You are here

சிங்க‌ப்பூர்

பூனை மரணம்: 18 மாத கண்காணிப்பில் ஆடவர்

யீ‌ஷூன் ரிங் ரோட்டில் இருக்கும் ஒரு புளோக்கின் 13வது மாடியி லிருந்து பூனை ஒன்றைக் கீழே தூக்கிப்போட்டு அதற்கு மரணம் ஏற்படுத்திய 41 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவர் நேற்று 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். வீ வாய் லியோங் என்ற அந்த ஆடவருக்கு அறிவுமந்த குறை பாடு உண்டு என்று தெரிகிறது. விலங்குவதை குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அந்தப் பூனை சத்தம் போட்டதற்காகவும் அது ஒரு தடவை அந்த ஆடவரின் வீட்டுக் குள் நுழைந்துவிட்டது என்பதற் காகவும் அந்தப் பூனையை மாடியிலிருந்து அவர் தூக்கிப் போட்டுவிட்டார் என்று சமூக நீதி மன்ற விசாரணையில் தெரிவிக் கப்பட்டது.

அமைச்சரின் மருத்துவச் செலவு: மன்னிப்புக் கேட்டது இணையத்தளம்

சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் போன்ற அமைச் சரவை சகாக்கள் அரசாங்க மருத் துவமனைகளிலும் சீரமைக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் இலவச மாக ஏ=வகுப்பு சுகாதாரப் பரா மரிப்பைப் பெறுவதற்கு முழு உரிமைப் பெற்றிருக்கிறார்கள் என்று சமூக, அரசியல் இணைத் தளமான டிஆர் எமேரிட்டஸ் TR Emeritus (TRE) தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய் என்றும் அது தவறான வழிக்காட்டக்கூடிய ஒன்று என்றும் அரசாங்கம் நேற்றுக் குறிப்பிட்டது.

‘திட்டு’ வாங்கியவருக்கு வேலை தர முதலாளிகள் நாட்டம்

ஜூரோங் ஈஸ்ட் கடைத் தொகுதியில் இருக்கும் ஜெம் என்ற உணவு நிலையத்தில் சாப்பிடப்போன ஒரு மாது தான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவசரம் அவசரமாக சாப்பாட்டு மேஜையை அங்கிருந்த ஊழியர் ஒருவர் சுத்தப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்து அந்த ஊழியரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டார்.
திருவாட்டி ஃபெங் என்று தெரியவந்த அந்த 37 வயது மாது தான் திட்டியதற்காக பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அந்த மாதிடம் திட்டு வாங்கிய பிங் லை ஹெங் என்ற 64 வயது ஊழியருக்கு காதும் கேட்காது. அவரால் பேசவும் முடியாது.
அவர் அந்த உணவு நிலையத் தில் ஓராண்டு காலமாக துப்புர வாளராக வேலை செய்துவரு கிறார்.

கடற்பாலத்தில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கார்

கடற்பாலத்தில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கார்

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் நேற்று அதிகாலையில் ஜோகூர் கடற்பாலத்தில் விபத்துக் குள்ளானது. அதிகாலை 4.30 மணிக்கு விபத்துக்குள்ளான கார் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந் ததால் சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடைப்பட்ட ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்புக்குள் ளானது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் நேற்று தெரிவித்தது. வெள்ளை நிறத்திலான நான்கு கதவுகள் கொண்ட காரை 30 வயதுகளில் உள்ள ஆடவர் ஒரு வர் ஓட்டி வந்தார் என்றும் அச் செய்தி குறிப்பிட்டது.

இம்மாதம் 26ம் தேதி செந்தோசா ‘அண்டர் வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்’ மூடப்படுகிறது

இம்மாதம் 26ம் தேதி செந்தோசா ‘அண்டர் வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்’ மூடப்படுகிறது

இன்னும் இரண்டு ஆண்டுகளில் குத்தகைக் காலம் முடிவடைய இருப்பதால் செந்தோசாவில் செயல்பட்டு வரும் ‘அண்டர் வாட்டர் வேர்ல்ட் சிங்கப்பூர்’ இம் மாதம் 26ஆம் தேதி தன் கதவு களை மூடவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அருகி வரும் கடல்வாழ் உயி ரினங்களான இளஞ்சிவப்பு டால் பின்கள், நீர் நாய் போன்றவை சீனாவில் உள்ள ‘சைம்லாங் ஓஷன் கிங்டத்திற்கு’ மாற்றப்பட விருப்பதாக இதனை நிர்வகித்து வரும் ‘ஹாவ் பார்’ நிறுவனம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாக ரயில் சேவைதொடங்குதல்

ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாக ரயில் சேவைதொடங்குதல்

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் ஓடும் ரயில்களில் பராமரிப்புப் பணிகளையும் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகளையும் மேற் கொள்ளும் பொருட்டு, டிசம்பர் 18ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமத மாகத் தொடங்குதல் நேற்றுக் காலை அமலுக்கு வந்தது.

5 மாதங்களில் 16 சன்னல்கள் விழுந்தன

5 மாதங்களில் 16 சன்னல்கள் விழுந்தன

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சன்னல் கள் கழன்றுவிழுந்த 16 சம்பவங் கள் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டு களாகவே குறைந்துவந்துள்ளது என்றாலும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சன்னல்களைக் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது இடைவிடாமல் தொடர்ந்து பராமரித்து வரவேண் டும் என்று ஆலோசனை கூறப்பட் டிருக்கிறது.

கினபாலு நிலநடுக்க பேரிடரில் இறந்தோருக்கு நினைவஞ்சலி

கினபாலு நிலநடுக்க பேரிடரில்  இறந்தோருக்கு நினைவஞ்சலி

மலேசியாவின் கினபாலு மலையில் சென்ற ஆண்டு நிகழ்ந்த நில நடுக்கத்தில் பலியானவர்களுக்கு தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியில் நேற்றுக் காலை 7.15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த இயற்கைப் பேரிடரில் மாண்டவர்களின், உயிர் பிழைத்த வர்களின் குடும்பத்தினரும் ஆசிரி யர்களும் செராயா ரோட்டில் இருக் கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் கூடி மௌன அஞ்சலி செலுத்தி னார்கள். மலேசியாவின் மவுண்ட் கினபாலு மலையில் நிலநடுக்கம் நிகழ்ந்து சரியாக நேற்று ஓராண்டு ஆனது. பலியானவர்களுக்கு அந்தப் பள்ளியில் நேற்று பிரத்தி யேகமாக 10 நிமிடம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

Pages