You are here

சிங்க‌ப்பூர்

ஏழு நாட்களில் 232 பேருக்கு டெங்கி

சிங்கப்பூரில் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்த ஒருவார காலத்தில் புதிதாக 232 பேருக்கு டெங்கி காய்ச்சல் கண்டது. இந்த எண் ணிக்கை அதற்கு முந்திய வார எண்ணிக்கையைவிட எட்டு அதிகமாகும். தேசிய சுற்றுப்புற வாரியத்தின் டெங்கி இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள ஆகப் புதிய புள்ளி விவரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. ஏப்ரல் 24 ஆம் தேதிக்கும் ஏப்ரல் 25 பிற்பகல் 3.30 மணிக்கும் இடையில் புதிதாக 34 பேருக்கு இந்தக் காய்ச் சல் ஏற்பட்டது.

உலகில் பாதிக்கும் மேலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு

உலகம் முழுவதும் பாதிக்கும் அதிகமான நிறுவனங்கள் வேலைகளைக் குறைக்கின்றன. அல்லது முடக்குகின்றன என்பது ஓர் ஆய்வில் தெரியவந்து இருக்கிறது. தொழில் வாய்ப்புகள் அவ்வளவு நன்றாக இருக்காது என்றே உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் கருதுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளைப் பார்க்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டைப் போல் மிகக் குறைந்த அளவுக்கு அவநம் பிக்கை இருந்தது இல்லை. கணக்குத் தணிக்கை நிறுவனங் கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

கொத்தடிமைகளான அதிமுக வேட்பாளர்கள்: ஸ்டாலின் விமர்சனம்

நெல்லை: மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். களியக்காவிளையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக வேட்பாள ர்களை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொத்தடிமைகளைப் போல் நடத்துவதாக விமர்சித்தார். “சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார் ஜெயலலிதா. ஏராளமான மதுக் கடைகளை சொல்லாமல் திறந்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்டுள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,” என்றார் ஸ்டாலின்.

பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை

தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை ‘டைப் 2’ வகை நீரிழிவு நோய் ஏற்­படு­வதற்­கான கார­ணத்தை அறிய மிகப்­பெ­ரிய ஆய்வை மேற்­கொள்ள உள்ளது. இந்த ஆய்வில் பங்­கேற்க 2,300 பேர் தேவைப்­படு­கின்ற­னர். அவர்­கள் நீரிழிவு நோய் இல்­லா­த­வர்­க­ளாக அல்லது நீரி­ழி­வுக்கு முந்திய நிலைமை உள்­ள­வர்­க­ளாக அல்லது ரத்­தத்­தில் சற்றுக் கூடு­த­லான சர்க்­கரை உள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவர்­கள் கேள்­வி­களுக்­குப் பதில் அளிக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு காலத்­துக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வேண்டும்.

இடைத்தேர்தல்: பிரசார விதிமுறைகள்

மே மாதம் 7ஆம் தேதி நடை பெறவுள்ள புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் தொடர்பான விதி முறைகளை போலிசார் நேற்று அறிவித்தனர். இதன்படி, தேர்தல் கூட்டங் களை உள்ளரங்குகளிலும் வெளிப் புற இடங்களிலும் வியாழக் கிழமையிலிருந்து மே மாதம் 5ஆம் தேதிவரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை நடத்தலாம். அத்துடன், ஒலிபெருக்கிகள் பொருத்திய வாகனங்களை நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 முதல் இரவு 10.00 வரையிலும் வியாழக் கிழமை முதல் மே 5ஆம் தேதி வரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 வரையிலும் பயன் படுத்தலாம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்

இந்­தோ­னீ­சியக் கடற்­ப­கு­தி­யில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்­பூ­ர­ரான 27 வயது குமாரி நியோ க்யூ பிங் வெரா அங்கு உயி­ரி­ழந்­தார். ஞாயிறு அன்று இந்­தோ­னீ­சி­யா­வின் கொமொ­டு­வின் வட­ கிழக்­கி­லுள்ள கிலி லாவா என்ற இடத்­தில் முக்­கு­ளிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. தொடர்ந்து அவரைத் தேடும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது. அவரது உடல் முக்­கு­ளிப்­புப் பகு­தி­யில் நேற்றுக் காலை 10.55 மணி அளவில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய தேடல், மீட்பு முகவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி யது. அவரது உடல் தற்போது இந்­தோ­னீ­சி­யா­வின் சிலோம் மருத்­து­வ­மனை­யில் உள்ளது.

போதைப் புழக்கம்: வலுவடையும் கல்வி முயற்சி

போதைப்பித்து கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பார்வையிடுகிறார் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின்.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘ஹெல்த்ஸே„ன்’ கண்காட்சிக்கு வருவோர் இப்போது அங்கு வைக் கப்பட்டிருக்கும் புதிய கூடத்தில் போதைப் பொருள் புழக்கம், பசை முகர்தல் போன்றவற்றால் ஏற்படும் கடும் தீமைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும். சுகாதார மேம்பாட்டு வாரிய அரங்கில் நேற்று நடைபெற்ற மத் திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் (சிஎன்பி) பணித் திட்டக் கருத்தரங்குக்குப் பிறகு ‘போதைப் பித்து கூடம்’ எனும் மேம்படுத்தப் பட்ட புதிய பிரிவை அங்கு திறந்து வைத்தார் சிறப்பு விருந்தினராக வந்திருந்த உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின்.

மருமகளைக் கொன்ற 82 வயது ஆடவருக்கு எட்டு ஆண்டு சிறை

மருமகளைக் கொன்ற 82 வயது ஆடவருக்கு எட்டு ஆண்டு சிறை

தமது 54 வயது மருகளை அவரது தெம்பனிஸ் வீட்டில் கொலை செய்த மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 82 வயது ஆடவருக்கு எட்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சார் சின் ஃபா (படம்) எனும் பெயருடைய அந்த ஆடவர் திருவாட்டி ஓங் குவாட் லெங் எனும் தமது மருமகளைக் கத்தியால் தொடர்ச்சியாகக் குத்தியதை ஒப்புக் கொண்டார். இது நோக்கமில்லாமல் மரணம் விளைவித்ததாக வகைப்படுத்தப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் பிரச்சினை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்

பயண உறுதி முகப்புக் கூடத் துக்கு மேலே ஆடவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். படம்: ஷாலட் கோர்டே

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் நேற் றுக் காலை ஆடவர் ஒருவர் பிரச் சினை கொடுத்து விட்டார். அங்குள்ள பயண உறுதி முகப்புக் கூடத்தில் மேல் ஏறிக் கொண்டு அவர் கீழே இறங்கி வர மறுத்தார். மேலும் அவரை நெருங்க முயன்ற போலிஸ் அதிகாரிகளிடம் அடிப்பது போல அவர் குடையை அசைத்துக் காட்டியதுடன் தமது சட்டையையும் கழற்றி விட்டார் என்று ‌ஷின் மின் நாளிதழ் தெரி வித்தது.

கிரேஸ் ஃபூ: உன்னதமான இன, சமய நல்லிணக்கமே சிங்கப்பூரின் சொத்து

உலக அரங்கில் நம்மைத் தனித் துவமிக்க நாடாக எடுத்துரைப்பது நாம் அரும்பாடுபட்டு கட்டிக்காத்து வரும் இன, சமய நல்லிணக்கம் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது சிங்கப்பூரர்களின் ஒற்றுமை யும் இன, சமய நல்லிணக்கமும் மேலும் மிளிர்ந்தன என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். சிங்கப்பூர் தாவோயிசச் சங்கத் தின் ஏற்பாட்டில் நேற்று கோவன் ஹப்பில் நடைபெற்ற 9வது நல்லி ணக்க விளையாட்டுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஃபூ, “சிங்கப்பூரில் ஒருவர் தனது சம யத்தை எவ்விதத் தடையுமின்றி பின்பற்றலாம்.

Pages