You are here

சிங்க‌ப்பூர்

இவ்வட்டாரம் முழுவதும் தெரிந்த சூரிய கிரகணம்

சூரியக் கிரகணத்தைக் காண சிங்கப்பூர் அறிவியல் நிலையத்திற்குத் திரண்ட மக்கள்.

கண்கள் வானையே உற்றுநோக்க பலர் கைகளில் கேமராக்களுடன் சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றைய சூரிய கிரகணத்தைக் காண தீவின் பல இடங்களில் ஆவலுடன் படையெடுத்தனர். பல புகைப்பட ஆர்வலர்கள் பல மணி நேரத்திற்கு முன்னதாகவே தங்கள் கேமராக்களை வான் நோக்கி தயாராக வைத்துக் கொண்டனர். சிலர் தங்கள் கண்களை நேரடி சூரியக் கதிர்களிலிருந்து காத்துக் கொள்ள சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர். சிலர் எக்ஸ்=ரே தாட்களைக் கூடப் பயன்படுத்தினர். சிங்கப்பூரில் காலை 7.20க்குத் சூரிய கிரகணம் தொடங்கியது. மெல்ல மெல்ல சூரியனை விழுங்கியது சந்திரன்.

சாங்கியில் முன்கூட்டியே பாதுகாப்புச் சோதனை முடிக்க புதிய வசதி

சாங்கி விமான நிலையத்தில் உள்ள புதிய முறை, 10ல் எட்டுப் பயணிகள் முன்கூட்டியே பரிசோதனையை முடிக்க வசதியளிக்கிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்குக் கிளம்புவோரில் பத்தில் எட்டு பயணிகள் தற்போது விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே பாதுகாப்புச் சோதனைகளை முடிக்க முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முனையம் 2, 3 ஆகியவற்றில் பொது சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முனையம் 1ல் முன் கூட்டியே பாதுகாப்புச் சோதனையை முடிக்கும் வசதி உள்ளது.

பணிப்பெண் முகவை தர உயர்வுக்கு புதிய முறைகள்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

இல்லப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் பணிப்பெண் முகவைகளைத் தரவரிசைப் படுத்தும் நோக்குடன் அவற்றுக்குப் புதிய மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு அறிமுகப் படுத்த உள்ளது. மேலும், அந்த முகவைகளை வாடிக்கையாளர் மதிப்பீடு செய்வதும் அறிமுகம் காண உள்ளது. இதற்கான அறிவிப்புகள் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகவை கருத்தரங்கில் வெளியிடப் பட்டன. இவை அறிமுகம் செய்யப் படுவதற்கான நோக்கம் பணிப் பெண் முகவைகளின் தரத்தையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத் துவதே என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜோகூருக்குச் செல்ல மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு தானியக்க வசதி

ஜோகூரை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் சாலை.

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குக் கூடியவிரைவில் ஜோகூர் பாருவுக்குள் செல்வதும் அங்கிருந்து வெளியாவதும் சுலபமாக்கப்படவுள்ளது. ஜோகூர் பாலம், இரண்டாம் இணைப்பு ஆகிய இடங்களில் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்குத் தானியக்க குடிநுழைவு சோதனை முறையை அறிமுகப்படுத்த மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜோகூர் பாலத்தில் 100 மோட்டார்சைக்கிள் தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் தடங்களும் இரண்டாம் இணைப்பில் இத்தகைய 50 தடங்களும் அமைக்கப்படும் என்று சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வீவக, தனியார் வீடுகளின் வாடகை பிப்ரவரியில் இறங்குமுகம்

வீவக, தனியார் வீடுகளின் வாடகை பிப்ரவரியில் இறங்குமுகம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக), தனியார் வீடுகளின் வாடகை தொடர்ந்து பிப்ரவரி மாதமும் இறங்குமுகமாக இருந்தது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வீவக வீடுகளின் வாடகை 0.9% குறைந்துள்ளது.

தேசிய தின அணிவகுப்பில் புதிய அங்கங்கள்

தேசிய தின அணிவகுப்பில் புதிய அங்கங்கள்

சிங்கப்பூரின் 51வது தேசிய நாள் அணிவகுப்பு புதிய பல அங்கங்களுடன் புத்தாக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆளில்லாத, ஒளியூட்டப்பட்ட விமானங்களின் காட்சி, முப்பரிணாம காட்சிகளுடன் கூரையில் இருந்து தரையிறங்கும் பெரிய காட்சியமைப்புகளும் கலைஞர்களும் வியக்க வைப்பர். பத்தாண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டு அரங்கில் இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு இடம் பெறுகிறது. எனவே, உள்ளரங்க வாண வேடிக்கையும் சிறப்பு அங்கமாக நடைபெறும்.

நான்கு குற்றச்சாட்டுகளில் அய் டகாகி குற்றவாளி

ஆஸ்திரேலியரான 23 வயது அய் டகாகியும் அவரது சிங்கப்பூர் கணவர் 27 வயது யாங் கைஹெங்கும்

செயலற்றுப் போயிருக்கும் ‘த ரியல் சிங்கப்பூர்’ என்ற சமூக அரசியல் இணையத்தளத்தின் முன்னைய ஆசிரியரான அய் டகாகி, கீழறுப்புச் சட்டத்தின்கீழ் 4 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியரான 23 வயது அய் டகாகி தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நேற்று ஒப்புக் கொண்டார். ஃபேஸ்புக் பக்கத்திலும் ‘த ரியல் சிங்கப்பூர்’ என்ற சிங்கப்பூர் செய்தித் தளத்திலும் ஆத்தி ரத்தைத் தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பேருந்துப் பயணிகளுக்கு முன்னுரிமை அதிகரிக்கிறது

இயு தோங் சென் ஸ்திரீட்டில் உள்ள பேருந்து தடம் சிவப்புக்கோடு மூலம் அடையாளம் இடப்பட்டு உள்ளது. கோப்புப் படம்

சிவப்புக் கோடு மூலம் அடையாள மிடப்பட்ட முழு நாள் பேருந்து தடங்களுக்கான நேரம் இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்படு கிறது. இது, தற்போதுள்ள இரவு 8.00 மணியிலிருந்து கூட்டப்படுகிறது. இந்த நடவடிக்கை மார்ச் 21ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்றுத் தெரிவித்தது. வார நாட்களிலும் சனிக்கிழமை களிலும் காலை 7.30 மணியி லிருந்து இரவு 8.00 மணி வரை தீவு முழுவதும் 23 கி. மீட்டர் நீளத்துக்கு பேருந்து தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவை அனைத்தும் நகரத்தின் மையத்தில் இடம்பெற்றுள்ள தாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

முன்கூட்டி விலைகளை நிர்ணயித்ததாக கோழி விநியோகிப்பு நிறுவனங்கள் மீது புகார்

முன்கூட்டி விலைகளை நிர்ணயித்ததாக கோழி விநியோகிப்பு நிறுவனங்கள் மீது புகார்

சிங்கப்பூரில் கோழி இறைச்சி விற்பனையில் 90 விழுக்காடுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தி வரும் 13 கோழி விநியோகிப்பு நிறுவனங் கள் மீது புதிய புகார் எழுந்துள்ளது. முன்கூட்டியே கூட்டாக விலை நிர்ணயித்த புகாரை அந்நிறு வனங்கள் எதிர்நோக்குகின்றன. இதன் தொடர்பில் 13 நிறு வனங்களுக்கு எதிராக உத்தேச விதிமீறல் உத்தரவை சிசிஎஸ் எனும் சிங்கப்பூர் போட்டித்திறன் ஆணையம் பிறப்பித்துள்ளது. காரணங்களுடன் வெளி யிடப்பட்ட எழுத்துபூர்வமான அறிவிப்பில் 13 கோழி நிறுவனங் களும் விலை உயர்த்துவதில் ஒருங்கிணைந்து ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகமானோருக்கு முதல், 2ஆம் நிலை ‘ஹானர்ஸ்’ பட்டம்

 சிங்கப்­­­பூர் தேசியப் பல்­­­கலைக்­­­க­­­ழக சட்டத் துறைத் தலைவர் பேரா­­­சி­­­ரி­­­யர் சைமன் செஸ்­­­டெர்­­­மேன்

சிங்கப்­­­பூர் தேசியப் பல்­­­கலைக்­­­க­­­ழ­­­கத்­­­தின் சட்டப் பள்ளி வழங்­­­கும் முதல்­­­நிலை ‘ஹானர்ஸ்’ பட்­­­டத்­­­திற்­­­குத் தகு­­­தி­­­பெ­­­றும் மாண­­­வர்­­­களின் எண்­­­ணிக்கை ஐந்து விழுக்­­­காட்­­­டி­­­லி­­­ருந்து 10 விழுக்­­­கா­­­டாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்­­­தாண்­­­டு­­­களில் எடுக்­­­கப்­­­பட்­­­டுள்ள இந்த முக்­­­கி­­­ய­­­மான கொள்கைச் சீராய்வு முடிவு இவ்­­­வாண்டு ஜூன் மாதத்­­­தில் பட்டம் பெறும் மாண­­­வர்­­­களுக்கு முதன் ­­­மு­­­த­­­லாக அமல்­­­படுத்­­­தப்­­­படும்.

Pages