You are here

சிங்க‌ப்பூர்

‘சிறுபான்மையினர் அதிபராக அழுத்தமான செயல்பாடு தேவை’

முன்னாள் அமைச்சர் எஸ் தனபாலன்

மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் தேர்தல் முறையில் சிறுபான்மை யினருக்குப் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிப்படுத்த உத் தேசிக்கப்படும் மாற்றங்களில் ஏதாவது ஒரு வகையில் அழுத்த மான நடவடிக்கை தேவை என்று முன்னாள் அமைச்சர் எஸ் தனபாலன் கருத்து தெரிவித்து உள்ளார். மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் தேர்தல் முறைக்கு உத் தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அரசமைப்புச் சட்ட ஆணையம் நடத்திவரும் கருத்தறிதல் கூட்டங் களில் கடைசிக் கூட்டம் நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந் தது. அதில் திரு தனபாலன் தனது கருத்துகளை -முன்வைத்தார்.

சிராங்கூன் ரோடு உணவுக்கடையில் திருட்டு

சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவுக்கடை ஒன்றில் கன்ன மிட்டு $450 திருடியதாகக் கூறப் பட்டதன் பேரில் 22 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக்கிறார். அந்த உணவகத்தில் கன்ன மிடப்பட்டு திருடப்பட்டதாக மே 5ஆம் தேதி அதிகாலை 1.08 மணிக்குப் போலிசுக்குத் தகவல் வந்தது. போலிஸ் உடனே அந்தச் சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டது. அதேநாளன்று அவர் லியாங் சியா ஸ்திரீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது. சந்தேக நபர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு இரண்டு முதல் 14 ஆண்டு வரைப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

தேர்தல் சட்டத்தை மீறியதாக புகார்

தி மிடில் கிரவுண்ட் (TMG) என்ற இணையச் செய்தித்தளம் நாடாளு மன்றத் தேர்தல் சட்டத்தை மீறி விட்டதாகக் கருதப்பட்டதை அடுத்து அந்தத் தளத்துக்கு எதி ராக போலிசில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் அந்தப் புகாரைத் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையம் நேற்று பிற்பகல் 12.40 மணிக் குக் கொடுத்தது. “பிபி பிபி: புக்கிட் பாத்தோக்கில் 50 வாக்காளர் கள்” என்ற அந்த இணையத்தளச் செய்தியை பிற்பகல் 3.30 மணிக்குள் அகற்றும்படி அந்தத் தளத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமைச்சர் லிம்: தேர்ச்சி, உறுதி, இதயம் காரணமாக வேலை, நல்ல சம்பளம்

மக்களின் தேர்ச்சி, உறுதி, இதயம் ஆகியவை காரணமாக சிங்கப் பூரில் வேலையின்மை விகிதம் குறைவாக இருக்கிறது என்றும் கட்டிக்காக்கக்கூடிய சம்பளம் நடப்பில் உள்ளது என்றும் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். மாணவர்கள் இதே உணர்வைக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலை, தேர்ச்சி, வேலை நியமனம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலக அணி ஒன்று இருக்குமானால் சிங்கப்பூர் அதில் முன்னணியில் இருக்கும் என்றார்.

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா: அதிக பட்டப்படிப்புக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையில் புதிய உடன்பாடு கையெழுத்தாகி இருக்கிறது. இதன் பலனாக இரு நாடுகளின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த அதிக பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப் படும். இவற்றில் முக்கியமாக ஆஸ்திரேலியாவின் பத்து பல்கலைக்கழகங்கள் அளிக்கும் ஜூரிஸ் டாக்டர் (JD) பட்டங்கள் அடங்கும். இதேபோல் சிங்கப்பூர் பல் கலைக்கழகங்களைச் சேர்ந்த இளநிலை பட்டப்படிப்புகளையும் ஜூரிஸ் டாக்டர் சட்டப் பட்டப் படிப்புகளையும் ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

புதிய ‘மைஇன்ஃபோ’ சேவை

புதிய ‘மைஇன்ஃபோ’ சேவை

அரசாங்க அமைப்புகளின் இணை யச் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு இனி கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுதான் நேற்று அறிமுகம் கண்ட ‘மைஇன்ஃபோ’ சேவை. இதன் மூலம் அரசாங்க அமைப்புகளின் சேவைகளுக்கான இணையப் படிவத்தை மக்கள் சிர மம் இல்லாமல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

தர்மன்: மக்கள் நலனுக்காகப் பாடுபடும் செயல் வீரர் முரளிதரன்

திரு முரளிதரன் பிள்ளையை நேற்றுக் காலை நேருக்கு நேர் சந்தித்த குடியிருப்பாளர் ஒருவர் அவரைக் கட்டி அணைத்து தமது ஆதரவைத் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஒன்பது நாட்களாக புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களை இத்தொகுதியின் பல்வேறு இடங் களிலும் அவர்களின் வீடுகளிலும் சந்தித்துப் பேசி, அவர்களின் பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொண்டுள் ளேன் என்று கூறினார் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர் தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை.

டாக்டர் சீ: முழு மனதுடன் உங்களுக்காக முழுநேர எம்.பி. ஆக செயல்படுவேன்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான்

புக்கிட் பாத்தோக் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் முழுநேர பணியில் ஈடுபடுவார் என்றும் வீடமைப்பும், சமூக திட்டங்கள் எனக் குடியிருப்பாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயல்வார் என்றும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் கூறினார்.

138 ஆசிரியர்களுக்கு பயிற்சி மேம்பாடு

பாலர்பள்ளி ஆசி­ரி­யர்­களின் தொழில் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் அவர்கள் பெரிய பொறுப்­பு­களை வகிக்­க­வும் வழி செய்­யக்­கூ­டிய விதத்­தில் கடந்த ஆண்டு அறி­ மு­கம் கண்ட புதிய திட்­டத்­தில் பங்­கேற்­க­வி­ருக்­கும் முதல் குழுவைச் சேர்ந்த 138 ஆசி­ரி­யர்­கள் நேற்று நிய­ம­னம் பெற்­ற­னர். இந்த நிபு­ணத்­துவ மேம்பாட்­டுத் திட்­டத்­தில் பங்­கேற்­க­ இ­ருக்­கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடும் மூன்றாண்டுகளில் $12,000 வரை ரொக்கம் வழங்­கு­வற்­காக ஆரம்ப­கால குழந்தைப்­ ப­ருவ மேம்பாட்டு வாரியம் $1.7 மில்­லி­யனை ஒதுக்­கி­யுள்­ளது.

Pages