You are here

சிங்க‌ப்பூர்

2018ல் கட்டணத்தை உயர்த்தும் இரு ஆரம்பகால பள்ளி நிறுவனங்கள்

சிங்கப்பூரிலுள்ள இரு பெரிய ஆரம்பகால பள்ளி நிறுவனங் கள் தங்கள் கட்டணங்களை இவ்வாண்டு உயர்த்துகின்றன. ‘பிசிஎஃப்’ நிறுவனம் தனது குழந்தைப் பராமரிப்பு மற்றும் சிசு பராமரிப்புக் கட்டணம் ஆகியவற்றை ஐந்து விழுக்கா டும் பாலர் பள்ளிக் கட்டணத்தை $20யும் உயர்த்தவுள்ளது. ‘மை ஃபெஸ்ட் ஸ்கூல்’ நிறுவனம் தனது சிசு பராமரிப் புக் கட்டணத்தை $5லிருந்து $20 வரையும் குழந்தைப் பராமரிப்புக் கட்டணத்தை $6லிருந்து $33 வரையும் உயர்த் துகிறது. தீவு முழுவதும் 130 நிலையங்களைக் கொண்டுள் ளது ‘மை ஃபெஸ்ட் ஸ்கூல்’ நிறுவனம்.

காவடி தூக்கும் பக்தர்களுக்கு விளக்கக் கூட்டங்கள்

இம்மாதம் 31ஆம் தேதி தைப்பூசத் தினத்தன்று காவடி தூக்கும் பக்தர்களுக்காக சிறப்பான இரு விளக்கக்கூட்டங் கள் நடைபெறும். முதலாவது கூட்டம் வரும் 4ஆம் தேதி வியாழக்கிழமையும் இரண்டாவது கூட்டம் 6ஆம் தேதி சனிக்கிழமையும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பிஜிபி திருமணத்தில் இடம்பெறும். தைப்பூசத் தினத்தன்று சந்திர கிரகணமும் இடம்பெறவி ருப்பதால், காவடி தூக்கும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. காவடி தூக்குபவர்கள், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் போன்றோர் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தைப்பூசம் 2018 ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கிறது.

டெக் வை புளோக்கிலிருந்து வீசப்பட்ட மின்-ஸ்கூட்டர்

டெக் வை கிரசெண்ட் புளோக் 165Aயிலிருந்து நேற்று முன்தினம் காலை சுமார் 8 மணிக்கு ஒரு மின்-ஸ்கூட்டர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செயலை கண்மூடித்தனமான செயல் என போலிசார் வகைப்படுத்தியுள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. மாடியிலிருந்து வீசப்பட்ட அந்த மின்-ஸ்கூட்டர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது விழுந்தது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

புத்தாண்டு குதூகலத்தைப் பரப்பிய இளைய தொண்டூழியர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயில் சேவை தாமதங்கள், தடை கள் ஆகியவற்றை பலமுறை சந் தித்த எஸ்எம்ஆர்டி ரயில் நிலைய ஊழியர்கள் அந்தச் சமயங்களில் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்தார்கள் என்பதை யாரும் மறக்கக்கூடாது என்பதை வலியு றுத்த இளைய தொண்டூழியர்கள் சிலர் அவர்களுக்கு ஆண்டிறுதி அன்பளிப்புகளை நேற்று வழங்கி உற்சாகப்படுத்தினர். ‘சூ சூ’ திட்டம் என்று அழைக் கப்படும் இதை தான் ஏற்று செய்த தாகக் கூறினார் சிங்கப்பூர் நிர்வா கப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 21 வயது மாணவர் திரு லீ சி என். டோபி காட், சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையங்களில் திரு லீ தனது நண்பர்களுடன் எஸ்எம் ஆர்டி ஊழியர்களுக்கு அன்பளிப் புப் பொட்டலங்களை வழங்கினார்.

தலைகீழாகக் கவிழ்ந்த கார்: மூவர் காயம்

படம்: TELEGRAM

தானா மேரா கோஸ்ட் ரோடு, தானா மேரா ஃபெர்ரி ரோடு சந்திப்பில் நேற்றுக் காலை 7.45 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்து உள்ளனர் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித் தது. இரு கார்கள், ஒரு லாரி ஆகியவை சம்பந்தப் பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மூன்று ஆடவர் கள் 23க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் போலிசார் கூறினர்.

ஹவ்காங் சண்டை: ஃபேஸ்புக்கில் பரவிய காணொளி, மாமனார் கைது

ஹவ்காங்கில் உள்ள கார் நிறுத் தும் இடத்தில் இம்மாதத் தொடக் கத்தில் மருமகனுடன் சண்டை போட்ட 56 வயது ஆடவரைக் கைது செய்திருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கெல்வின் ஹோ என்பவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அந்தச் சண்டையின் ஒரு பகுதியைக் காட்டும் காணொளி ‘ஃபேஸ்புக்’கில் பர வியது. அந்தக் காணொளியை 60,000க்கும் அதிகமானோர் பார்த்தனர். சுமார் 1,200 பேர் அதைப் பகிர்ந்து கொண்டனர். ஹவ்காங் அவென்யூ 8ல் இருக்கும் புளோக் 644க்கு அருகில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இம்மாதம் 9ஆம் தேதி மாலை 6.38 மணிக்கு சண்டை நிகழ்ந்தது.

மின்-ஸ்கூட்டர்களில் பதிவு செய்யப்படாத 175 மின்னேற்றி பொருத்திகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்யப்படாத மின்னேற்றி பொருத்திகளை (சார்ஜிங் அடாப்டர்) மின்-ஸ்கூட்டர் விற் பனை செய்யும் ஆறு நிறுவனங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக ‘ஸ்பிரிங் சிங்கப்பூர்’ அமைப்பு மேற்கொண்ட சந்தைக் கண்காணிப்பில் இது தெரிய வந்துள்ளது. ‘கார்பன்ரெவோ’, ‘இமார்க்கோ என்டர்பிரைஸ்’, ‘இஸ்கூட்.எஸ்ஜி’, ‘ஃபால்கான் பிஇவி’ ‘மினிமோட் டார்ஸ்-மேக்ஸ்டெக் பிளஸ்’, ‘ஸ்கேட்லைன் ஸ்கேட்ஸ்கூல்’ ஆகியன அந்த ஆறு நிறுவனங்கள் என்று அவ்வமைப்பு தெரிவித்தது.

எஸ்எம்ஆர்டி குத்தகை: மோசடிக் குற்றங்களை எதிர்நோக்கும் நால்வர்

‘எஸ்எம்ஆர்டி டிரெயின்ஸ்’ நிறு வனத்தின் முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மூவர் மோசடிக் குற் றங்கள் தொடர்பில் நேற்று நீதி மன்றத்துக்கு வந்திருந்தனர். $9.8 மில்லியன் மதிப்புள்ள 28 குத்தகைகள் வழங்கப்பட்ட விவ காரத்தில் இரு நிறுவனங்களுடன் அவர்கள் ரகசிய தொடர்பு வைத் திருந்ததாகக் குற்றம் சாட்டப்படு கிறது. மோசடிக் குற்றங்கள் கடந்த 2007ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடை யில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூர் செய்தியாளருடன் சேர்த்து மூவரை விடுவித்தது மியன்மார்

ஆளில்லா வானூர்தியை (டிரோன்) கொண்டு காணொளி பதிவு செய்ததால் விமான சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் வைக்கப்பட்ட சிங்கப்பூரரான கேமரா பதிவாளர் லவ் ஹொன் மெங், மலேசியாவைச் சேர்ந்த செய்தியாளர் மொக் சொய் லின், உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் ஆங் நயிங் சொ, ஓட்டுநர் லா டின் ஆகியோர் தலைநகர் நேப்பிடா அருகேயுள்ள யமெதின் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மியன்மாரின் நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகே டிரோனை கொண்டு காணொளி பதிவு செய்ய முனைந்தபோது அவர்கள் போலிசாரால் பிடிக்கப்பட்டனர்.

மின்சாரக் கட்டணம் சராசரியாக 6.3% உயர்வு

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்திருப்பதன் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண் டில் மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 6.3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு காலாண்டுடன் ஒப் பிடுகையில் யூனிட் ஒன்றின் விலை சராசரியாக 1.26 காசுகள் அதிகரிக்கும். இந்தக் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். மின் உற்பத்திக்குப் பயன்படுத் தப்படும் இயற்கை எரிவாயுவின் விலை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரித் திருப்பதாக எஸ்பி குழுமம் நேற்று தெரிவித்தது.

Pages