You are here

சிங்க‌ப்பூர்

இளம் இந்தியர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ‘டிமென்‌ஷியா’

தேசிய நரம்பியல் மருத்துவக் கழகத்தின் இணைப் பேராசிரியர் நாகேந்திரன் கந்தையா (இடது)

வில்சன் சைலஸ்

இளம் இந்தியர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ‘டிமென்‌ஷியா கேட்ட கேள்விக்குப் பதில் கொடுத்த பிறகும் சில விநாடிக ளுக்குள் அதே கேள்வியைத் திரும்பக் கேட்பார் 60 வயது திருமதி ஜெனிஃபர் லோ. தொடக் கத்தில் அவரது மகன் திரு ஜோ‌ஷுவா லிம், 30, அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒரு சில ஆண்டு களுக்கு முன் நிர்வாகியாக வேலை செய்த அலுவலகத்தில் பத்திரங்கள் வைத்த இடத்தை திருமதி ஜெனிஃபர் மறந்துபோக உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார் அவர்.

சிங்கப்பூரில் பிறந்த யுவேத்ரா சிங்கப்பூரர் இல்லை

குமாரி யுவேத்ரா

சிங்கப்பூரில் பிறந்து, இங்கு வளர்ந்தும் 32 வயது குமாரி யுவேத்ரா செல்வநாயகம் என் பவருக்கு சிங்கப்பூர் குடியுரிமை இல்லை. இவர் சிங்கப்பூரின் அன்றைய கண்டாங் கிர்பாவ் மருத்துவ மனையில் பிறந்தவர். பள்ளி நாட்களில் தேசிய பற்றுறு-தியை வாசித்து சிங்கப்பூர் தேசிய கீதத்தை பாடியவரின் அடையாள அட்டையில் அவர் நாடற்றவர், அதாவது ‘ஸ்டேட்லஸ்’, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய தாயாரான திருமதி செல்வராணி ராம்பிரசாத் என்ற 51 வயது மாது சிங்கப்பூர் மலேசிய கூட்டரசில் சேர்ந்து பின்னர் பிரிந்த 1963லிருந்து 1965ஆம் காலகட்டத்தில் பிறந்த தால் அவரும் நாடற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

புக்கிட் பாத்தோக் கால்வாய் புதுப் பொலிவு

புக்கிட் பாத்தோக் கால்வாய் புதுப் பொலிவு

புக்­கிட் பாத்­தோக் கால்­வா­யில் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் துடிப்­பான, அழ­கான, தெளிந்த நீர்­நிலையை நேற்று சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சின் மூத்த துணை அமைச்­ச­ர் டாக்­டர் ஏமி கோர் அதி­கா­ர­பூர்­வ­மாக திறந்து வைத்­தார். இதன்­மு­லம் புக்­கிட் பாத்­தோக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் நீர்­நிலை ஓரங்களில் அழ­கிய ஓவி­யங்கள், அங்கு அமர்ந்து இயற்கையை ரசிக்க மர இருக்கை­கள் ஆகி­ய­வற்­­­றுடன் கண்­ணுக்­குக் குளிர்ச்சி தரும் நீர்த்தோட்டங்கள் போன்ற வற்றை தங்களுக்கு அரு­காமை­யி­லேயே பெற்­றுள்­ள­னர்.

‘ஒருங்கிணைந்து புற்றுநோயை விரட்டுவோம்’

படம்: புற்று நோய் விழிப்புணர்வு முகாம் ஏற்பாட்டாளர்கள்

புற்றுநோய் பற்றி விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­தும் வகை­யில் பிப்­ர­வரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தின­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­படு­கிறது. அது தொடர்­பாக உல­கம் முழு­தும் இந்த மாதம் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் சோதனை முகாம்­களும் நடத்­தப்­படு­கின்றன. அவ்­வகை­யில் சிங்கப்­பூ­ரில் நேற்று தோ பாயோ வீவக மையத்­தில் புற்­று­நோய் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­ நடை­பெற்­றது. இந் நிகழ்ச்­சி­யில் ஏரா­ள­மா­னோர் கலந்துகொண்ட­னர்.

மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்திய ‘பிஐஓ’ அட்டை செல்லாது

தமிழவேல்

இந்தியாவுக்கான ‘பிஐஓ’ எனப்படும் இந்திய வம்சாவளியினர் விசா அட்டை மார்ச் மாதத்திற்குப் பிறகு செல்லாது. தற்போது ‘பிஐஓ’ அட்டை வைத்திருப்போரை ‘ஓசிஐ’ எனப் படும் வெளிநாடுவாழ் இந்தியர் விசா அட்டைக்கு மாறும்படி சிங்கப்பூர் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘பிஐஓ’ விசா அட்டை வைத்திருப்போர் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்குச் செல்ல வழக்கமான இந் திய பயண விசா பெறவேண்டும். அல்லது புதிதாக ‘ஓசிஐ’ விசா அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அதற்கான கட்டணம் கிட்டத்தட்ட $330.

பொறியில் சிக்கிய நாய் மீட்பு

பொறியில் சிக்கிய நாய் மீட்பு

லிம் சூ காங் பகுதியில் வைக் கப்பட்டிருந்த இரும்புக் கம்பிப் பொறியில் தெரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டதில் அதன் முதுகெலும்பு முறியக்கூடிய அளவுக்குப் பலத்த காயம் ஏற் பட்டது என்று ‘ஆக்ஷன் ஃபோர் சிங்கப்பூர் டாக்ஸ்’ (ஏஎஸ்டி) எனும் அமைப்பு தனது ஃபேஸ் புக் பக்கத்தில் கூறியது. லிம் சூ காங் லேனிலுள்ள ‘அடோப்ஷன் அண்ட் ரெஸ்க்யூ’ நிலையத்துக்கு அருகில் பிப்ர வரி 7ஆம் தேதி இந்த நாய் முதலில் காணப்பட்டது. பின்னர் தொண்டர்களும் சுயேச்சை மீட் பாளர்களும் அந்த நாயை பிப்ர வரி 12ஆம் தேதி ஒரு கட்டடத் துக்குப் பின்னால் கண்டு பிடித்தனர்.

நாடாளுமன்றம் செல்ல தனலட்சுமிக்கு வாய்ப்பு

தொழிற்­சங்க­வா­தி­யான 50 வயது கே.தன­லட்­சு­மி

நீண்ட­நாள் தொழிற்­சங்க­வா­தி­யான 50 வயது கே.தன­லட்­சு­மியை நியமன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தேசிய தொழிற்­சங்க காங்கிரஸ் முன்­மொ­ழிந்­துள்­ளது. தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை­யின் மூத்த துணை நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் இவர், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் மத்திய குழு, சுகாதாரப் பரா­ம­ரிப்புச் சேவை ஊழி­யர்­கள் சங்கம் ஆகி­ய­வற்­றின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­ பி­ன­ராக உள்ளார்.

விபத்து: சிடிஇ-யில் மோசமான போக்குவரத்து நெரிசல்

விபத்து: சிடிஇ-யில் மோசமான போக்குவரத்து நெரிசல்

மத்திய விரைவுச்சாலையில் கேர்ன்ஹில் சுரங்கப்பாதைக்கு முன்பு நேற்றுக் காலை பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்ததால் அங்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புக்கிட் தீமா நுழைவாயிலுக்குப் பிறகு இந்த விபத்து நேர்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்றுக் காலை 9.50 மணி அளவில் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. தடம் 1, 2 ஆகியவற்றைத் தவிர்க்கும்படி அது வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டது.

தேசிய நடைப் பயிற்சி சவாலில் களமிறங்கும் மாணவர்கள்

Rep with steps எனப்படும் நடைப் பயிற்சிப் போட்டி

Rep with steps எனப்படும் நடைப் பயிற்சிப் போட்டியில் 27 உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளைச் சேர்ந்த 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கெடுக்கின்றனர். இந்தப் போட்டி நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த நடைப் பயிற்சியில் பங்கேற்க சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படும் Rep with Steps போட்டி மூலம் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இந்தப் போட்டியில் தீவு முழுவதிலும் ஏறத்தாழ 156,000 பேர் பங்கெடுத்துள்ளனர்.

Pages