You are here

சிங்க‌ப்பூர்

எம்.பி.யைத் தாக்கிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங்

மக்கள் சந்திப்பு நேரத்தின்போது ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங்கைத் தாக்கியதாக 32 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. முகம்மது அமீன் முகம்மது மைதீன் எனும் அந்த ஆடவர் அத்து மீறி நுழைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் கடந்த திங்களன்று இரவு 10.10 மணியளவில் கிளமென்டி அவென்யூ 2, புளோக் 334ன் முதல் தளத்தில் உள்ள மக்கள் சந்திப்பு அறைக்குள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் பலவந்தமாக டாக்டர் டானின் கழுத்தைப் பிடித்து, பின் புறமாக சுவரில் மோதச் செய்து, பலமுறை அவரது உடலில் குத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

பயணியின் மூக்கை உடைத்த வெளிநாட்டவர்

எம்ஆர்டி நிலையத்தில் தன்மீது மோதிய சக பயணியைத் தாக்கி, மூக்கை உடைத்தற்காக முன்னாள் ஆட்சேர்ப்பு ஆலோசகர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கு கிறார். பிரிட்டனைச் சேர்ந்த பெஞ்ச மின் ஜான் ஹோல்மன், 33, என்ற அந்த ஆடவர், சக பயணிக்குக் குத்துவிட்டதைக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். இதன் விளை வாக பெஞ்சமினின் வேலையும் பறிபோனது. பெஞ்சமினுக்கு அபராதம் அல்லது குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கும்படி அவரு டைய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெம்பனிஸ்-பாசிர் ரிஸ் இடையே தடைபட்ட ரயில் சேவை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிழக்கு - மேற்கு ரயில் தடத்தில் தெம்பனிஸ், பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையே நேற்றுப் பிற்பகலில் சிறிது நேரம் சேவை தடைபட்டது. பயண நேரம் கூடுதலாக 30 நிமிடங்கள் ஆகலாம் என்று பிற்பகல் 1.50 மணியளவில் டுவிட்டர் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. அவ்விரு நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து சேவைகளும் விடப்பட்டதாக அது கூறியது. பிற்பகல் 2.15 மணியளவில் இன்னும் பத்து நிமிடங்களில் ரயில் சேவை தொடங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தொழில்துறைத் தலைவர்கள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உதவும் பணியில் தொழில்துறைத் தலைவர்கள் நூறு பேர் அமர்த்தப்படவுள்ளனர். வேலையிட சமூகத் தலைவர்கள் திட்டத்தின்கீழ் மனிதவள அமைச்சு இவ்வாண்டு பிற்பகுதியில் அவர்களை நியமிக்க இருக்கிறது. ஃபுராமா சிட்டி சென்டரில் நேற்று நடந்த வருடாந்திர ‘எஸ்ஜிசெக்யூர்@ஒர்க்பிளேஸ்’ கருத்தரங்கின் போது இது அறிவிக்கப்பட்டது. முதலாளிகள், தொழிற்சங்க உயரதிகாரிகள், தொழிலக அல்லது தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட இதுவரை 80 பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கள்ள சிகரெட்: ஆடவரிடமிருந்து $1.5 மி. பறிமுதல் செய்ய உத்தரவு

கள்ள சிகரெட்: ஆடவரிடமிருந்து $1.5 மி. பறிமுதல் செய்ய உத்தரவு தீர்வை கட்டாமல் 307 பெட்டிகளில் சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்த டான் ஹோக் சுவீ, 68, என்ற ஆடவரிடம் இருந்து $1,575,288.70 தொகையைப் பறிமுதல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக 2013ஆம் ஆண்டில் டானுக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  மேல்விசாரணையில் கணக்கில் காட்டாத வருமானத்தின் மூலம் டான் சொத்து சேர்த்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தன என்று போலிசும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

புதிய விளக்குகள், எச்சரிக்கை ஒலி

ரகசிய அமலாக்க நடவடிக்கைகளுக்காக போக்குவரத்து போலிஸ் கார்களில் விட்டு விட்டு எரியும் புதிய விளக்குகளும் எச்சரிக்கை ஒலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளன. ‘யூஸ் யுவர் ரோட்சென்ஸ்’ எனும் தனது ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்தப் புதிய அம்சங்களுடன் கூடிய காரின் படத்தை போலிஸ் வெளியிட்டு இருக்கிறது. காரின் பின்புறம் பொருத்தப் பட்டுள்ள விட்டு விட்டு எரியும் விளக்குகளில் ஒரு எல்இடி அறிவிப்புப் பலகையும் அடங்கும். ‘சாலைத்தடத்தை விட்டு விலகி இருக்கவும்’ என்பது உள்ளிட்ட வெவ்வேறு அறிவுப்புகளை அது காட்டும்.

எஸ்எம்ஆர்டியின் தலைமை நிர்வாகி பதவி விலகுகிறார்

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம், பொதுச் சேவை பிரிவு

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக், 55, ஐந்தரை ஆண்டு காலம் பதவி வகித்துவிட்டு அந்தப் பதவியில் இருந்து விலகுகிறார். தற்காப்புப் படையின் முன் னாள் தலைவர் நியோ கியன் ஹோங் அவருக்குப் பதிலாக எஸ்எம்ஆர்டி தலைமை நிர்வாகி யாக பொறுப்பேற்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த தகவல் வட் டாரங்கள் மூலம் இது தெரியவந் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. திரு நியோ, 54, இப்போது தற்காப்பு மேம்பாட்டுத் துறையின் நிரந்தரச் செயலாளராக இருக்கி- றார். திரு குவெக்கிற்கு பதிலாக திரு நியோ 2010ல் தற்காப்புப் படைத் தலைவராகப் பொறுப்பேற் றார்.

வேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை தேடுவோருக்கான தேசிய இணையவாசல் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத் தைக் கொண்டு வேலை தேடுவோ ரின் திறன்கள் வேலைகளுக்குப் பொருத்தமானதா என்று முதலா ளிகள் அறிந்துகொள்ளலாம். வேலை தேடுவோர் அரசாங்கத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற் றுக்கொண்டிருந்தால் அதையும் முதலாளிகள் தெரிந்து கொள்ள புதிய தொழில்நுட்பம் வழிசெய் கிறது. ‘மைகெரியர்ஸ்ஃபியூச்சர்.எஸ்ஜி’ (My CareersFutures.sg) என்ற இ ணை ய வா ச லை சி ங் க ப் பூ ர் ஊழியரணி அமைப்பு, அரசாங்க தொழில் நுட்ப அமைப்பான ‘கவ் டெ க் ’ ஆகியவை இணைந்து நிறுவின.

பின்னோக்கி நகர்ந்து முதியவரை மோதிய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்

படம்: FACEBOOK/ SG ROAD VIGILANTE

யூனோஸ் கார் நிறுத்தும் இடத்தில் பின்னால் நகர்ந்துகொண்டிருந்த டாக்சி, 75 வயது முதியவரை மோதியதைத் தொடர்ந்து டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளார். யூனோஸ் கிரசெண்ட் புளோக் 7ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த அந்தச் சம்பவம் காணொளி ஒன்றில் பதிவானது. முதியவர் ஒருவர் இரண்டு கைகளில் பைகளுடன் கார் நிறுத்தும் இடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தார். திடீரென, கம்ஃபர்ட் டாக்சி ஒன்று பின்னோக்கி நகர்ந்து அந்த ஆடவரை மோதியது. அந்த முதியவர் பின்னோக்கி விழுந்தார்.

வர்த்தக, தொழில் சபையின் புதிய தலைவராக சந்துரு

டாக்டர் டி.சந்துரு

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையில் (சிக்கி) நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் புதிய இயக்குநர் சபை தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. அச்சபையின் புதிய தலைவ ராக மாடர்ன் மாண்டிசோரி இன் டர்நேஷனல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் டி.சந்துரு (படம்) பொறுப்பு வகிக்க இருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக இவர் வர்த்தக, தொழில் சபை யின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.

Pages