சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் உள்ள அடுக்குமாடி வீடுகளிலிருந்து சன்னல்கள் கீழே விழுந்து உடையும் சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளன. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் வரை அத்தகைய 35 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 19 சம்பவங்கள் சன்னல் சட்டங்களால் ஏற்பட்டவை.
‘ஆட்டிசம்’ உள்ள ஒன்பது வயது சிறுவனுக்குக் கல்வி, நடத்தை சார்ந்த சிகிச்சை அளித்து வந்தவருக்கு, சிறுவனைக் காயப்படுத்திய குற்றத்துக்காக மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆசிய அளவில் வெளிநாட்டினர் குடும்பத்தோடு வசிக்கவும் வேலை செய்யவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தேர்வாகியுள்ளது.
உடற்குறையுள்ளோரும்,சமூகத்தில் வாழும் மற்ற மக்களைப் போலவே ஒரு சிறந்த நோக்கமுள்ள வாழ்க்கையை வாழவேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனர் என 2023ஆம் ஆண்டுக்கான ‘கோ சோக் தோங் எனெபில்’ விருது வழங்கும் விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.
வயதான தாயாரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்த மகனுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.