You are here

உல‌க‌ம்

அமெரிக்காவுக்கு ஈரானிய அதிபர் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினால் மிகப் பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச் சரித்துள்ளார். அத்துடன் அணுசக்தித் திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டிலிருந்து விலகுவது குறித்து இம்மாதம் 12ஆம் தேதிக்குள் தீர்மானிக்க விருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில் அந்த உடன்பாட்டி லிருந்து விலக வேண்டாம் என்று திரு டிரம்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர்-ஜோகூர் பால சாலைப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூர்-ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது இணைப்பான துவாசில் நடைபெற்று வந்த சாலைப்பணிகள் மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ‘பிளஸ் எக்ஸ்பிரஸ்வேஸ் பெர்ஹாட்’ நிறுவனம் அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வரும் மலேசியர்களுக்குத் தாமதத்தை ஏற்படுத்து வதற்காக இணைப்புப் பாதையில் சாலைப் பணிகள் பெற்று வருவதாக அண்மையில் பேஸ்புக்கில் பரவிய தகவலையடுத்து, அந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலேசிய தேர்தல்: ஒன்பது நாடுகளிலிருந்து வரும் தேர்தல் கண்காணிப்பாளர்கள்

மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள 14வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 9 நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மலேசியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். மாலத் தீவு தேர்தல் ஆணையத் தலைவர் அஹமட் ஷரிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மலேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர் கே. பாலசிங்கம் வரவேற்றார். தாய்லாந்து, அசர்பைஜான் ஆகிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் நேற்று மலேசியா வரவிருந்தனர்.

மலேசிய தேர்தல்: சுப்ரா: சிகாமட்டில் பெல்டா குடியிருப்பாளர்களுக்கு உதவி

சிகாமட் தொகுதியிலுள்ள பாலோங் தீமோர் டூவா, பாலோங் தீமோர் தீகா ஆகிய பெல்டா குடியிருப்புகளிலுள்ள 265 குடியிருப்பாளர்களுக்கு மறுநடவுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தக் குடியிருப்பாளர்களுக்குத் தலா 4,000 ரிங்கட் வழங்கப்படும் என அத்தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் சுப்பிரமணியம் நேற்று அறிவித்தார்.

வறுமைக்கு எதிரான அனைத்துலக நடை

மணிலாவின் ரோக்சாஸ் புலிவார்டில் ‘இக்லெசியா னி கிரிஸ்டோ’ எனும் சமயக் குழுவின் உறுப்பினர்கள் ‘வறுமைக்கு எதிரான அனைத்துலக நடை’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் நடை நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. அதில் 519,221 பேர் கலந்துகொண்டனர். அந்தச் சாதனையை முறியடிக்கும் நோக்கில் நேற்றைய நடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம்: ஏஎஃப்பி

காதுக்குள் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த கரப்பான் பூச்சி

அமெரிக்க மாது ஒருவரின் காதில் புகுந்த ஒரு கரப்பான் பூச்சி கடைசியாக ஒன்பது நாட் களுக்குப் பிறகு முற்றிலும் அகற் றப்பட்டது. ஃபுளோரிடாவைச் சேர்ந்த கேத்தி ஹோலி என்ற பெண்மணி, தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி ‘செல்ஃப்’ என்ற இணையத்தளத் தில் எழுதி இருக்கிறார்.

அசுத்தமான கால்வாய் நீரைப் பருகியதில் 10 பேர் பலி; 121 பேருக்குச் சிகிச்சை

நோம்பென்: அசுத்தமான நீரைப் பருகிய கம்போடியாவின் ஸ்ரீ நோன் கிராம மக்கள் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 121 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராட்டி வட்டார துணைத் தலைமைக் காவல் அதிகாரி ஓன் ஃபி கூறியுள்ளார். மாண்டவர்களில் நால்வர் ஆடவர், அறுவர் பெண்கள் என்று ‌ஷின்ஹுவா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

127 பேரைக் கடத்திய அனைத்துலக கும்பல்: மலேசியாவில் 16 பேர் கைது

கோலாலம்பூர்: ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில் 16 பேரை மலேசியா கைது செய்துள்ளது. இலங்கை நாட்டவர் என நம்பப்படும் 127 குடியேறிகளுடன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலை வழிமறித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரி வித்தனர். ‘எட்ரா’ எனப் பெயரிடப்பட்ட கப்பல் ஒன்றை தெற்கு ஜோகூருக்கப்பால் மலேசிய எல்லைக்குள் கண்டுபிடித்ததாக தேசிய போலிஸ் தலைமை அதிகாரி முகமது ஃபூஸி ஹருன் கூறினார்.

ஆயுதம் விற்க அமெரிக்கா மறுத்தால் பதிலடிக்குத் தயாராகும் துருக்கி

அங்காரா: துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதன் தொடர்பில் முன்மொழியப்பட்ட வரைவை அமெரிக்கா சட்டமாக் கினால் துருக்கி அதற்கு பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் காவுசோக்லு நேற்று கூறியுள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை துருக் கிக்கு ஆயுத விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்துவது உள் ளிட்ட 717 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($956 பில்லியன்) மதிப்பிலான வருடாந்திர ஆயுதக் கொள்கைச் சட்டம் வெளியிடப் பட்டது.

ஆப்கானிஸ்தானில் 7 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்

காபூல்: அரசாங்கம் நடத்தும் மின் உற்பத்தி நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த ஏழு இந்தியப் பொறியாளர்களை நேற்று அடையாளம் தெரியாத துப்பாக்கிக் காரர்கள் கடத்தியதாக ஆப் கானிஸ்தான் போலிஸ் தெரிவித் துள்ளது. இந்தியாவின் வெளி யுறவு அமைச்சுடன் இது குறித்து தொடர்புகொண்டிருப்பதாக ஆப் கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பொறியாளர்கள் ஆப் கானிஸ்தானின் பக்லான் வட்டாரத் தில் உள்ள மின் உற்பத்தி நிலை யத்தில் பணிபுரிபவர்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநருடன் சேர்த்து அந்தப் பொறியாளர்களும் கடத்தப்பட்ட தாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Pages