You are here

உல‌க‌ம்

செயற்கைக்கோளைச் செலுத்த தயாராகிறது வடகொரியா

வடகொரியா புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருகிறது என்று தென்கொரிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்ட தால் வடகொரியா மீது ஏராள மான பொருளியல், வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயற் கைக்கோள் உட்பட எதையும் ஏவக்கூடாது என்றும் அந்நாடு மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குவாங்மை யோங்சோங்=5 எனும் புதிய செயற்கைக்கோள் ஒன்றை வட கொரியா உருவாக்கியுள்ளது என்று தென்கொரிய அரசாங்கத் தகவல்கள் கூறுவதாக ஜூகங் இல்போ நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது.

$381 பில்லியன் மின்கட்டணம்: அமெரிக்கப் பெண் அதிர்ச்சி

அமெரிக்கப் பெண் ஒருவருக்கு 284 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$381 பி.) மின்சாரக் கட்டணப் பட்டியல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தொகை, ஹங்கேரி, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் மொத்த தேசிய கடன் தொகையைவிட அதிகம் என்பது வியப்புக்குரிய தகவல். பென்சில்வேனியாவைச் சேர்ந்த வர் திருவாட்டி மேரி ஹோரொ மன்ஸ்கி, 58. இவர் கடந்த மாதத்தில் தமது வீட்டிற்கு எவ் வளவு மின்கட்டணம் வந்துள்ளது என்பதைக் காண்பதற்காக இணையத்தில் நுழைந்தார்.

புயலில் சிக்கி பிலிப்பீன்சில் குறைந்தது 200 பேர் மரணம்

மணிலா: தெற்கு பிலிப்பீன்ஸ் பகுதியில் வீசிய பலத்த புயல்காற்றில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெம்பின் என்றழைக்கப்படும் புயல் காரணமாக மிண்டானோ தீவில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இங்குள்ள இரு நகரங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இங்கு பல வீடுகள் மண்ணில் புதைந்ததாகக் கூறப்படுகிறது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்காற்று தற்போது மேற்கு நோக்கி வீசுவதாக அதிகாரிகள் கூறியுள் ளனர்.

ராணுவ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க மியன்மாருக்கு அழைப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்கா மற்றும் தாய்லாந்து தலைமையில் பல நாடுகள் சேர்ந்து அடுத்த ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் ராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு மியன்மாருக்கு தாய்லாந்து அழைப்பு விடுத்துள்ளது. இத்தகவலை அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்டோபர் லோகன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ‘கோப்ரா கோல்டு’ எனும் ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சியாகும். பயிற்சியின்போது மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவிப் பணிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக மியன்மாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிகாரிகள்: ஐநா புதிய தடைகள் போர் நடவடிக்கையாகும்

சோல்: வடகொரியா மீது ஐநா விதித்துள்ள புதிய தடைகள் போர் நடவடிக்கை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சினம் அடையச் செய்வதற்கான ஒரே வழி வடகொரியாவின் அணுவாயுத ஆற்றலை வலுப்படுத்துவதே என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரி வித்திருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள் ளது. வடகொரியா மீது ஆகக் கடைசியாக ஐநா விதித்த புதிய தடைகள் அந்நாட்டின் பொருளியலுக்கு முழுமையாக விதிக் கப்பட்ட தடைகள் என்று வடகொரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். அதற்கான அனைத்து விளைவுகளுக்கும், புதிய தடை களுக்கு ஆதரவு அளித்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.

ரோஹிங்யப் பெண்களுக்கு பாதுகாப்பு அலாரம்

 படம்: ஏஎஃப்பி

கோக்ஸ் பசார்: பங்ளாதே‌ஷில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தஞ்சம் நாடி வந்துள்ள ரோஹிங்ய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர்களிடம் பாதுகாப்பு அலாரம் கொடுக்கப்படுகிறது. ஆபத்து நெருங்கினால் அந்தப் பெண்கள் பாதுகாப்பு அலாரத்தை இயங்கச் செய்யலாம். அலாரம் இயக்கப்படும்போது அதிலிருந்து ‘கீச்’ என்ற சத்தம் எழும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் கடைத்தொகுதி தீக்கிரையானது; 37 பேர் மரணம்

தெற்கு பிலிப்பீன்சின் டாவோ நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்று தீக்கிரையானதில் 37 பேர் பலியாகியிருக்கலாம் என்று சொல் லப்படுகிறது. தீப்பற்றிய கடைத்தொகுதியில் இருந்த 37 பேர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அங்கு இருந்த தீ பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி கூறினார். இந்தத் தகவலை டாவோ நகரின் துணை மேயரும் பிலிப்பீன்ஸ் அதிபரின் மகனுமான பாலோ டுட்டர்டே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘என்சிசிசி மால்’ எனும் கடைத்தொகுதியில் நேற்று முன் தினம் காலை தீப்பற்றியது.

சவூதி இளவரசருக்கு $8.06 பி. அபராதம்

ரியாத்: அண்மையில் ஊழல் தொடர்பாக சவூதி அரேபியாவில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான இளவரசர் அல் வாலித் பின் தலாலும் ஒருவர். இந்நிலையில், இளவரசர் அல் வாலித் அபராதத் தொகையாக $8.06 பில்லியன் செலுத்தினால் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலை வா‌ஷிங்டன் ஸ்திரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. கைதான பலர் அபராதத் தொகையைச் செலுத்திய பிறகு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேட்டலோனியா வட்டாரத் தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் வெற்றி

மட்ரிட்: ஸ்பெயினில் கேட்டலோனியா வட்டாரத் தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன. தேர்தல் முடிவுகளை வரவேற்றுப் பேசிய முன்னாள் கேட்டலோனியா தலைவர் கார்ல்ஸ் பியூஜ்டிமோண்ட், இத்தேர்தலில் ஸ்பெயின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும் கேட்டலோனியாவில் கூட்டணி அரசாங்கம் அமையும் சூழல் உருவாகியுள்ளது.

மலேசியாவில் 20 பேர் கைது

கோலாலம்பூர்: மலேசியப் போலிசார் கடந்த சில வாரங் களில் நான்கு இடங்களில் போராளிகள் என்று சந்தேகிக்கப் பட்ட 20 பேரை கைது செய்துள் ளனர். அவர்களில் 7 பேர் மலேசி யர்கள்; ஐந்து பேர் இந்தோனீ சியர்கள், மற்ற 7 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள், மற்றொருவர் ஆப்பிரிக்க நாட்டவர். நவம்பர் 30ஆம் தேதிக்கும் டிசம்பர் 15ஆம் தேதிககும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், சாபா, ஜோகூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதக் குழு ஒன்றின் மூத்த தலைவரான 24 வயது இந்தோனீசியர் நவம்பர் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

Pages