You are here

சிங்க‌ப்பூர்

ஜூன் பிற்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த மாதம் இரண்டாம் பாதியில் அதிக மழை பெய்யக்கூடும். காற்றும் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இதனை அறிவித்தது. ஐந்து முதல் ஏழு நாட்களில் பகல் நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக காலையில் பின்நேரத் திலும் பிற்பகலிலும் கொஞ்ச நேரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று இந்த வாரியம் கூறியது. பரவலான இடியுடன் கூடிய மழை எப்பொழுதாவது காற்றுடன் சேர்ந்து 1 முதல் 2 நாட்களில் அதிகாலை நேரத்திலும் காலை நேரத்திலும் பெய்யக்கூடும்.

தொழிற்சாலையில் தீ

தொழிற்சாலையில் தீ

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றுக் காலை மூண்ட தீயைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. எண் 6 ஜூகூன் சர்க்கிள் முகவரியில் அதிகாலை 5.40 மணிக்குத் தீ மூண்டதாக இந்தப் படை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது. தீ 400 சதுரமீட்டர் பரப்புள்ள இடத்தை ஆக்கிரமித்தது. இந்தப் படையினர் அந்த வட்டாரத்தைச் சூழ்ந்து கொண்டு எட்டு தண்ணீர் பீச்சு வண்டிகளுடன் தீயைக் கட்டுப்படுத்தினர். 90 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பொறியாளருக்கு $4,000 அபராதம்

செனாங் கிரசெண்டில் தொழில் துறைக் கட்டடத்தில் தண்ணீர்ச் சேவைச் சாதனங்களைப் பொருத் தும் பணியை மேற்பார்வையிட தவறியதற்காக நிபுணத்துவப் பொறியாளரான யிங் கீ இயோவ் என்பவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. செனாங் கிரசெண்டில் ‘பிஸ்ஹப்’ என்ற தொழில்துறைக் கட்டடத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் சோதனை நடத்தியதாகவும் அக் கட்டடத்தின் அடித்தளத்தில் கீழ்நிலை தண்ணீர்த் தொட்டிக்கு மேலே கழிவுநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுத் தெரிவித்தது.

அங் மோ கியோவில் ‘டிபி’ பரிசோதனை

அங் மோ கியோ அவென்யூ 3 புளோக் 203ல் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு காசநோய் (டிபி) பரிசோதனை அளிக்க முன்வந்துள்ளது. அந்த புளோக்கில் உள்ள அறுவருக்கு காசநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் ஆனால் அவர்களின் நோய் ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாதது என்றும் அமைச்சு விளக்கியது. இலவசமாக அளிக்கப்படும்

அமைச்சு விளக்கம்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட புகைமூட்ட நெருக் கடிக்கு காரணமான இந்தோனீ சிய காட்டுத் தீயுடன் தொடர் புடைய நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் மேற்கொண்ட நடவடிக்கையானது சுயாதிபத்திய உரிமைப் பிரச்சினையோ தேசிய கௌரவப் பிரச்சினையோ அல்ல என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் எல்லை கடந்த காற்றுத் தூய்மைக்கேட்டை உண்டாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே எல்லை கடந்த காட்டு தூய்மைக் கேடு சட்டத்தின் நோக்கம் என்று அமைச்சு விளக்கியது.

கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து

கரப்பான் பூச்சியால் 4 கடைகளின் உரிமம் இடைக்கால ரத்து

சிராங்கூன் ‘நெக்ஸ்’ கடைத் தொகுதியில் செயல்படும் ‘புராட்டா வாலா’ கடையின் உரிமம் இரண்டு வார காலத்திற்கு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதால் ஜூன் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 4ஆம் தேதி வரை உரிமம் ரத்து செய்யப்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியத் தின் இணையப்பக்கத்தில் வெளி யிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது. அந்த புராட்டா வாலா கடை, கடந்த 12 மாதங்களில் 12 குற்றப் புள்ளிகளைப் பெற்றது. கரப்பான் பூச்சிகள் இல்லாமல் கடையைப் பராமரிக்கத் தவறியதற் காக மட்டும் அது ஆறு குற்றப் புள்ளிகளைப் பெற்றிருந்தது.

கா. சண்முகம்: அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும்

கா. சண்முகம்: அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும்

உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான கா. சண்முகம், இன, சமய, பாலின வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரசாங் கம் பாதுகாக்கும் என்று அறுதி யிட்டுக் கூறியிருக்கிறார். கதீஜா பள்ளிவாசலும் சமய மறுவாழ்வுக் குழுவும் நேற்று ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்ச் சியில் பங்கேற்ற அவர் அமெரிக் காவின் ஆர்லாண்டோ நகரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து கருத்துரைத்தார். “ஓரினக் காதலர்களை இலக்காகக் கொண்டு தாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவித அமைப்புக்கும் எதிராக எந்த வித வன்முறைகளையும் ஏற்க முடியாது.

அமைச்சர் கோ எச்சரிக்கை: போலி டுவிட்டர் கணக்கு

வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் கோ போ கூன்

வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் கோ போ கூன் தமது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலம் பொருட்கள் பிர பலப்படுத்தப்படுவதாக தெரிவித் துள்ளார். “என்னுடைய பெயரில் என்னு டைய விவரங்களையும் பயன் படுத்தி யாரோ ஒருவர் உருவாக் கிய டுவிட்டர் கணக்கு மூலம் சில பொருட்கள் பிரபலப்படுத்தப் படுவதைக் குறித்து அனை வரையும் எச்சரிக்க விரும்பு கிறேன்,” என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கோ நேற்று ஃபேஸ்புக் பதிவில் கூறி யிருந்தார். தமக்கு டுவிட்டர் கணக்கு இல்லை என்று கூறிய திரு கோ, காவல்துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழில் பட்டயப் படிப்பு

படம்: நீ ஆன் பலதுறைக்கல்லூரி

தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி (Diploma in Tamil Studies with Early Education)’ எனும் புதிய பட்டயக் கல்வியை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி 2017 ஏப்ரலில் அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூரில் பாலர் கல்வித் துறை விரிவடைந்து வரும் நிலை யிலும் பயிற்சி பெற்ற பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையிலும் இந்தப் புதிய முயற்சி இடம் பெறுகிறது. தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டு, பாலர் பள்ளி ஆசிரியர்களாக விரும்பும் மாண வர்கள் இந்தப் புதிய பட்டயப் படிப்பின் மூலம் தங்களது கனவை நனவாக்கும் சாத்தியம் உருவாகி இருக்கிறது.

ஆறு வாகன விபத்தில் பெண் பாதசாரி காயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரியும் அது மோதியதால் சேதமுற்ற கார்களும். படம்: வான்பாவ்

சிராங்கூன் ரோடு, டவுனர் ரோடு, பூன் கெங் ரோடு ஆகியவற்றின் சந்திப்பில் நேற்றுக் காலை 7.15 மணிக்கு நிகழ்ந்த ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் பாதசாரி ஒரு வர் காயமடைந்தார். சிராங்கூன் ரோட்டில் ஒரு டாக்சியும் ஒரு லாரியும் அவற்றின் கட்டுப்பாட்டை இழந்தன. சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த 20 வயதுகளில் இருந்த பெண் பாதசாரி ஒரு வரை டாக்சி மோதியது.

Pages