You are here

சிங்க‌ப்பூர்

பொய்ச் செய்திகள் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைப்பு

வேண்டுமென்றே இணையத்தில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளால் சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்பட லாம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்ச ரித்துள்ளார். இணையம் வழியாக வேண்டு மென்றே பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதற்கான காரணங் களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்வதற் காக ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நேற்று அவர் முன்மொழிந்தார். விவாதத்திற்குப் பின் நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்றத் தில் இருந்த 80 உறுப்பினர்களும் சிறப்புக் குழு அமைப்பதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக் களித்தனர்.

$2 மில்லியன் எரிபொருள் திருட்டு; 11 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

படம்: ‌ஷின் மின்

ஷெல் சிங்கப்பூர் நிறுவனத்தில் $2 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள எரிபொருளைக் கையாடியதன் தொடர்பில் நேற்று 11 ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கைது செய்யப்பட்ட 17 சந்தேக நபர்களில் ஒரு பகுதி யினர் அவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்பது பேர் அந்நிறுவனத்தின் தயாரிப்புத்தளத்தில் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப் பட்டது.

பாலர் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் அமைச்சர் விளக்கம்

கோப்புப்படம்.

பாலர் கல்வித்துறையில் கல்வி அமைச்சு பெரும்பங்கு வகிப்பதால், பாலர் கல்வித் தரத்தை உயர்த்து வதற்கான திட்டங்கள், பள்ளி களில் பிள்ளைகளைச் சேர்க்கும் நடைமுறை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்விகளை முன்வைத்தனர். தொடக்கப்பள்ளிகள் இயங்கும் வளாகத்திலேயே இயங்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி மாணவர் களுக்கு அந்தத் தொடக்கப் பள்ளியில் சேருவதற்கு முன் னுரிமை அளிப்பது பற்றி ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா கேள்வி எழுப்பினார்.

சேம் டான்: மருத்துவப் பிரச்சினைகளால் வேலையில் பாரபட்சம் அதிகமில்லை

மருத்துவப் பிரச்சினை இருக்கும் ஊழியர்களுக்கு எதிராக முதலா ளிகள் பாரபட்சமாக அதிகம் நடந்துகொள்வதில்லை என மனிதவள அமைச்சின் புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் நியாயமற்ற வேலை நடைமுறை களின் தொடர்பில் மனிதவள அமைச்சு, நியாயமான, மேம்பட்ட வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி (டஃபெப்) ஆகியவற்றால் விசாரிக்கப்பட்ட 2,100 புகார்களில் மூன்று மட்டுமே மருத்துவப் பிரச்சினை இருக்கும் ஊழியர்கள் தொடர் பானவை என மனிதவள துணை அமைச்சர் சேம் டான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டம் மட்டும் போதாது; சமூகத்துக்கும் பங்குண்டு - அமைச்சர் டெஸ்மண்ட் லீ

அறிவுத் திறன் குறைபாடுடைய திருவாட்டி ஆன்னி யீ தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு பின் பரிதாப கரமாக மரணமடைந்ததைக் குறிப் பிட்டு, சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றவர் களைக் கண்காணிப்பதற்கான முக்கியத்துவம் குறைந்திருப்ப தாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ (படம்) கூறினார்.

குற்றவியல் தண்டனைச் சட்ட மறுஆய்வு இவ்வாண்டு முடிவடையும்

குற்றவியல் தண்டனைச் சட்ட மறுஆய்வின் தொடர்பில் பொது மக்கள் கூடிய விரைவில் கருத்து களைத் தெரிவிக்கலாம். இந்த மறுஆய்வு இவ்வாண்டு முடி வடையவுள்ளது. தற்கொலை முயற்சியைக் குற்ற மாக்கும் சட்டம், திருமண வாழ்க்கையில் பாலியல் பலாத் காரத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டம், பாலியல் குற்றவாளிகளுக் கான தண்டனை, புதிய குற்றவியல் சட்டங்களுக்கான தேவை போன் றவை மறுஆய்வில் பரிசீலிக்கப்படு வதாக உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா.சண்முகம் நேற்று கூறினார். மறுஆய்வை மேற் கொள்ள 2016 ஜூலை மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானத்தின் கதவு சேதம்

சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் விமானம் ஒன்றில் பராம ரிப்புப் பணி நடந்துகொண்டிருந்த போது அந்த விமானத்தின் கதவு சேதம் அடைந்துவிட்டது. ஸ்கூட் நிறுவனத்தின் 787 விமானத்தில் ஒரு கதவு சேதம் அடைந்துவிட்டதாகவும் அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் திங் கட்கிழமை இந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறியதாக சேனல் நியூஸ் ஏ‌ஷியா தெரிவித்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாக ஃபிளைட் குளோபல் என்ற விமானப் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் இச்சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் ஸ்கூட் தெரிவித்தது.

குமாரி இந்திராணி: ஊழலை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது

ஊழல் விவகாரத்தில் சிக்கிய கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனம், அமெரிக்க, பிரேசில் மற்றும் சிங்கப்பூர் அதி காரிகளுடன் சமரசம் செய்து கொண்டது. சிங்கப்பூர் சட்டத் தின்படி மட்டும் அந்த விவகாரம் கையாளப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய தீர்வை எட்டியிருக்க முடியாது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரர்களோ அல்லது சிங்கப்பூர் நிறுவனங்களோ வெளி நாடுகளில் ஊழலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத் தருளாது என்ற அமைச்சர், சிங்கப்பூரர்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கி நடப் பார்கள் என்று எதிர்பார்ப்பதாக வும் கூறினார்.

சண்முகம்: சமய சகிப்புத்தன்மைக்கு எதிராகப் பேசினால் வெளிநாட்டுப் போதகர்களுக்கு தடை விதிக்கப்படும்

குறிப்பிட்ட சில சமய போதகர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது ஏன் என்பதில் சிங்கப்பூர் தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளு மன்றத்தில் கூறியுள்ளார். சமய சகிப்புத்தன்மைக்கு எதி ரான போதனையைப் போதிப்பவர் களும் அல்லது சமய அடிப்படையில் சமூகத்தில் பிரிவினையை உரு வாக்குவோரும் தடை செய்யப்படு வர் என்று அவர் விவரித்தார்.

Pages