You are here

சிங்க‌ப்பூர்

சென்ற ஆண்டில் 540 விலங்குகள் பிறந்தன

சிங்கப்பூரில் வனவிலங்கு சரணாலயங்களில் சென்ற ஆண்டு 540 விலங்குகள் பிறந்தன. சிங்கப்பூர் விலங்கு காட்சி சாலைகளில் 173, ரிவர் சஃபாரியில் 43, இரவு சஃபாரியில் 90, ஜூரோங் பறவை பூங்காவில் 234 விலங்குகள் பிறந்தன. அவை 145 சிற்றினங் களைச் சேர்ந்தவை. இவற்றில் 39 சிற்றினங்கள் அரிய விலங்குகள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிதாகப் பிறந்த விலங்குகளில் போர்னியோ மனிதக் குரங்கு, நீர்யானை முதலானவை அடங்கும்.

மனிதன்- விலங்கு சகவாழ்வு பற்றி போதிக்க செயல்திட்டம்

சிங்கப்பூரின் வனவிலங்குகளைப் பற்றி புரிந்துகொண்டு அவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றி பொதுமக்களுக்குச் சிறந்த முறையில் போதிப்பதற்காக தேசிய பூங்கா வாரியம் புதிதாக ஆறு மாதச் செயல்திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது. 16 முதல் 30 வரை வயதுள்ள மக்களுக்காக அந்தச் செயல்திட் டம் இடம்பெறும். மனிதர்களும் வனவிலங்குகளும் சகவாழ்வு வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அந்தச் செயல்திட்டம் போதிக்கும். ‘பன்மய உயிரியல் சவால்கள்’ என்ற அந்தச் செயல்திட்டத்தில் இதுவரை சுமார் 80 பேர் பதிந்து கொண்டு இருக்கிறார்கள்.

புதிய பட்டப்படிப்பு அறிமுகம்

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், (எஸ்ஐடி) விமானப் பொறியியல் துறையில் பட்டப் படிப்பை போதிக்க விருக்கிறது. இத்தகைய படிப்பை போதிக்கும் சிங்கப்பூரின் முதலா வது தன்னாட்சிப் பல்கலைக் கழகம் இதுவே ஆகும். விமானப் பொறியியல் துறை யில் ஹானர்ஸ் பட்டம் பெறக்கூடிய அந்த மூன்றாண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர் வோருக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும். முதன்முதலாக 48 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று இந்தப் பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சிகளில் ஜன.19 முதல் தேவைக்கேற்ப கட்டணம்

டாக்சிகளுக்கு தேவை அதிகமாக இருக்கும்போது அதிக கட்டணத்தை விதிக்கவும் தேவை குறைவாக இருக்கையில் கட்டணத்தைக் குறைக்கவும் வகை செய்யும் புதிய தேவைக்கேற்ற டாக்சி கட்டண முறை கம்பர்ட்டெல்குரோ டாக்சிகளில் ஜனவரி 19 முதல் நடப்புக்கு வரும். இந்த நிறுவனத்தில் 13,600 டாக்சிகள் இருக்கின்றன. இந்தப் புதிய கட்டண முறை வாய்ப்பை உபர் செயலி, புதிய உபர் ஃபிளாஷ் வசதியின் வழியாக பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கம்ஃபர்ட் டெல்குரோ, உபர் நிறுவனங்களுக்கு இடைப்பட்ட கூட்டுத்தொழில் விளைவாக இந்த வசதி பயணிகளுக்குக் கிடைக்கிறது.

அனைத்துலக பவளப்பாறை ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

அனைத்துலக பவளப்பாறை ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தேசிய பூங்கா வாரியம் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஒரு பயிலரங்கின் வழி விளக்குவது, கலந்துறவாடும் கண்காட்சிகள், சிங்கப்பூரின் கடல் சுற்றுப்புற வாழ்விடம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பது முதலான பலவும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும். ஓர் ஆண்டு முழுவதற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. மேல் விவரங்களுக்கு www.nparks.gov.sg/iyor என்ற இணையத்தளத்தை நாடலாம்.

2019க்குள் மின்சார, ஓட்டுநரில்லா பேருந்து

மின்சாரத்தைக் கொண்டு இயங் கும் ஓட்டுநரில்லா பேருந்தை உரு வாக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) வோல்வோ பஸ் நிறுவனமும் இணைந்து செயல்படும் என்றும் சிங்கப்பூரில் அந்தப் புதிய மேம்பாட்டை 2019ஆம் ஆண்டின் முதல் பகுதியில் சோதனை செய்யும் நோக்கம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

எரிவாயு கசிவு; பாசிர் ரிஸ் குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பாசிர் ரிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் எரிவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலையஸ் சாலை புளோக் 610ல் புதன்கிழமை காலை 10 மணி முதல் சுமார் எட்டு மணி நேரத்துக்கு எரிவாயு வாடை அதிகளவில் நுகரப்பட்டது என்று நேற்று ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

‘ஜூ கூன் விபத்தைத் தவிர்க்க ரயில் ஓட்டுநருக்கு நேரம் போதவில்லை’

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். தொலைக்காட்சிப் படம்

ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் நின்றிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயிலின் ஓட்டுநருக்கு அவசர பிரேக் போடப் போதிய நேரமில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். ரயில்களுக்கு இடையில் பாது காப்பான தூரம் இருப்பதை உறுதிப்படுத்தும் ரயிலின் இரண் டாவது பாதுகாப்பு அம்சம் செயலிழக்கக்கூடும் என ரயில் இயக்கக் கட்டுப்பாட்டு மையம் எதிர்பார்க்காதது இதற்குக் காரணம் என்றார் அவர்.

‘கட்டட மேற்பூச்சு சான்றளிப்பை சந்தேகிக்க ஆதாரமில்லை’

கட்டட மேற்பூச்சு விவகாரத்தால் கட்டடச் சான்றளிப்பு முறை குறித்துக் கேள்வி எழுப்புவது அவசரமாக முடிவுக்கு வருவதை போன்றது என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறி இருக்கிறார். சான்றளிப்பு முறையைச் சந்தே கிப்பதற்குத் தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறி னார். “ஒட்டுமொத்த சான்றளிப்பு முறையிலும் குறைபாடு இருக்கி றதா என இந்தக் கட்டத்தில் முடிவுக்கு வருவது பற்றி கவன மாக இருக்கவேண்டும்.

இடிந்து விழுந்த மேம்பாலச் சாலை: விசாரணை தொடர்கிறது

தீவு விரைவுச்சாலையில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலச் சாலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை தொடர்வதாகப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார். விசாரணை குறித்து பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா உறுப்பினர் டென்னிஸ் டான் லிம் ஃபோங் கேள்வி எழுப்பியிருந்தார். “விசாரணை தொடர்கிறது. விசாரணை நிறைவுபெற்றதும் கண்டுபிடிப்புகள் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பி வைக்கப்படும்,” என்று அமைச்சர் கோ தெரிவித்தார்.

Pages