You are here

உல‌க‌ம்

இந்தோனீசியா நிலநடுக்கம்: ஒருவர் பலி

ஜாவா தீவின் தெற்கே செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 வயது நானா கர்யானா என்ப வர் உயிரிழந்தார் என்று சமுதாய விவகார அமைச்சு கூறியுள்ளது. மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டதோடு ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் சேதமடைந்துள்ள தாக கூறப்பட்டது. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கத்தின் காரணமாக அரசு அலுவலகங்கள் உட்பட ஒருசில கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பந்தென் நகரில் உள்ள சுகர்னொ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் கண்ணாடி சுவர் விழுந்து சிதறியது.

இந்தோனீசிய உள்ளாட்சி தேர்தல்: ஊழல் தடுப்பு முயற்சி மும்முரம்

ஜகார்த்தா: இவ்வாண்டு இந்தோனீசியா முழுவதும் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவது, இதர ஊழல் செயல்களில் ஈடுபடுவது ஆகிய குற்றச் செயல்களைத் தடுக்க இந்தோனீசிய அரசாங்க அமைப்பு கள் ஏற்பாடுகளை செய்து வருகின் றன. 2011 தேர்தல் ஏற்பாட்டாளர்கள் சட்டத்தின்படி விதிமீறல்களைத் தடுக்கவும் லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவது போன்ற ஊழல் செயல்களைச் செய்பவர் களைக் கண்டிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும். நடவடிக்கைகளை பவஸ்லு எனும் தேர்தல் மேற்பார் வையாளர் அமைப்பு முன்னின்று எடுக்கும்.

இந்தோனீசிய பங்குச்சந்தை: சரிந்த பகுதி பயன்பாட்டுக்குத் திறப்பு

ஜகார்த்தா: சரிந்து விழுந்த இந்தோனீசிய பங்குச் சந்தையின் ஒரு பகுதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பங்குச்சந்தையின் இடைத்தள மாடி நடைபாதை சரிந்ததில் 77 பேர் காயமுற்றனர். சுடிர்மான் வர்த்தக வட்டாரத்தில் அமைந்திருக்கும் பங்குச்சந்தைக் கட்டடத்தின் அந்தப் பகுதிக்குக் கூடுதல் வலு சேர்க்கும் வகையில் செப்பனிடப்பட்டு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இம்மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த சரிவுக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை தொடர்கிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பங்குச்சந்தைக் கட்டடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த மாணவர்கள் என்றும் கூறப்பட்டது.

சிலாங்கூரில் கனமழை; மேம்பாலத்தில் வெள்ளம்

படம்: தி ஸ்டார்

சிலாங்கூரில் கனமழை காரணமாக பெட்டாலிங் ஜெயாவிலிருக்கும் 30 அடி உயர மேம்பாலச் சாலை ஒன்றில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளம் வாகனமோட்டிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. நீர் வடியும் துளைகளை ஏதாவது பொருட்கள் மூடியிருக்க வேண்டும் என்றும் அதுவே மேம்பாலச் சாலை வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கும் என்றும் இந்தப் படத்தை எடுத்து அனுப்பிய வாசகரான திருவாட்டி ஹயாட்டி இஸ்மாயில் கூறினார். இதனால், ஜாலான் யுனிவர்சிட்டி சாலை நெடுகிலும் போக்குவரத்து மெதுவடைந்து காணப்பட்டது. படம்: தி ஸ்டார்

200,000 கொடையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அம்பலம்

மலேசியாவில் 200,000 பேருக்கும் அதிக உறுப்பு நன்கொடையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் அம்பலமாகி இருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 46.2 மில்லியன் கைத்தொலைபேசியாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியா னதாக மூன்று மாதத்திற்கு முன் தெரிவிக்கப்பட்டது.

பெய்ஜிங் நகரில் சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்த திட்டம்

பெய்ஜிங்: சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் மூட பெய்ஜிங் திட்டமிடுகிறது. குறைந்தபட்சம் 40 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் அத்தகைய சட்டவிரோத கட்டடங்களையும் 500 உற்பத்தி நிறுவனங்களையும் மூடுவதோடு அத்தகைய கட்டடங்கள் இனிமேலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய இருப்பதாக அந்த நகரின் தற்காலிக மேயர் சென் ஜினிங் அரசுக்கு சமர்ப்பித்த தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நகர மையத்திலிருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடி அமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டின் வெற்றி ரகசியத்தைத் தேடும் ஆடவர்

பெய்ஜிங்: சோங்சிங் பகுதியில் இருக்கும் பாலம் ஒன்றின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக தனிமையில் வசித்துவரும் திரு வாங் செங்ஷெள, 49, லாட்டரி சீட்டில் வெற்றிபெறும் எண்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. அன்றாடச் செலவுகளுக்காக தபால் நிலையத்திலும் துப்புரவாளராகவும் அவர் வேலை செய்தது தெரியவந்துள்ளது.

சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிரடி வரி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பொருட்களும் சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து வரும் எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் கூடுதலான வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நேற்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

2019ல் அமெரிக்கத் தூதரகம் ஜெருசலத்துக்கு மாறும்

ஜெருசலம்: 2019ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் தூத ரகம் ஜெருசல நகருக்கு மாற்றப் படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள் ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்துக்கு மாற்றும் அமெரிக்காவின் முடி வால் பாலஸ்தீனர்கள் ஆத்திர மடைந்துள்ளனர். அனைத்துலக நாடுகளும் தங்களுடைய கவலையை வெளிப் படுத்தியுள்ளன. திரு பென்ஸ் தமது பேச்சில் இஸ்ரேலுடனான அமைதித் பேச்சை பாலஸ்தீனர்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க செலவின மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்து

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தற் காலிக நிதி மசோதாவுக்கு குடி யரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து முடங்கிக் கிடந்த அரசாங்கம் செயல்படத் தொடங் கியது. இளம் சட்டவிரோத குடியேறி களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியினரின் கோரிக் கையை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டதால் மசோதா சுமூ கமாக நிறைவேறியது. இதையடுத்து அதிபர் டோனல்ட் டிரம்ப் மசோதாவில் கையெழுத்திட்டு அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Pages