You are here

சிங்க‌ப்பூர்

வாகன நுழைவு அனுமதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை

ஜோகூ­ருக்­குள் செல்லும் சிங்கப்­பூர் வாக­னங்களுக்­கான வாகன நுழைவு அனுமதி ஏற்பாடு இன்னும் அமல்­படுத்­தப்­ப­ட­வில்லை. அந்த ஏற்­பாட்டை நடை­முறைப்படுத்­து­வதற்­கான தொழில்­நுட்ப விவ­ரங்களை மலேசியா இன்­ன­மும் பூர்த்­தி­செய்து வருவதே இந்தத் தாம­தத்­துக்­குக் காரணம் என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது. மே மாதம் அந்தத் திட்டம் தொடங்­கும் என்று முன்பு அறி­விக்­கப்­பட்டு இருந்த­போ­தி­லும் அதற்­கான தேதி முடி­வா­க­வில்லை என்று மலே­சி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். திட்டம் செயல்பாட்டுக்குத் தயாரான பின்பு நடை­முறைப்­படுத்­தப்­படும் என அதி­கா­ரி­கள் தெரிவித்தனர்.

புகைமூட்டத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி

புகை­மூட்­டத்­தால் தென்­கிழக்கு ஆசி­யா­வில் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளா­தார, சுகாதார, சமூகத் தாக்­கங்கள் வட்டார அளவில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன. சென்ற ஆண்டு புகை­மூட்­டத்­தால் ஏற்­பட்ட பாதிப்பு 1997, 2013 ஆகிய ஆண்­டு­களில் ஏற்­பட்ட தாக்கத்தை­விட அதி­க­மாக இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த ஆய்வில் பயன்­படுத்­தப்­படும் தரவு வகைகள் பற்றி ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சுற்­றுப்­புற, நீர்வள அமைச்­சர் மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று தெரி­வித் ­தார். வெவ்வேறு நாடுகள் தங்க­ளது பொரு­ளி­யல் நிலைக்­கேற்ப வெவ்வேறு தக­வல்­களைத் திரட்டி வைத்­துள்­ளன.

டாக்டர் சீ: இந்நாட்டில் முதியோர் வாழ்க்கை மேம்பட வேண்டும்; அதற்காகப் பாடுபடுவேன்

சிங்கப்பூரில் முதியோரின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அவர்கள் இந்நாட்டின் வளர்ச் சிக்­காகப் பாடுபட்ட முது கெலும்பு­கள். அவர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் மனநிறை வான வாழ்க்கை வாழ்வதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட வேண் டும் என்று சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அக்கட்சியின் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட் பாளருமான டாக்டர் சீ சூ ஜுவான் தெரிவித்துள்ளார். நேற்றிரவு புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சீ, “முதிர்ச்சியடைந்த பேட்டையாக உள்ள புக்கிட் பாத்தோக்கில் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள்.

மார்சிலிங் வீவக வீட்டில் தீ

மார்சிலிங் வீவக வீட்டில் தீ

மார்சிலிங் லேன் 3ல் உள்ள வீவக வீட்டில் நேற்றுத் தீ மூண்டதில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. நீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மேலும் புளோக்கிலிருந்து 20 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அது கூறியது.

மார்சிலிங் டிரைவ் புளோக் 215ல் வீடு தீப்பற்றி எரிந்ததில் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் நாசமடைந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வருமானத்தை மறைத்த கண் மருத்துவர் இடைநீக்கம்

கூடுதலாக ஈட்டிய ஏறக்குறைய 450,000 வெள்ளி வருமானத்தை முதலாளியிடமிருந்து மறைத்ததற்காக 55 வயது கண் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ‘பசிபிக் ஹெல்த்கேர் ஸ்பெஷலிஸ்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்ட மருத்துவ ஆலோசகரான முன்னைய தேசிய நீச்சல் வீரரான டாக்டர் மார்க் டே சே சின், நிறுவனத்துடனான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து வருமானத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ‘லேசிக்’ அறுவை சிகிச்சை மூலம் தனக்குக் கிடைத்த 445,874 வெள்ளியை அவர் மறைத்துவிட்டார் என்று- தெரிவிக்கப்பட்டது.

புற்று நோயாளிகளின் உடல் எடை குறையும் பிரச்சினைக்கு புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு

புற்று நோயாளிகளுக்கு உடல் எடை குறைவது ஒரு பிரச்சினை யாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணும் வகை யில் புதிய சிகிச்சை முறை சிங்கப் பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் சிங்கப்பூர் மரபணு ஆய்வுக் கழகமும் டியூக்=என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் புற்று நோயாளிகளிடம் எடை குறை வதற் கான முக்கிய காரணத்தைக் கண்டறிந்துள்ளன. உடலின் கொழுப்புச் சத்தை தசைகள் அதிகப்படியாகக் கரைத்துவிடுவதே எடை குறை வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

சிறார்களிடம் அதிகரிக்கும் கை, கால், வாய்ப் புண் நோய்

சிறார்களிடையே கை, கால், வாய்ப் புண் நோய் அதிகரித்து வருகிறது. இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சின் இணையத்தள செய்தி, கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு ஏப்ரல் 17லிருந்து 23ஆம் தேதி வரையிலான வாரத்தில்தான் ஆக அதிகமாக 1,052 பேருக்கு கை, கால், வாய்ப் புண் நோய் ஏற் பட்டதாகக் குறிப்பிட்டது. இந்த எண்ணிக்கை இவ் வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஏறத் தொடங்கியதாகவும் அமைச்சு கூறியது.

மும்முறை பாலியல் பலாத்காரம்; வழக்கு விசாரணை தொடங்கியது

இருபது நிமிடங்களில் மூன்று இடங்களில் ஒரே பெண்ணிடம் மூன்று முறை பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படும் 26 வயது நபர் மீதான வழக்கு விசாரணை நேற்றுத் தொடங்கியது. 2013 சீனப் புத்தாண்டின் விடி யற்காலைப் பொழுதில் ரிவர் வேலி குளோஸை நோக்கிச் செல்லும் மார்ட்டின் ரோட்டில் நடைபெற்ற சம்பவத்தில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளானார். இந்த வழக்கின் முதல் நாளான நேற்று தற்போது 30 வயதாகும் சிங்கப்பூரரான லிம் சூன் பெங் மீது பாலியல் பலாத் காரம் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பிரதமர் பெயரில் புதிய விருது

பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்கள், இருவழித்தொடர்பு மின்னி லக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் புதிய விருதுக்கு அடுத்த ஆண்டிலிருந்து விண்ணப்பம் செய்யலாம். ‘லீ சியன் லூங் இருவழித் தொடர்பு மின்னிலக்க ஊடக அறி வார்ந்த தேச விருது’ என்றழைக் கப்படும் அறக்கட்டளை நிதி, பிர தமர் வழங்கிய $250,000 நன் கொடையுடன் சாத்தியமானது. ரிபப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரி நேற்று நடத்திய இவ் வாண்டின் முதல் பட்டமளிப்பு விழாவின்போது தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் விருதை அறிவித்தார்.

Pages