறவை சீர் செய்துகொள்ள தென்கொரியா, சீனா இணக்கம்

சோல்: அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் தென்கொரியாவில் தயார் நிலை யில் வைக்கப்பட்டது தொடர்பில் சீனா- தென்கொரியா உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விரு நாடுகளும் உறவை சீர் செய்துகொள்ள இணக்கம் கண்டுள்ளன. தென்கொரிய வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரி வித்தது. உறவை சீர் செய்து கொள்ளவும் எல்லா துறைகளிலும் ஒத்துழைக்கவும் சீனாவும் தென்கொரியாவும் இணங்கி யுள்ளதாக அமைச்சின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து வெளியேற மறுக்கும் அகதிகள்

சிட்னி: படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த அகதிகள் பாப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவிலும் நவ்ரு தீவிலும் உள்ள முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மனுஸ் தடுப்பு முகாம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று பாப்புவா நியூகினி நீதிமன்றம் தீர்ப் பளித்ததைத் தொடர்ந்து அந்த முகாமை நேற்று மூட திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் அந்த முகாமிலிருந்து வெளியேற அகதிகள் மறுத்து வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அந்த முகாமை மூடுவது மனித உரிமை மீறல் என்று அகதிகள் கூறுகின்றனர். அமைதியான முறை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் அகதிகள் திட்டமிட்டுள்ளதாக பிபிசி தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர்: தாய்லாந்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை நீக்கப்படவில்லை

பேங்காக்: தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சா தெரிவித்துள்ளார். தாய்லாந்து ராணுவம் 2014ஆம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அரசியல் கட்சி ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தடையை அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நெருக்கிவரும் வேளையில் ஒரு சில காரணங்களுக்காக அத்தடையை இப்போது அகற்ற இயலாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு கிம் வருகை

படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தன் மனைவி ரி சோல் ஜூவுடனும் சகோதரி கிம் யோ ஜோங்குடனும் ஒப்பனைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. கிம்மின் மனைவியும் அவரது சகோதரியும் பொது நிகழ்ச்சி களில் கலந்துகொள்வது அரிது என்பதால் அவர்களை பொது மக்கள் பார்க்க இயலாது.

நஜிப்: டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினேன்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சென்ற மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகை யில் தங்குவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை திரு நஜிப் புறக்கணித்துள்ளார். “விருந்தினர் மாளிகையில் நான் தங்கவில்லை என்றாலும் திரு டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாட எனக்கு அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் கோல்ஃப் விளையாடினோம்.

கேட்டலோனியா சுதந்திரம்: எதிர்ப்புப் பேரணி

மாட்ரிட்: தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்படு வதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும் கேட்டலோனியா நிர்வாகம் ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளது. இத்தேர்தலில் கேட்ட லோனியாத் தலைவர் போட்டியிட முடியும் என்றும் ஆனால் அதுவரை அவர் கைது செய்யப்படாமல் இருந்தால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: கைது நடவடிக்கை சாத்தியம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த அமெரிக்க விசாரணையில் திடீர் திருப்பமாக முதல் குற்றச் சாட்டுகள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு வதாக தகவல்கள் கூறுகின்றன. 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற் காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக கூறப்படும் புகார் தொடர்பில் முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்; 25 பேர் பலி

படம்: ராய்ட்டர்ஸ்

ஆப்பிரிக்க நாடான சோமாலியா வின் தலைநகர் மொகாடி‌ஷுவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டு இஸ்லாமிய தீவிர வாதிகள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 25 பேர் வரை கொல் லப்பட்டனர். மாண்டவர்களில் போலிசாரும் ஹோட்டல் ஊழியர்களும் குடி யிருப்பாளர்களும் அடங்குவர். இறந்தோர் எண்ணிக்கை அதி கரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் மாறுவேடம் பூண்டு பொதுமக் களுடன் சேர்ந்து தப்பிவிட்டார்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார் கள் என மேஜர் முகமது உசைன் என்ற போலிஸ் அதிகாரி கூறிய தாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் தெரிவித்தது.

பல் மருத்துவர் பட்டம் பெற்ற 4 மணி நேரத்தில் 3வது குழந்தை பெற்ற டாக்டர் சரிதா

டாக்டர் சரிதா.

மலேசியாவின் ஈப்போ நகரில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஆகக் கடைசிப் பிள்ளையாக பிறந்த டாக்டர் சரிதா சிவராஜனை, 35, அவரின் தோழி களும் உறவினர்களும் ‘சூப்பர் மாது’ என்று வர்ணிக்கிறார்கள். மலாயா பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை பல் மருத்துவராகப் பட்டம் பெற்ற இந்த மாது, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே தன்னுடைய மூன்றாவது பிள்ளையை மருத்துவ மனையில் பெற்றெடுத்தார்.

டிசம்பர் 21 தேர்தலில் பூஜ்டிமோன் பங்கேற்க ஸ்பெயின் அழைப்பு

பார்சிலோனா: பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் பங்கேற்கலாமென ஸ்பானிய அரசாங்கம் கூறியுள்ளது. திரு பூஜ்டிமோன் பதவிலியிருந்து விலக்கப்பட்டாலும் அரசியலில் தொடர்ந்து நீடிக்கலாம் என ஸ்பெயின் அரசாங்கப் பேச்சாளாரான திரு இனிகோ மென்டெஸ் டி விகோ நேற்று மாட்ரிடில் தெரிவித்தார். இந்த நிலையில் கேட்டலோனியாவின் தலைநகர் பார்சிலோனாவில் கேட்டலோனியா ஸ்பெயினுடன் இணைந்திருப்பதை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரகள் பலர் நேற்று கூடினர்.

Pages